காய் வேண்டாம்.. கறி மட்டும் போதும்..!

சென்னை: உணவு என்றாலே நமக்கென்று ஒரு தனி விருப்பம் இருக்கும். சைவ உணவு மற்றும் ஆரோக்கிய உணவைப் பற்றிப் பெரும்பாலான விவாதங்கள் நடைபெற்றாலும், உண்மையில் உலகம் முழுவதும் அசைவம் உணவு விரும்பிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

உலகில் சராசரி அளவாக ஒருவருக்கு 40 கிலோ கறி ஆண்டிற்குத் தேவைப்படுகிறது. இப்படி இருக்கும் போது உலகம் முழுவதும் கறி அல்லது மாமிசத்தின் தேவை எவ்வளவு பெரியது என்பது உங்களுக்குப் புரியும்.

சீனா போன்ற நாடுகளில் மாமிசத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதோடு வரும் பத்து ஆண்டுகளுக்குள் இதன் அளவு 80% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் உணவு வர்த்தகத்தில் அசைவ உணவுத் தொழிலின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குகிறது. இந்நிலையில் அசைவ பரியர்கள் அதிகம் விரும்பி உண்ணப்படும் டாப் 10 மாமிசம் வகைகளையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

10. முயல்

10. முயல்

முயல் கறி முழுவதும் மென்மையான எளிதில் ஜீரணிக்கக் கூடிய புரோட்டீன்களைக் கொண்ட வெண்கறி. எனவே உலகம் முழுதும் பிரபலமாக இல்லாவிட்டாலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. ஆண்டிற்குச் சுமார் பத்து லட்சம் டன்கள் முயற்கறி உலகம் முழுவதும் உபயோகப்படுத்தப்படுகிறது. முயல் அதிகம் உண்ணப்படும் நாடுகள் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் சீனா.

9. சீமைவாத்துக்கறி (Goose)

9. சீமைவாத்துக்கறி (Goose)

ஆசியா குறிப்பாகச் சீனா சீமைவாத்துக் கறி உண்பதில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. மற்ற உண்ணப்படும் பறவையினங்களை ஒப்பிடும்போது இதன் அளவு குறைவாக இருப்பினும் சீமைவாத்து உற்பத்தி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 25 லட்சம் டன்கள் சீமைவாத்துக்கறி ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.

8. செம்மறி ஆட்டுக்கறி

8. செம்மறி ஆட்டுக்கறி

ஆஸ்திரேலியா, சீனா, மற்றும் வளைகுடா நாடுகளில் செம்மறி ஆட்டுக்கறி தினசரி உணவாக உள்ளது. அதன் மென்மையான ருசி பலருக்கும் பிடித்தமாக இருப்பதோடு மேன்மேலும் அதிகப்படியான மக்களால் உண்ணப்படுகிறது. இது உயர் ரகப் புரோட்டீன்களைக் கொண்டதாகவும் உள்ளது.

7. வாத்துக்கறி (Duck)

7. வாத்துக்கறி (Duck)

உலகில் அதிகம் வாத்துக்கறி உண்ணும் நாடுகளில் சீனா, ஃபிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. ஆண்டுச் சராசரியாக இங்கு ஒருவருக்கு 4.5 கிலோ வாத்துக்கறித் தேவைப்படுகிறது. ஆண்டிற்கு உலக வாத்துகறி உற்பத்தி சுமார் 45 லட்சம் டன்கள். வாத்துக் கறி ருசியுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

 6. வான்கோழி

6. வான்கோழி

உலகின் அதிக வான்கோழி உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்காவும் அதிகம் உட்கொள்ளும் நாடாக இஸ்ரேலும் உள்ளன. இங்கு ஆண்டிற்குச் சராசரியாக ஒருவருக்கு 11.25 கிலோ வான்கோழிக்கறித் தேவைப்படுகிறது. மற்ற கறி உற்பத்திகளை ஒப்பிடும்போது வான்கோழி உற்பத்தி குறைவுதான் என்றாலும் உலக உற்பத்தி அளவு 56 லட்சம் டன்களாக உள்ளது.

5. வெள்ளாட்டுக்கறி

5. வெள்ளாட்டுக்கறி

உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் வெள்ளாட்டுக்கறி ஒரு மிக முக்கிய உணவாக அதிகஅளவில் உண்ணப்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டிற்குச் சுமார் 1.3 கோடி டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா இதிலும் முன்னிலை வகிக்கிறது. மொத்த அளவில் உலகில் 42% சீனர்களால் உண்ணப்படுகிறது. இதற்கடுத்தபடியாக இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளன.

4. மாட்டுக்கறி

4. மாட்டுக்கறி

உலகில் மிகவும் ருசியான கறிகளில் ஒன்றாகக் கருதப்படும் இது சில உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளை உண்டாக்குவதாகக் கூறப்பட்டாலும் தொடர்ந்து பிரபலமான உணவாக உள்ளது. ஆண்டிற்கு உலகம் முழுவதும் சுமார் 5.9 கோடி டன்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் இந்த அளவு உலகின் மொத்த கற் தேவையில் 25 சதவிகிதமாக உள்ளது.

3. கோழிக்கறி

3. கோழிக்கறி

கோழிக்கறி நிச்சயமாக உலகம் முழுவதுமே அதிகம் உண்ணப்படும் உணவு என்பதோடு பரவலாக அனைவராலும் உண்ணப்படும் உணவும் ஆகும். இது அனைத்து நாடுகளிலும் மதங்களிலும் விரும்பப்படுவதாலும் எளிதில் உற்பத்தி செய்யப்படுவதாலும் மொத்த உற்பத்தி 8.97 கோடி டன்கள் என்ற மிகப்பெரும் அளவாக உள்ளது. உலகக் கோழிக்கறி உற்பத்தி மற்றும் உட்கொள்ளுதலில் அமெரிக்கா முதலிடம் பிடிக்கிறது. ஆண்டுச் சராசரியாக இங்கு ஒருவருக்கு 43 கிலோ கோழிக்கறித் தேவைப்படுகிறது.

2. மீன்

2. மீன்

உலகம் முழுவதும் பல்வேறு விதமான மீன்கள் உணவாகப் பயன்படுகின்றன. இவை பெருமளவு ஊட்டச்சத்திற்காக உண்ணப்படுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 10 கோடி டன்கள் அளவிற்கு மீன்கள் உட்கொள்ளப்படுகின்றன. அதனால் இது ஒரு முக்கியஅசைவ உணவாக விளங்குகிறது.

1. பன்றிக்கறி

1. பன்றிக்கறி

உலக மொத்த அசைவ உணவுத் தேவையில் 36% சதவிகிதம் பண்றிக் கறியாக உள்ளது. உலகம் முழுவதும் பன்றிக்கறி உற்பத்தி அளவு 10.9 கோடி டன்களாக உள்ளது. இதிலிருந்து அசைவ உணவில் இதன் பங்கையும் ஏன் இது பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?

என்ன படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே வாய் ஊறுதா? ஞாயற்றுக்கிழமை வேற.. உங்க வீட்டில் என்ன சமையல்..?

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

மின்னஞ்சலை தட்டுங்க.. வர்த்தகச் செய்திகளைப் படியுங்க..

இந்திய மக்களின் விருப்பம்..!

இந்திய மக்களின் விருப்பம்..!

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+