டெல்லி: சஹாரா நிறுவனத்தின் 24,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான இந்நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களை கைது செய்து டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான ஜாமீன் மனுவை பல முறை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் தற்போது மீண்டும் நிராகரித்தது.
இந்த ஜாமீன் மனுவுடன் சுப்ரதா ராய் தரப்பில் 21 முன் தேதியிட்ட காசோலைகள் மற்றும் 1,885 கோடி ரூபாய் 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கு முன் செலுத்துவதாக தெரிவித்தும் மனுவை நிராகரிப்பு செய்தது நீதிமன்றம்.
மார்ச் 4
சஹாரா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான சஹாரா ஹவுசிங் மற்றும் சஹாரா ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பேரில் கடனீட்டுப் பத்திரங்கள் கொண்டு முறைகேடாக பணம் திரட்டியதாகவும், பங்குதாரர்களுக்கு முறையாக பங்கிட்டுத் தொகை அளிக்காத காரணத்தினாலும் சுமார் 24000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ராய் மற்றும் இரு நிறுவன தலைவர்கள் மார்ச் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
ஜாமீன் நிபந்தனை
மேலும் மூவரும் ஜாமீன் பெற 5,000 கோடி ரூபாய் பணமாகவும், 5000 கோடி வங்கி உத்திரவாதமாகவும் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
நிதி திரட்டல்
இந்நிலையில் சஹாரா குழுமத்தின் ஜோத்பூரில் உள்ள சொத்துகளை விற்றதில் 77 கோடி ரூபாய் கிடைத்து, இதேபோல் இந்நிறுவனத்தின் ஹோட்டகளை அடமானம் வைத்து பாங்க் ஆஃப் சீனா 650 மில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. கூடுதலாக 400 மில்லியன் டாலர் நிறுவன முதலீடாகவும் கடன் அளித்துள்ளது.
1.8 இலட்சம் கோடி
மேலும் இந்நிறுவனத்திடம் 1.8 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக நிறுவனத்தின் கணக்குகள் மற்றும் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் 10,000 கோடி ரூபாய் திரட்ட இந்நிறுவனம் மூக்கால் அழுகிறது. கடந்த 10 மாதமாக இந்நிறுவனத்தின் தலைவர் ஜெயிலில் உள்ளார். பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல...
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications