இந்தியாவில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யும் ஒரே தவறு, தங்களுக்கு எது தேவை என்று தெரியாமல் ஏதோ ஒரு திட்டத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போடுவதுதான். நீங்கள் பணத்தை சேர்க்க நினைக்கிறீர்களா, ரிஸ்க்கை குறைக்க நினைக்கிறீர்களா அல்லது ஓய்வுக்கால வருமானம் தேடுகிறீர்களா? உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும், அதற்கு SIP, STP மற்றும் SWP ஆகிய மூன்றில் ஒன்று தான் சக்சஸ் ஃபார்முலா. ஆனால் இதில் எது உங்கள் பணத்திற்கு சரியான ரூட் என்று தெரியவில்லையா? எஸ்ஐபி, எஸ்டிபி, எஸ்டபள்யூபி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை.
அதில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்? எப்போது லாபத்தை மாற்ற வேண்டும்? எப்போது மாதம் ஒரு வருமானம் பெற வேண்டும்? என இந்த மூன்றையும் சரியாக பயன்படுத்த தெரிந்தால் மட்டுமே நீங்கள் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளராக இருக்க முடியும். ஆக உங்கள் நிதி சுதந்திரத்திற்கான வழி எது? அதை எப்படி பயன்படுத்துவது, உங்கள் பணத்தை உங்களுக்காக உழைக்க வைப்பது எப்படி? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நீங்கள் புதியவர்கள் எனில், நிச்சயம் இது குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் உண்மையில் இவை மூன்றும் உங்களுடைய நிதி பாதையை எளிதாக்கும் மூன்று சிறந்த அம்சங்கள் எனலாம். ஆனால் இம்மூன்று அம்சங்களும் வெவ்வேறு கால கட்டத்தில் தேவைப்படும் முக்கியமான அம்சங்கள். இதனடிப்படையில் உங்கள் செல்வத்தை கட்டமைக்கும் பாதையை மூன்று கட்டங்களாக பிரித்து கொள்ளலாம்.
நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?
கட்டம் 1: நீங்கள் பணியில் சேர்ந்த ஆரம்ப காலத்திலிருந்தே சிறு தொகையாக இருந்தாலும் அதை எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாம். இது உங்களை அறியாமலேயே உங்களிடையே ஒரு நிதி ஒழுக்கத்தை உருவாக்கும். ஒரு கட்டத்தில் எஸ்ஐபி மூலம் உங்களிடம் ஒரு பெரிய கார்ப்பஸ் தொகையானது சேரும். இது புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற திட்டம். அனைத்து தரப்பினரும் முதலீடு செய்ய ஏற்ற ஒன்று. தொடர்ந்து இதில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து செல்வது போல் செய்து கொள்ளலாம். இது மாதம் ஒரு முறையோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறை என எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் தேர்வு செய்யும் ஃபண்டை பொறுத்து ரிஸ்க் லெவல் இருக்கும்.
40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
கட்டம் 2: உங்களுக்கு திடீரென போனஸ் அல்லது சொத்து விற்பனை போன்ற ஒரு பெரிய தொகையானது கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை ஒரே நாளில் சந்தையில் முதலீடு செய்வது மிகவும் ரிஸ்க்கான ஒன்று. அப்போது எஸ்டிபி மூலம் அந்த தொகையை ஒரு லிக்விட் ஃபண்டில் வைத்து, அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஈக்விட்டி ஃபண்டிற்கு மாற்றலாம். இது சந்தையின் ஏற்ற இறக்கங்களில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாக்க உதவும். இதையும் நீங்கள் மாதம் அல்லது வாரம் எனும் விதமாக கூட, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்து கொள்ளலாம். இதில் ரிஸ்க் சற்று மிதமானது தான். ஏனெனில் ஏற்கனவே லிக்விட் போன்ற சற்று பாதுகாப்பான திட்டத்தில் இருந்து கிடைக்கும் தொகையை தான் இதில் முதலீடு செய்ய போகிறோம். இதில் ஒவ்வொரு பரிந்துரைக்கும் வரி உண்டு.
ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?
கட்டம் 3: நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும்போதோ அல்லது பெரிய தொகையை சேர்த்து முடித்த பிறகோ, அந்த பணத்தை அப்படியே வைத்திருப்பதில் பயன் இல்லை. அதை எஸ்டபள்யூபி மூலம் அந்த தொகையிலிருந்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை, உங்கள் வங்கி கணக்கிற்கு வரவு வைத்து கொள்ளலாம். அதேசமயம் மீதமுள்ள பணம் சந்தையில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது உங்களுடைய மொத்த உழைப்புக்கும் அறுவடை செய்யும் காலம். ஏற்கனவே இருக்கும் கார்ப்பஸ் மூலம் மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை வருமானம் பெறலாம். வருமானமும் அதிகரிக்கும். வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.
10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?
பலரும் நினைப்பது போல எஸ்ஐபி, எஸ்டிபி, எஸ்டபள்யூபி ஆகியவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அவை ஒரு முதலீட்டாளரின் நிதிப் பயணத்தின் மூன்று வெவ்வேறு படிக்கட்டுகள். இவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் போது தான் ஒரு முதலீட்டாளர் தனது நிதி இலக்குகளை தடையின்றி அடைய முடியும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications