ஒரேநாளில் 777 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!

மும்பை: மத்திய அரசின் 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 777 புள்ளிகள் வரை உயர்ந்தது.

ரயில்வே பட்ஜெட் 2016 | மத்திய பட்ஜெட் 2016

இந்த வாய்ப்பைப் பயன்படுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எஃப்எம்சிஜி, வங்கி, மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் மீது அதிகளவிலான முதலீடு செய்தனர்.

தங்கம் விலை | வெள்ளி விலை | வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை கடந்த 7 வருடத்தில் காணாத மிகப்பெரிய வர்த்தகத்தை அடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

இன்றைய வர்த்தகத்தில் மத்திய அரசின் 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை சிறப்பான வாய்ப்பாக அமைந்த நிலையில், இன்று முக்கியத் துறைகளில் பங்கு விற்பனை அதிகளவில் இருந்தது.

இதன் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் வழக்கத்திற்கு அதிகமாக முதலீடு செய்தனர்.

 

சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

ஐரோப்பிய மத்திய வங்கி இன்று தனது பொருளாதார ஆய்வுக்குக் கூட்டத்தைத் துவங்கியுள்ளதால் ஐரோப்பிய சந்தைகள் இன்று 1 சதவீதத்திற்கு அதிகமான உயர்வை அடைந்தது.

இது இந்திய சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளதால் ஐரோப்பிய சந்தை துவங்கிய உடன் சென்செக்ஸ் குறியீடு500 புள்ளிகள் என்ற நிலையைத் தாண்டி 700 புள்ளிகளுக்கும் அதிகமாக அளவிற்கு உயர்ந்தது.

 

பட்ஜெட் எதிரொலி

பட்ஜெட் எதிரொலி

இத்தகைய லாபகரமான சூழ்நிலையில் இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு நேற்று மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் அறிக்கை கூடுதல் பலத்தை அளித்தது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

மேலும் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை அறிவிப்புகளுக்குப் பின் ரிசர்வ் வங்கி அடுத்து வரும் நாணய மறுஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாக முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவும் இன்று பங்குச்சந்தையில் முதலீடு அதிகரித்தது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் நிலையான மற்றும் லாபகரமான வர்த்தகத்தைப் பெற்று வந்த சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 777.35 புள்ளிகள் உயர்வில் 23,779.35 புள்ளிகளை அடைந்தது.

நிஃப்டி

நிஃப்டி

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீட்டுக்குப் போட்டியாக நிஃப்டி குறியீடும் நிலையான வர்த்தகத்தைப் பெற்று 235.25 புள்ளிகள் உயர்ந்து 7,222.30 புள்ளிகளை அடைந்தது.

டாலர்

டாலர்

பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டு அளவுகள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசாவிற்கு அதிகமாக உயர்ந்து தற்போது 67.92 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+