இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் நல்ல ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தில் தான் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்கின்றனர். அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய பங்குகளை அதிகளவில் விற்று தள்ளினர்.
அமெரிக்க பத்திரங்கள் வருவாய் அதிகரிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் கடந்த மாதம் பல ஆயிரம் கோடிக்கு இந்திய பங்குகளை விற்பனை செய்தனர். குறிப்பாக நிதி சேவைகள் உள்பட 8 துறைகளின் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்துள்ளனர்.

நிதிச் சேவைகள், ஐ.டி., ஆயில் அண்ட் கேஸ், மின்சாரம், எஃப்.எம்.ஜி.சி., கட்டுமானம், நுகர்வோர் சாதனம் மற்றும் ஹெல்த்கேர் ஆகிய 8 துறைகளில் ரூ.28,933 கோடி மதிப்பிலான நிறுவன பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்பனை செய்தனர்.
நிதிச் சேவைகள்: அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த அக்டோபரில் இத்துறை பங்குகளை ரூ.11,804 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த செப்டம்பரில் இதே துறையில் தான் சுமார் ரூ.2,861 கோடி முதலீடு செய்து இருந்தனர். கடந்த அக்டோபரில் நிப்டி பைனான்சியல் சர்வீஸ் இன்டெக்ஸ் 3 சதவீதம் குறைந்தது.
ஐ.டி.: கடந்த செப்டம்பரில் ரூ.1,886 கோடி முதலீடு செய்து இருந்தனர். ஆனால் கடந்த மாதம் ரூ.3,262 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். கடந்த மாதம் நிப்டி ஐ.டி. இன்டெக்ஸ் சுமார் 4 சதவீதம் குறைந்தது.
ஆயில் அண்ட் கேஸ்: கடந்த அக்டோபரில் ரூ.3,013 கோடி மதிப்பிலான இத்துறை பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்பனை செய்தனர். முந்தைய செப்டம்பரில் ரூ.5,231 கோடிக்கு இத்துறை பங்குகளை விற்பனை செய்தனர்.
மின்சாரம்: கடந்த செப்டம்பரில் இத்துறை பங்குகளை ரூ.9,731 கோடி விற்று இருந்தனர். இருப்பினும் அக்டோபரில் ரூ.2,869 கோடிக்கு இத்துறை பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
எஃப்.எம்.ஜி.சி.: கடந்த மாதம் அன்னிய முதலீட்டாளர்கள் இத்துறை பங்குகளை ரூ.2,792 கோடிக்கு விற்பனை செய்து இருந்தனர். முந்தைய செப்டம்பரில் ரூ.1,791 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து இருந்தனர்.
கட்டுமானம்: அக்டோபரில் இந்த துறை பங்குகளை ரூ.2,750 கோடிக்கு விற்பனை செய்தனர். முந்தைய செப்டம்பர் மாதத்தில் ரூ.2,097 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்து இருந்தனர்.
நுகர்வோர் சாதனம்: அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த மாதம் இத்துறை பங்குகளை ரூ.1,362 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். முந்தைய மாதம் இத்துறை நிறுவன பங்குகளில் ரூ.115 கோடி முதலீடு செய்து இருந்தனர்.
ஹெல்த்கேர்: கடந்த அக்டோபரில் ஹெல்த்கேர் துறை பங்குகளை ரூ.1,081 கோடிக்கு விற்பனை செய்து இருந்தனர். முந்தைய செப்டம்பர் மாதத்தில் இத்துறையில் ரூ.277 கோடியை அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து இருந்தனர்.
கடந்த மாதம் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், அவர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்யும் போக்கு தொடர வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தியாளர் வி.கே.விஜயகுமார் கூறுகையில், அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை குறைய வாய்ப்புள்ளது, அவர்கள் பங்குகளை வாங்குபவர்கள் கூட இந்திய பங்குச் சந்தையின் ஏற்றத்தை அவர்கள் தவற விடமாட்டார்கள். முன்னணி வங்கி, வாகனம், பொறியியல் சாதனம், மிட் கேப் ஐ.டி., ரியல் எஸ்டேட் ஆகிய நன்றாக செயல்பட தயாராக உள்ளள என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications