தொழிற்துறை உற்பத்தி குறியீடு 4.2% ஆக உயர்வு!

டெல்லி: ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் உற்பத்தி, மூலதன சரக்குத் துறை மற்றும் தொழிற்துறை உற்பத்தி ஆகியவை 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு வெறும் 0.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழிற்துறை உற்பத்தி குறியீடு 4.2% ஆக உயர்வு!

வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக் குறியீடு வெளியிடப்பட்டது, சந்தைக் கணிப்புகளின் படி இதன் அளவு 4.36 சதவீதமாகக் கணிக்கப்பட்ட நிலையில் 4.2 சதவீதமாகப் பதிவாகி சந்தையை ஏமாற்றியது.

தொழிற்துறை உற்பத்தி குறியீடு 4.2% ஆக உயர்வு!

நாட்டின் ஜிடிபி குறியீட்டுக்கு இணையாக இந்திய ஐஐபி குறியீடு உள்ளது, மேலும் மூலதன சரக்கு மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது எனப் பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் - ஜூலை மாதங்களில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 3.5 சதவீதமாக இருந்தது. கடந்த வருடம் இதன் அளவு 3.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+