தபால் நிலையங்களில் தங்க காசுகள் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: இந்தியா முழுவதும் பறந்து விரிந்திருக்கும் தபால் நிலையங்களில் இனி ஸ்டாம்ப், ஸ்பீடு போஸ்ட் போன்ற சேவைகள் மட்டும் அல்லாமல் இனி தங்க காசுகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மெட்டல்ஸ் அண்ட் மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்னும் பொதுத்துறை நிறுவனமான எம்எம்டிசி, தபால் நிலையங்களில் தங்க நாணயங்களை விற்பனை, விளம்பரம், விநியோகம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் செய்ய உள்ளது.

எம்எம்டிசி  நிறுவனம்

எம்எம்டிசி நிறுவனம்

இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் நிறுவனத்தின் மூலம் தற்போது முக்கியக் தபால் நிலையங்கள் மற்றும் வங்கி கிளைகளுக்குத் தங்க நாணயங்களை விநியோகம் மற்றும் விற்பனை பணிகளைத் துவங்கியுள்ளது எம்எம்டிசி.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள்

எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள்

இந்நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செ் மத்திய அரசு எஸ்பிஐ, யூகோ வங்கி மற்றும் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றிலும் விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தங்க நாணயம்

தங்க நாணயம்

மத்திய அரசு வெளியிடு இந்தத் தங்க நாணயத்தில் ஒருபுறம் அசோக சக்கிரமும், மற்றொரு புறம் காந்தி அவர்களின் முகமும் பதிக்கப்பட்டு இருக்கும்.

16.2 சதவீத உயர்வு

16.2 சதவீத உயர்வு

2016ஆம் ஆண்டின் முதல் 3 மாதத்தில் தங்கத்தின் விலை மதிப்பு சுமார் 16.2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு தக்க சமயத்தைப் பார்த்து தனது தங்க காசு விற்பனையைத் துவங்கியுள்ளது.

1986 ஆம் ஆண்டுக்குப் பின் இப்போது தான் இத்தகை உயர்வைத் தங்கம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மும்பை மற்றும் கொல்கத்தா

மும்பை மற்றும் கொல்கத்தா

இத்திட்ட துவக்கத்தில் தங்க நாணயங்கள் மும்பையில் அச்சிடப்படுவதாகவும், பின்னாளில் இவை கொத்தாவிலும் அச்சிடப்படும் என எம்எம்டிசி நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தங்க நாணயங்கள் மற்றும் பார்கள்

தங்க நாணயங்கள் மற்றும் பார்கள்

தபால் நிலையங்களில் மக்களுக்கு ஏதுவாக 5 கிராம், 10 கிராம் காசுகள் மற்றும் 20 கிராம் பார்கள் 24 கேரட் 999 தூய தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

மோடி திட்டம்

மோடி திட்டம்

இந்நிலையில் எம்எம்டிசி நிறுவனத்திற்கு அரசின் தங்கள் நாணயமாக்கும் திட்டத்தின் (மோடி திட்டம்) கீழ் வரும் தங்கத்தையும் இப்புதிய திட்டத்தில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கிராஜூவிட்டி

கிராஜூவிட்டி என்றால் என்ன?

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகள்

இந்தியர்களைத் தொடர்ந்து வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன காரணம்..?இந்தியர்களைத் தொடர்ந்து வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன காரணம்..?

பான் கார்டு

பான் கார்டு

வெறும் 107 ரூபாயில் 'பான் கார்ட்'.. இண்டர்நெட் இணைப்பு இருந்தால் போதும்..!வெறும் 107 ரூபாயில் 'பான் கார்ட்'.. இண்டர்நெட் இணைப்பு இருந்தால் போதும்..!

ஆயுத பலம்

ஆயுத பலம்

பாகிஸ்தான் ஆயுத பலத்தை உயர்த்தும் 'அமெரிக்கா'.. இந்தியாவிற்கு வந்த புதிய பிரச்சனை..!பாகிஸ்தான் ஆயுத பலத்தை உயர்த்தும் 'அமெரிக்கா'.. இந்தியாவிற்கு வந்த புதிய பிரச்சனை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Indian gold coins may soon be available across the country through post office and leading banks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X