ஆசிய, ஐரோப்பிய சந்தைகளால் கவிழ்ந்தது சென்செக்ஸ்.. சரிவில் தத்தளிக்கும் நிஃப்டி..!

மும்பை: ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பிற்காகக் காத்துக்கிடக்கும் இந்திய சந்தை முதலீட்டாளர்களால், குறைந்த அளவிலான வர்த்தக மட்டுமே பெற்றது மும்பை பங்குச்சந்தை. இதனுடன் லாப நோக்கில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்படுவதால் இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக மந்தமான வர்த்தகம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஆசிய, ஐரோப்பிய சந்தைகளில் நிலவிய குறைவான முதலீடு மற்றும் வர்த்தகத்தால் இந்திய பங்குச்சந்தை 170 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே சரிவுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்த நிலையில், ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சில புள்ளிகள் உயர்ந்தாலும் சரிவுடனே முடிந்தது இன்றைய வர்த்தகம்.

170 புள்ளிகள் சரிவு

170 புள்ளிகள் சரிவு

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 170.62 புள்ளிகள் சரிவில் 24,623.34 புள்ளிகளை எட்டிய வியாழக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போல் தொடர் சரிவைச் சந்தித்த நிஃப்டி குறியீடு 45.65 புள்ளிகள் சரிவில் 7,486.15 புள்ளிகளை அடைந்தது.

முக்கிய நிறுவனங்களின் நிலை

முக்கிய நிறுவனங்களின் நிலை

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவன பட்டியலில் எச்டிஎப்சி, ஏசியன் பெயின்ட், மாருதி ஆகிய நிறுவனங்கள் 1.40 சதலீதத்திற்கும் அதிகமான உயர்வை அடைந்தது.

அதேபோல் எல் அண்ட் டி, கெயில், இன்போசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2.22 சதவீதத்திற்கு அதிகமான சரிவை சந்தித்தது. இதில் பெல் நிறுவனம் அதிகபட்சமாக 3.07 சதவீதம் அளவிலான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களை ஏமாற்றியது.

 

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.03 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை

தங்கம் விலை

வியாழக்கிழமை நாணய சந்தையில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமிற்கு 24 ரூபாய் சரிந்து 2,969 ரூபாய்க்கும், 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22 ரூபாய் குறைந்து 2,775 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இன்றைய வெள்ளி விலை நிலவரத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாத காரணத்தினால் 1 கிலோ பார் வெள்ளி சென்னையில் 40,212 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விஜய் மல்லையா & கோ..!

விஜய் மல்லையா & கோ..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

 

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+