ரத்தகளரியான பங்குச் சந்தை!20 லட்சம் கோடி காலி - முதலீட்டாளர்களின் லாப கனவு கலைந்தது எப்படி?

சில வாரங்களுக்கு முன்பு வரை லாபத்தின் உச்சத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தை, நடப்பு வாரத்தில் போர்க்களமாக மாறியுள்ளது. முதலீட்டாளர்களின் சேமிப்பு, உழைப்பு மற்றும் எதிர்கால கனவுகள் கண்முன்னே கரைந்து செல்வதை பார்த்து பலரும் நிலைகுலைந்து போயுள்ளனர். வெறும் சில நாட்களுக்குள் 20 லட்சம் கோடி ரூபாய் சந்தை முதலீட்டு மதிப்பை இழந்துள்ள இந்த சரிவு, வெறும் எண்களின் கணக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்கான குடும்பங்களின் நடுத்தர காலத் திட்டங்களை சிதைத்துள்ள ஒரு பெரும் பொருளாதார அதிர்ச்சி.

பெரும்பாலான இடங்களில் எல்லாம் சிவப்பு, எங்கு பார்த்தாலும் நஷ்டம். எதனால் நிகழ்ந்தது இந்த வீழ்ச்சி? இஸ்ரேல்-ஈரான் போர் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, மற்றும் தொடரும் அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம் என்று இத்தனை காரணங்கள் பின்னணியில் ஒளிந்திருக்கும் போது, சாமான்ய முதலீட்டாளனாகிய நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? கலக்கத்தை கடந்து, நிதானத்துடன் இந்த நெருக்கடியை எதிர்கொள்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

ரத்தகளரியான பங்குச் சந்தை!20 லட்சம் கோடி காலி - முதலீட்டாளர்களின் லாப கனவு கலைந்தது எப்படி?

தொடர்ந்து செல்லிங் அழுத்தத்தில் காணப்படும் சந்தையானது, வார இறுதி வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் 2%மும், நிஃப்டி 2% வீழ்ச்சியும் கண்டுள்ளன. சென்செக்ஸ் 1471 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 74.563.92 புள்ளிகளாகவும், நிஃப்டி 488 புள்ளிகள் சரிந்து 23,151.10 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதனிடையே பிஎஸ்இ 150 மிட்கேப் குறியீடானது 2.61% சரிவிலும், பிஎஸ்இ 250 ஸ்மால் கேப் குறியீடானது 2.67% வீழ்ச்சியையும் கண்டுள்ளன.

தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவில் உள்ள சந்தை, நடப்பு வாரத்தில் மட்டும் 5.5% அல்லது 4,355 புள்ளிகள் சரிந்துள்ளது. நிஃப்டி 1,300 புள்ளிகள் அல்லது 5.3% சரிவைக் கண்டுள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் 20 லட்சம் கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளனர். கடந்த மார்ச் 6 அன்று 450 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பிஎஸ்இ நிறுவனங்களின் சந்தை மூலதனம், இன்றைய வர்த்தக முடிவில் 430 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?
இந்த வீழ்ச்சியானது அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரானிடையெ நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில், எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலையே காணப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பயத்தில் தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர். அதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ஹார்மூஸ் ஜலசந்தியில் நிறுத்தப்பட்டுள்ள போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. இது அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியாவின் பொருளாதாரத்தை எந்த அளவுக்கு பதம் பார்க்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இப்போரில் பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ள நிலையிலும், ஈரானும் அமெரிக்காவும் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டும், எச்சரித்துமே வருகின்றனர். இதுவரையில் சமாதானம் என்ற பேச்சு வார்த்தைக்கே இடமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஆக இன்னும் சிறிது காலத்திற்கு இந்த பதற்றம் நீட்டிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது ஏற்கனவே 100 டாலரை தாண்டியுள்ளது. இது மேற்கொண்டு இன்னும் அதிகரிக்கும் என நிபுணர்களும் எச்சரித்து வருகின்றனர். இதனிடையே இந்திய பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
SIP vs STP vs SWP:சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? முதலீட்டாளர்களின் சக்சஸ் எது?
கச்சா எண்ணெய் விலையேற்றம் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும். அது ரூபாய் மதிப்பு மேலும் சரியவும் காரணமாக அமையலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கவும் காரணமாக அமையலாம். இது போன்ற பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தான் அன்னிய முதலீடுகளும் வெளியேறி வருகின்றன. இனி வரும் வாரங்களில் இந்த போக்கு நீட்டிக்கலாம் என்ற அச்சமே நிலவி வருகிறது. ஆக சிறு முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது அவசியம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+