மும்பை: 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நேற்று சந்தை முதலீட்டாளர்களை அதிகளவில் கவரவில்லை என்றாலும், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் துறைவாரியான வளர்ச்சி மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பிற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
ரயில்வே பட்ஜெட் 2016 | மத்திய பட்ஜெட் 2016
இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வைப் பெற்று சந்தையைக் கலக்கி வருகிறது.
ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பிற்கான அறிகுறிகள் மற்றும் பட்ஜெடில் அறிவிக்கப்பட்டுள்ள துறைவாரியான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை இந்திய சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சிறப்பான வர்த்தக்தை பெற்று 500 புள்ளிகளுக்கு அதிகமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் சென்செக்ஸ் குறியீடு 518.37 புள்ளிகள் உயர்வில் 23,520.37 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று 157.55 புள்ளிகள் உயர்வில் 7,144.60 புள்ளிகளை எட்டியுள்ளது.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு


Click it and Unblock the Notifications