பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நீரவ் மோடி தேடப்பட்டு வரும் நிலையில் அந்த மோசஃபியில் தொடர்புடையவர்கள் என 4 முக்கிய நபர்களைச் சிபிஐ கைது செய்துள்ளது. அதில் ஒருவர் தான் விபுல் அம்பானி, இவர் நீரவ் மோடிக்கு சொந்தமான ஃபைர்ஸ்டார் நிறுவனத்தின் நிதி துறை அதிகாரியாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
நேரடி தொடர்பு
11,400 கோடி ரூபாய் மோசடியில் விபுல் அம்பானிக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாகச் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஆதாரங்கள்
மும்பையில் உள்ள விபுல் அம்பானியின் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கிடைத்த கடிதங்களை வைத்துப் பார்க்கும் போது இவருக்கு மோசடியில் நேரடியாகத் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
நேரடி தொடர்புடையவர்கள்
சிபிஐ விசாரணையில் நீரவ் மோசடி செய்ததற்கும் அவருடைய துணை நிர்வாகியான கவிதா மானிக்கர், பஞ்சாப் நேஷ்னல் வங்கி கிரெட்ட் பிரிவின் பொது மேலாளர் ராஜேஷ் ஜிண்டால், ஃபைர்ஸ்டார் இண்டர்னேஷனல் நிறுவனத்தின் நிர்வாகி நிதின் ஷஹானி, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் துணை நிதி அதிகாரி உள்ளிட்டோரை மார்ச் 5 வரை காவலில் வைத்து விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வழிகாட்டி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை மேலாளராக இருந்த கோகுல்நாத் ஷெட்டி மோசடியாக LoU அளித்தது குறித்து அனைத்து விவரங்களும் விபுல் அம்பானிக்கு தெரியும் என்றும் நீராவ் மோடி மற்றும் பிற ஊழியர்களுக்கு இவர் தான் வழிகாட்டியாக இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
எப்படித் தெரிய வந்தது?
நீரவ் மோடியுடன் விபுல் அம்பானிக்கு தொடர்பு இருக்கிறது என்பது மோடியின் அலிபாக் பண்ணை வீட்டை சோதனை செய்யும் போது தான் தெரியவந்துள்ளது.
பரிமுதல்
அமலாக்கத் துறை வியாழக்கிழமை 9 ஆடம்பர கார்களைப் பரிமுதல் செய்துள்ளதாகவும் அதில் ரோல்ஸ் ராய்ஸ், இரண்டு மெர்சண்டிஸ் பென்ஸ், போர்ஸ்சி கார்கள் இருந்ததாகவும் இவை நீரவ் மோடி மற்றும் அவரது நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது.
பங்குகள்
மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான 7.80 கோடி ரூபாய் மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்டு மற்றும் பங்குகள் மட்டும் இல்லாமல் அவருக்குச் சொந்தமான 86.72 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கத் துறை பரிமுதல் செய்துள்ளது.
யார் இந்த விபுல் அம்பானி?
இவருக்கும் தலைப்பில் கொடுத்தது போன்று அம்பானி குடும்பத்திற்கும் என்ன தொடர்பு என்றால் திருபாய் அம்பானியின் தம்பி மகன் தான் விபுல் அம்பானி ஆவார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications