பிரதமர் மோடியைக் காப்பாற்றிய திருப்பதி ஏழுமலையான்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வீடுகளில், கோவில்களில் முடங்கியுள்ள தங்கத்தை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் நாட்டில் தங்க இறக்குமதியை அதிகளவில் குறைக்க முடியும் என்று பிரதமர் வழிகாட்டுதலின் பெயரில் மத்திய அரசு அறிவிக்கப்பட்ட 3 தங்க வைப்பு நிதி திட்டம் மக்கள் வரும்பவில்லை என்றும், இத்திட்டம் தோல்வி அடைந்ததாகச் சந்தையில் கருத்து நிலவுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் மோடி அறிவித்த தங்க வைப்பு நிதி திட்டத்தில் 1,311 கிலோ தங்கத்தை டெப்பாசிட் செய்வதாக அறிவித்துள்ளது.

1,311 கிலோ தங்கம்

1,311 கிலோ தங்கம்

உலகிலேயே பெரும் பணக்கார கடவுளாகக் கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கப்படும் தங்கத்தின் அளவு பல டன்கள் இருக்கும்.

இதுவரை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற முக்கியப் பொதுத்துறை வங்கிகளில் வைக்கப்பட்ட தங்கத்தை முதல் முறையாக மோடி அறிவித்த தங்க வைப்பு நிதி திட்டத்தில் டெப்பாசிட் செய்யத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

 

பஞ்சாம் நேஷ்னல் பாங்க்

பஞ்சாம் நேஷ்னல் பாங்க்

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தபடி 1,311 கிலோ 0.995 தூய தங்கத்தைப் பஞ்சாம் நேஷ்னல் பாங்கில் பிரதமர் மோடி அறிவித்த தங்க நாணயமாக்கல் திட்டத்தில் வைப்பு வைக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

3 வருட காலம் வைக்கப்பட்டுள்ள இந்தத் தங்க வைப்புத் திட்டத்திற்குப் பஞ்சாம் நேஷ்னல் பாங்க் அதிகப்படியாக 1.75 சதவீக வட்டி அளிக்கப்படுவதால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவ்வங்கியைத் தேர்ந்தெடுத்தது என TTD அமைப்பின் நிர்வாகத் தலைவர் சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

பஞ்சாம் நேஷ்னல் பாங்கில் வைப்பு வைக்கப்பட்ட 1,311 கிலோ தங்கம் குறித்துத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

வருவாய்

வருவாய்

நடப்பு நிதியாண்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 2,600 கோடி ரூபாய் வரையிலான வருமான பெறும் எனச் சாம்பசிவ ராவ் தெரிவித்தார். இதில் 1,000 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் உண்டியல் மூலம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதர வருமானம்

இதர வருமானம்

இதில் 800 கோடி ரூபாய் வட்டி வருமானமாகும், டிக்கெட் மற்றும் பிரசாதம் விற்பனையின் மூலம் 600 கோடி ரூபாயும், பக்தர்களின் தலை முடியின் மூலம் 140 கோடி ரூபாய் அளவிலான வருமான கிடைக்கும் என TTD அமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பளம்

சம்பளம்

இந்நிலையில் மொத்த வருமானத்தில் 500 கோடி ரூபாய் ஊழியர்களின் சம்பளமாக அளிக்கப்பட உள்ளது எனவும் TTD அமைப்பு தெரிவித்துள்ளது.

மோடி அறிவித்த தங்க முத..." data-gal-src="http:///img/600x100/2016/04/20-1461144007-narendra-modi-14112013.jpg">
மோடி தோல்வியா..?

மோடி தோல்வியா..?

<strong>மோடி அறிவித்த தங்க முதலீட்டு திட்டம் தோல்வியா..?</strong>மோடி அறிவித்த தங்க முதலீட்டு திட்டம் தோல்வியா..?

<strong>மோடியின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் தோல்விக்கு இது தான் காரணம்..!</strong>மோடியின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் தோல்விக்கு இது தான் காரணம்..!

..." data-gal-src="http:///img/600x100/2016/04/20-1461144002-narendra-modi1.jpg">
அசத்தலான 9 திட்டம்

அசத்தலான 9 திட்டம்

<strong>2015ஆம் ஆண்டில் மோடி அரசு வெளியிட்ட அசத்தலான 9 திட்டங்கள்..!</strong>2015ஆம் ஆண்டில் மோடி அரசு வெளியிட்ட அசத்தலான 9 திட்டங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Tirupati Balaji temple management said it has deposited 1,311 kg of gold with a public sector bank under the Gold Monetisation Scheme and is negotiating for better terms for making more such deposits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X