ஏமாற்றம் தந்த பங்குச்சந்தை..!! சென்செக்ஸ், நிஃப்டி திடீர் சரிவு..!! முதலீட்டாளர்கள் குழப்பம்..!!

தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று திடீரென சரிவை சந்தித்தன. வார இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையான இன்று காலை வர்த்தகத்தில் இந்திய பங்குசந்தை கடும் விற்பனை அழுத்தத்தை எதிர்கொண்டது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 84,093 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் படிப்படியாக , 83,466 புள்ளிகள் வரை சரிவை கண்டது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி குறியீடு 25,700 புள்ளிகளுக்கு கீழே வீழ்ந்தது. ஐடி மற்றும் வங்கி துறை பங்குகளின் கடும் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம்.

ஏமாற்றம் தந்த பங்குச்சந்தை..!! சென்செக்ஸ், நிஃப்டி திடீர் சரிவு..!! முதலீட்டாளர்கள் குழப்பம்..!!

ஐடி பங்குகள் இன்று மிக பெரிய இழப்பை சந்தித்தன. காலை சுமார் 11:22 மணியளவில் நிஃப்டி ஐடி குறியீடு 1.55% சரிந்தது. நிஃப்டி 50 பங்குகளில் மிக மோசமாக செயல்பட்ட பங்காக டிசிஎஸ் இருந்தது,. ஒரே நாளில் 2.48% வீழ்ச்சியடைந்தது. ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் 2.26% மற்றும் இன்ஃபோசிஸ் 2.09% என சரிந்தன.பங்குச்சந்தையில் ஐடி துறைக்கு அதிக வெயிட்டேஜ் உள்ளதால், இத்துறையின் பலவீனம் பிரதான குறியீடுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது முதலீட்டாளர்களின் மற்றொரு முக்கிய கவலையாக அமைந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 0.56% உயர்ந்து 97.11 டாலர்கள் என்ற அளவில் வர்த்தகமானது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 3.08% உயர்ந்து பேரலுக்கு 86.26 டாலராக இருந்தது.

Also Read

இந்தியா கச்சா எண்ணெயை அதிகம் சார்ந்துள்ளதால் அதன் விலை உயர்வு நாட்டின் இறக்குமதி செலவை அதிகரித்து பணவீக்கத்திற்கு அழுத்தம் தரும். மேலும், எரிபொருள் மற்றும் பெட்ரோலிய அடிப்படையிலான மூலப்பொருட்களை நம்பியுள்ள நிறுவனங்களின் செலவுகளையும் இது உயர்த்தக்கூடும் என்பதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கினர்.

Recommended For You

அடுத்ததாக வங்கி மற்றும் நிதி துறை பங்குகளும் குறைந்து வர்த்தகமானதால், பிரதான குறியீடுகளின் சரிவு மேலும் அதிகரித்தது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் பணவியல் கொள்கை முடிவுகளுக்காகவும் முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். வட்டி விகிதங்களின் போக்கு, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த சிக்னல்கள் வந்த உடன் முதலீட்டை மேற்கொள்ளலாம் என காத்திருப்பதாக கூறும் நிபுணர்கள் இதுவும் சந்தை இறக்கத்திற்கு காரணம் என்கின்றனர்.

தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீட்டை தொடர்ந்தால் தான் இனி வரும் நாட்களில் ஏற்றத்தை காண முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்., புதிய முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கச்சா எண்ணெய் விலை, மத்திய கிழக்கு நிகழ்வுகள், வெளிநாட்டு முதலீடு வரத்து மற்றும் டிசம்பர் மாத ஃபெட் மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் ஆகியவற்றை பொறுத்து முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+