சில நாட்களாக உலகின் மிக முக்கியமான சொத்து பிட்காயின் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனைப் பார்த்து வரும் இந்திய வல்லுநர்கள் பிட்காயின் முதலீட்டை ஒழுங்கு படுத்தி அனைவரையும் முதலீடு செய்ய ஆர்பிஐ வழிவகைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர்.
பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் யாரும் நட்டம் அடைந்ததில்லை என்றும் இதனால் பிட்காயினும் வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற ஒரு முறையே என்றும் இதனால் ஒழுங்கு முறை துறைகள் இதற்கு முறையான சட்டத்தினை வகுத்து முதலீடு செய்ய ஊக்கமளிக்க வேண்டும் என்று சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டின் தலைமை நிர்வாக அதிகாரியான சுனில் சுப்ரமனியம் கூறியுள்ளார்.
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டு
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டு 33,000 கோடி ரூபாய் மதிப்பிலான கார்பஸ்-ஐ செப்டம்பர் மாதம் வரை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சியும் சரிவும்
2017-ம் ஆண்டில் மட்டும் கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு 1000 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரம் சில நேரங்களில் பங்கு சந்தை போன்று சரிவையும் அளித்தது. வல்லுநர்கள் பிட்காயினின் மதிப்பு 2018-ம் ஆண்டுக்குள் 40,000 டலர்கள் வரை உயரும் என்று கூறுகின்றனர்.
தங்கத்திற்கு ஒரு மாற்று
மேலும் பிட்காயின் தங்கத்திற்கு மாற்றான ஒரு முதலீடு என்றும் சுப்ரமனியம் கூறியுள்ளார். எப்படித் தங்கத்தினை மத்திய வங்கிகள் ஒழுங்குபடுத்தியனவோ அதே போன்று பிட்காயினையும் ஒழுங்கப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆரிய காலம்
பிட்காயின் ஆரிய காலத்தில் எப்படி வர்த்தகத்தில் எந்தத் தடையும் இல்லாமல் செயல்பட்டு வந்ததோ அதே போன்று நிலைக்கு நம்மைக் கூட்டிக்கொண்டு போகிறது என்றும் அவர் கூறினார்.
எப்படிப்பட்ட உயர்வு
பிட்காயின் திங்கட்கிழமை 11,800 டாலரை எட்டியது என்பது 2017-ம் ஆண்டு 1000 சதவீதம் உயர்வு ஆகும்.


Click it and Unblock the Notifications