பஞ்சாப் நேஷனல் வங்கி பிப்ரவரி மாதம் முதல் மோசடியில் சிக்கி பல வகையில் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 4-ம் காலாண்டிற்கான அறிக்கையினை வெளியிட்டது. அதில் 1.98 பில்லியன் டாலர் அதாவது 13,417 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகளில் வரலாற்றில் பிஎன்பி வங்கியில் நடைபெற்றது தான் மிகப் பெரிய வங்கி மோசடி ஆகும். அதே நேரம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி தான் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனம் மற்றும் இந்திய வங்கிகளில் 4-ம் மிகப் பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோசடி
பிப்ரவரி மாதம் நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சோக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்களைக் கைகளில் போட்டுக்கொண்டு 2011-ம் ஆண்டு முதல் 2 மில்லியன் டாலர் வரை மோசடியாகக் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.
வழக்குப் பதிவு
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்று இருக்கும் மோசடிகள் குறித்து விசாரித்து வரும் சிபிஐ திங்கட்கிழமை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி உஷா உட்பட 22 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சொத்துக்கள்
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி சொத்துக்கள் 3 மடங்கு அதிகரித்து 20,353 கோடி ரூபாயாக உள்ளதாகவும், இது வங்கியில் நடைபெற்ற 7,178 கோடி ரூபாய் மோசடியினை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.
நட்டம்
சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது பஞ்சாப் நேஷனல் வங்கி 262 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகவும், மார்ச் 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 5,367 கோடி ரூபாய் அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.
வாரா கடன்
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-ம் காலாண்டில் 12.11 சதவீதமாக இருந்து வாரா கடன் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் 18.38 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை
பஞ்சாப் நேஷ்னல் வங்கி பங்குகள் காலை 12:52 மணி நிலவரத்தின் படி 10.55 புள்ளிகள் என 12.27 புள்ளிகள் சரிந்து 75.40 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications