மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மத்திய அரசின் தொழிற்துறை உற்பத்தி மற்றும் பணவீக்க தகவல்கள் வெளியீட்டின் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் வரை இன்று உயர்ந்தது.
மொத்த விலை பணவீக்கம்...
நாட்டின் மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து 10 மாதங்களாகச் சரிந்து ஆகஸ்ட் மாதமும் -4.95 சதவீதமாகச் சரிந்துள்ளது.
தொழிற்துறை உற்பத்தி
ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் உற்பத்தி, மூலதன சரக்குத் துறை மற்றும் தொழிற்துறை உற்பத்தி ஆகியவை 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு வெறும் 0.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் துவக்கம் முதலே உயர்வுடன் காணப்பட்ட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 246.49 புள்ளிகள் வரை உயர்ந்து கடந்த வாரச் சரிவை ஈடுசெய்தது.
சென்செக்ஸ் குறியீடு
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 246.49 புள்ளிகள் வரை உயர்ந்து 25,856.70 புள்ளிகள் வரை உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே வர்த்தகத் துவக்கத்தில் சில புள்ளிகளைச் சந்தை இழந்தாலும், 10.30 மணியளவில் தொடர்ந்து உயர்வு பாதையில் நிஃப்டி குறியீடு சென்றது. இதனால் வர்த்தக முடிவில் 82.95 புள்ளிகள் உயர்வில் 7,872.25 புள்ளிகள் வரை உயர்ந்து.
அமெரிக்கப் பெடரல் வங்கி
அரசு பத்திரங்களின் மீதான வட்டி உயர்வு குறித்த அமெரிக்கப் பெடரல் வங்கியின் முடிவுகளை எதிர்பார்த்த சர்வதேச பொருளாதாரச் சந்தைகளில் இன்று மந்தமான வர்த்தக நிலை உருவானது.


Click it and Unblock the Notifications