மும்பை: ஒரு மாத சரிவை ஒரே நாளில் ஈடுசெய்தது சென்செக்ஸ் குறியீடு, புதன்கிழமை வர்த்தகம் துவக்கத்தின் முதலே உயர்வைச் சந்தித்த மும்பை பங்குச்சந்தை, ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் லாபகரமான சூழ்நிலையில் தொடர்ந்து உயர்வான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு ஓரே நாளில் 575.70 புள்ளிகள் அல்லது 2.28 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
ஜிடிபி கணிப்புகள்
2017ஆம் நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அளவுகள் 7.8 சதவீதமாக இருக்கும் எனச் சிட்டி குருப் தெரிவித்துள்ளது. இது கடந்த 6 காலாண்டுகளில் அதிகப்படியான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கன் ஸ்டான்லி
இன்றைய உயர்விற்கு முதல் காரணம் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்திய வர்த்தகச் சந்தையை ‘equalweight' என்ற நிலையில் இருந்து ‘overweight' என்ற தரத்திற்கு உயர்த்தியது தான்.
பருவமழை
நாட்டின் பருவமழையின் அளவு சராசரி அளவுகளை விடவும் அதிகமாக இருக்கும் எனத் தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைபெட் தெரிவித்துள்ளது. பருவமழை சிறப்பாக இருந்தால் நாட்டில் விவசாய உற்பத்திகளின் அளவு மிகவும் சிறப்பாக இருக்கும்.
எனவே ஸ்கைமெட் நிறுவனத்தின் கணிப்புகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை வளர்த்தது.
சீன சந்தை
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையின் லாபகரமான வர்த்தகம் சீன சந்தைக்குச் சாதகமாக அமைந்தது இதன் காரணமாகச் சீனா மற்றும் ஹாங்காங் சந்தை இன்று அதிகளவிலான வர்த்தகத்தை அடைந்தது. இதுவே இந்திய பங்குச்சந்தைக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தை
இன்றைய ஐரோப்பிய சந்தையின் வர்த்தகம் துவக்கம் முதலே லாபகரமான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது இதற்கு முக்கியக் காரணம், Novo Nordisk நிறுவனம் ஐரோப்பிய நாடுகளுக்குக் குறைவான விலையில் நீரிழிவு நோய்க்கான மருந்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்தையில் செப்பு உலோகத்தின் அதிகப்படியான விலை இந்நாட்டுச் சரங்கத்துறை நிறுவனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கடன் திட்டம்
மேலும் ஐரோப்பிய கண்டத்தில் கடனில் தத்தளிக்கும் கிரீஸ் நாட்டிற்குச் சர்வதேச சந்தையிடம் இருந்து 10.3 பில்லியன் யூரோ தொகையைக் கடனாக அளிக்க 11 ஐரோப்பிய நிதியமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இது ஐரோப்பிய சந்தையின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை லாபகரமான நிலைக்குத் தள்ளியது.
ஈரான்
மேலும் பிரதமர் மோடியின் ஈரான் நாட்டுப் பயணத்தில் இருநாடுகளுக்கு மத்தியில் பல்வேறு முதலீட்டு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட்டது. இது இந்திய வர்த்தகச் சந்தைக்கு மகிழ்ச்சியான செய்தி.
சென்செக்ஸ்
இத்தகைய லாபம் மற்றும் சாதகமான சூழ்நிலையில் துவங்கிய புதன்கிழமை வர்த்தகம், துவக்கம் முதலே லாபத்தில் திளைத்தது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 575.70 புள்ளிகள், அதாவது ஒரே நாளில் 2.28 சதவீதம் உயர்ந்து 25,881.17 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
அதேபோல் நிஃப்டி குறியீடும் 186.05 புள்ளிகள் உயர்ந்து 7,934.90 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications