டெல்லி: இந்திய சந்தையில் ஏற்றுமதி அளவுகள் கடந்த 15 மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத் துவக்கத்திலேயே 110 புள்ளிகள் வரை சரிந்து சந்தையைப் பதம் பார்த்துள்ளது.
உள்நாட்டுத் தேவைகள் அதிகரித்துள்ள காரணத்தால் உற்பத்தி அளவுகள் அதிகரித்துள்ள இத்தகைய சூழ்நிலையிலும், பிப்ரவரி மாதம் ஏற்றுமதி அளவுகள் 5.66 சதவீதம் வரை குறைந்துள்ளது.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
5.66 சதவீதம் சரிவு..
சர்வதேச சந்தைகளில் குறைவான தேவைகள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் நிலவும் அதிகப்படியான தேவை காரணமாகப் பிப்ரவரி மாதம் நாட்டின் ஏற்றுமதி அளவுகள் 5.66 சதவீதம் சரிந்து 20.73 பில்லியன் டாலர் அளவில் குறைந்துள்ளது.
ஜனவரி மாதம் அதன் அளவு 21.98 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் பற்றாக்குறை
இந்நிலையில் ஏற்றுமதி அளவுகள் குறைந்த நிலையில், இறக்குமதி அளவுகளும் 5.03 சதவீதம் குறைந்து 27.28 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் தங்கம் மற்றும் உலோகத்தின் அதிகளவிலான இறக்குமதியின் காரணமாக இதன் அளவுகள் 28.72 பில்லியன் டாலராக இருந்தது.
இதனால் பிப்ரவரி மாத்தின் முடிவில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 6.54 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
முக்கிய நாடுகள்
2015ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அமெரிக்கா (10.35% சரிவு), ஐரோப்பா (7.62% சரிவு) மற்றும் சீனா (1.67% சரிவு) போன்ற முக்கிய நாடுகளின் ஏற்றுமதியும் அதிகளவில் குறைந்தது. இதை ஒப்பிடுகையில் இந்திய சந்தையின் அளவுகள் அனைத்தும் மிகவும் குறைவே. மேலும் வருடம் மாதங்களில் இதன் அளவு கண்டிப்பாக உயரும் என வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியில் 16 சதவீதம் சரிவு
2015-16ஆம் நிதியாண்டில் ஏப்ரல் -பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பு 238.41 பில்லியன் டாலர். 2014-15ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 310.33 பில்லியன் டாலர்.
எனவே 2015ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் சுமார் 16 சதவீதம் அளவிற்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.
முக்கியத் துறைகள்
2016ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதத்தில் நகைகள், மருந்து, பார்மா, கார்பெட், மற்றும் கைவினை பொருட்களின் ஏற்றுமதி அளவுகள் அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
புதன்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே சரிவுடன் துவங்கி 11.30 மணியளவில் 113.42 புள்ளிகள் சரிவில் 24,437.98 புள்ளிகளை அடைந்தது சென்செக்ஸ். நிஃப்டி குறியீட்டைப் பார்க்கும்போது 27.75 புள்ளிகள் குறைந்து 7,432.85 புள்ளிகளை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications