மும்பை: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் குழுமம், மேமென்ட் வங்கி சேவை அளிப்பதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை ரிசர்வ் வங்கியிடம் செவ்வாய்க்கிழமை பெற்றுள்ளது.
இதன் மூலம் நாட்டிலேயே முதல் பேமென்ட் வங்கியாக ஏர்டெல் எம் காமர்ஸ் சர்வீசஸ் லிமிடெட் திகழ்கிறது.
(தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 12% ஊதிய உயர்வு நிச்சயம்..!)
ரிசர்வ் வங்கி
இந்தியாவில் மேமென்ட் வங்கி சேவைகளை அளிக்க ரிசர்வ் வங்கி விண்ணப்பம் கோரியபோது, சுமார் 41 நிறுவனங்கள் மிகுந்த ஆர்வமுடன் முன்வந்தது.
இதில் ரிசர்வ் வங்கி வெறும் 11 வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்
இந்த 11 நிறுவனங்கள் பட்டியலில் வோடபோன், ரிலையன், ஆதித்தியா பிர்லா நுவோ, பேடிஎம், சன் பார்மா, சோழமண்டலம் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் பேமென்ட் வங்கிகளை அமைப்பதற்கான உரிமத்தை தட்டிச் சென்றது.
ஆனால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இறுதிக்கட்ட ஒப்புதலை பெற்ற முதல் நிறுவனம் ஏர்டெல் தான்.
போட்டி..
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் சேவை அறிமுகத்திற்கு முன்னே அனைத்து விதிமான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் ஏர்டெல் தற்போது முகேஷ் அம்பானிக்கு முன்னரே இறுதிக்கட்ட ஒப்புதலை பெற்றுள்ளது.
18 மாத கெடு..
கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதி பெற்ற 11 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி 18 மாதங்கள் கெடு விதித்திருக்கிறது. இக்காலகட்டத்திற்குள் பேமென்ட் வங்கி சேவை அளிப்பதற்கான அனைத்துப் பணிகளையும் அனுமதி பெற்ற நிறுவனங்கள் முடித்திருக்க வேண்டும், இல்லையெனில் உரிமம் ரத்துச் செய்யப்படும்.
தற்போதைய நிலையில் அனுமதி பெற்ற 11 நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இறுதிக்கட்ட ஒப்புதலை பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லை.
மஹிந்திரா - ஏர்டெல்
இந்நிலையில் நாட்டின் முதல் பேமென்ட் வங்கியான ஏர்டெல் எம் காமர்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் கோட்டாக் மஹிந்திரா வங்கி 19.9 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
ஏதற்கு இந்தக் கூட்டணி..? காரணம் இருக்குப் பாஸ்..
என்ன காரணம்..?
பொதுவாகப் பேமென்ட் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளிக்க முடியாது. இந்நிலையில் கூட்டணி நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கடன் சேவை அளிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் படி ஏர்டெல் எம் நிறுவனத்துடன் பங்கு கைப்பற்றுதல் மூலம் கோட்டாக் மஹிந்திரா வங்கி கூட்டணி வைத்துள்ளது.
விளக்கமும்.. வித்தியாசமும்..
சிறு வங்கிகள்
விஜய் மல்லையா
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications