முதலீட்டை பிரித்து வைப்பது நல்லது தான், அதற்காக ஊரில் உள்ள எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளையும் வாங்கி உங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்ப்பது புத்திசாலித்தனம் அல்ல. அதிக ஃபண்டுகள் இருந்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நினைப்பது, முதலீட்டு உலகில் பலர் செய்யும் ஒரு மாயையான தவறு.
உண்மையில் ஒரு போர்ட்ஃபோலியோவில் அதிகமான மியூச்சுவல் ஃபண்டுகளை வைத்திருப்பது, உங்கள் லாபத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மெல்ல மெல்ல அரித்துவிடும். ஒரு கட்டத்தில் நீங்கள் ஒரு இன்டெக்ஸ் ஃபண்டிற்கு கிடைக்க வேண்டிய ரிட்டர்ன்ஸை விட குறைவான லாபத்தையே பெறுவீர்கள். இது வெறும் முதலீடு அல்ல, உங்கள் உழைப்பின் லாபத்தை நீங்களே நீர்த்துப்போகச் செய்யும் ஒரு செயல். ஏன் அதிகப்படியான பண்டுகள் ஆபத்தானது? ஓவர் டைவர்சிஃபிகேஷன் உங்கள் பணத்தை எப்படி முடக்குகிறது? லாபத்தை பாதிக்காமல் உங்கள் போர்ட்ஃபோலியோவை எப்படி மாற்றுவது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

இன்றைய இளம் முதலீட்டாளர்கள் வெகுவிரைவில் கோடீஸ்வரர் ஆக வேண்டும். நிறைய வருமானம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஒரே நேரத்தில் பல வகையான எஸ்ஐபி-களில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் அதிகப்படியான திட்டங்களை வைத்திருப்பது போர்ட்போலியோ ஓவர் லேப் என்ற சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆக நீங்கள் உங்கள் செல்வத்தை திறம்படச் சேர்க்க வேண்டுமானால், சரியான குறிப்பிட்ட திட்டங்களை தேர்ந்தெடுத்து கலவையாக வைத்திருக்க வேண்டும். அதோடு நீங்கள் எந்த நோக்கத்திற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதில் தெளிவு பெறுவது அவசியம். அதாவது குறுகிய கால இலக்கா அல்லது நீண்ட கால இலக்கா என்பதை திட்டமிட்டு அதற்கு ஏற்ற முதலீடு செய்தல் அவசியம்.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
ஒரு போர்ட்ஃபோலியோவில் 15 ஃபண்டுகளில் தலா 1000 ரூபாய் முதலீடு செய்வதை விட, சிறந்த 4 ஃபண்டுகளை தேர்வு செய்து, 3000 ரூபாய் வீதம் முதலீடு செய்தாலே போதுமானது. நீங்கள் பல ஃபண்டுகளை போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்கிறோம் என்று நினைக்கலாம். அந்த ஃபண்டுகள் குறிப்பிட்ட ஒரே மாதிரியான பங்குகளை மட்டும் வைத்திருந்தால் என்ன செய்வது? அதோடு உங்களுடைய ஒவ்வொரு இலக்கிற்கு ஏற்ப, ஒரு ஃபண்டை தேர்வு செய்வது அவசியம். அவசர தேவை எனில் குறுகிய கால ஃபண்டுகளும், கல்வி, வீடு, திருமணம் போன்றவற்றிற்கு என நீண்ட கால அடிப்படையில் சரியான ஃபண்டுகளை தேர்வு செய்வதும் அவசியம்.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
உதாரணத்திற்கு 30 வயதான ஒருவர் 2020ம் ஆண்டு தனது முதலீட்டு பயணத்தை தொடங்கி உள்ளார் என வைத்துக் கொள்வோம். அடுத்த 15 ஆண்டுகளில் அவர் இலக்கு 1 கோடி ரூபாய் என உள்ளது. தற்போது 13,200 ரூபாயை எஸ்ஐபி ஆக செய்கிறார். ஆனால் அவரின் போர்ட்ஃபோலியோவில் 13 ஃபண்டுகளை வைத்திருக்கிறார். அதோடு அவசர தேவைக்காக 3 லட்சம் ரூபாய் முதலீட்டை லம்ப்சம் முதலீட்டில், குறுகிய கால முதலீடாகவும் வைத்துள்ளார்.
13,000 ரூபாய் முதலீட்டை 13 ஃபண்டுகளில் பிரித்தால் 1000 ரூபாய் மட்டுமே முதலீடு செய்திருக்க முடியும். இது பெரிய அளவில் லாபம் தராது. அதிக ஃபண்டுகளை வைத்திருந்தாலும், அவரின் பெரும்பாலான ஃபண்டுகள் ஒரே மாதிரியான பங்குகளையே வைத்துள்ளன. இதனால் ஒட்டுமொத்த முதலீடும் ஒரே இடத்தில் குவிப்பது போன்று தான்.
10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?
நிபுணர்கள் குறுகிய கால முதலீடாக செய்திருக்கும் 3 லட்சம் ரூபாய் தொகையை முழுக்க ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனெனில் ஒன்று முதல் 3 ஆண்டுகள் சந்தை ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். ஆக அதற்கு பதிலாக பிளெக்ஸி கேப் ஃபண்டுகளை தேர்வு செய்யலாம். அசெட் அலோகேஷன் ஃபண்டுகளை தேர்வு செய்யலாம். அதோடு நீண்ட கால அடிப்படையில் செய்யப்பட்டிருக்கும் 13 ஃபண்டுகளும் ரிஸ்கான ஒன்று. இது போர்ட்ஃபோலியோவில் தரத்தை குறைக்கும். 4 - 6 ஃபண்டுகள் இருந்தால் கூட ஏற்கக் கூடியது. இது அவரின் 1 கோடி இலக்கை எட்ட போதுமானதாக இருக்கும். ஆக நீங்களும் இப்படியான போர்ட்ஃபோலியோவை வைத்திருந்தால், சரியான ஆலோசனையுடன் திட்டமிடல் நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications