தங்க நகைகள் மீதான 1% வரி விதிப்பை திரும்பப் பெற்றது மத்திய அரசு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2016ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், 2 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வாங்கும் தங்க நகைகளுக்கு மத்திய அரசு 1 சதவீதம் டிசிஎஸ் வரி (tax collection at source) விதித்தது.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக மத்திய அரசு தற்போது இந்த வரி விதிப்பை முழுமையாக விலக்கியுள்ளதாக அனைத்து இந்திய ரத்தினம் மற்றும் தங்க வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

1% டிசிஎஸ் வரி..

1% டிசிஎஸ் வரி..

2 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு அதிகமாக வாங்கப்படும் அனைத்துத் தங்க நகைகளுக்கு டிசிஎஸ் வரி (tax collection at source) என மொத்த தொகையில் 1 சதவீத வரியை வசூல் செய்யப்படும் என மத்திய அரசு 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதற்கு முன்பு இதன் அளவுகோல் 5 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

மத்திய அரசின் இந்த வரி விதிப்பால் நாட்டில் தங்க மீதான வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டதாக அரசு உணர்ந்ததை அடுத்து இவ்வரி விதிப்பைத் திரும்பப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இதன் அளவு தற்போது 5 லட்ச ரூபாய் என்ற பழைய நடைமுறைக்க வந்துள்ளது. இந்த விதிமாற்றம் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் சந்தையில் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

 

கலால் வரி

கலால் வரி

தங்க மற்றும் வைர நகைகளின் விற்பனையில் மத்திய அரசின் 1 சதவீத கலால் வரி விதிப்பை எதிர்த்து நகைக் கடைக்காரர்கள் 42 நாள் போராட்டத்தை நடத்தி தோற்றுப்போய் உள்ள இத்தகைய தருணத்தில் மத்திய அரசு 1% டிசிஎஸ் வரி விலக்கை அறிவித்துள்ளது.

திருமணம்

திருமணம்

மத்திய அரசின் வரி விலக்கு அறிவிப்புகள், திருமணத்திற்காக நகைகள் வாங்கும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் திருமணத்திற்காக நகைகள் வாங்குவோருக்கு 2 லட்சம் ரூபாய் என்பது மிகக் குறைவான அளவு.

தங்க வர்த்தகம் சரிவு

தங்க வர்த்தகம் சரிவு

மத்திய அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பின் மூலம் 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் தேவை 41 சதவீதம் குறைந்து 88.4 டன் தங்கம் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது, இது 7 வருடத்தில் குறைவான அளவாகும்.

ஒரு வருடத்திற்கு இந்தியா 850-900 டன் தங்கத்தை வர்த்தகம் செய்கிறது.

 

தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை சுமார் 20 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 29,150 ரூபாயாக உள்ளது.

எதற்காக டிசிஎஸ் வரி..

எதற்காக டிசிஎஸ் வரி..

நாட்டின் வரி ஏய்ப்பு, கருப்புப் பணம் பரிமாற்றம் மற்றும் பணச் சலவை ஆகியவற்றை அதிகளவில் குறைப்பதற்காக மத்திய அரசு தங்க நகை கொள்முதல் மீது டிசிஎஸ் வரியை விதித்தது.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government rolls back decision to apply 1% TCS on cash purchase of gold jewellery

In a move that may boost demand for gold jewellery, the government has rolled back its budget decision to apply 1% tax collection at source (TCS) on cash purchase of gold jewellery of Rs 2 lakh and above and raised the threshold to the earlier Rs 5 lakh with effect from June 1.
Story first published: Tuesday, May 31, 2016, 12:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X