தங்கம் விலை மார்ச் மாத தொடக்கத்தில் விண்ணைத் தொட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் திடீரென ஒரு அவுன்ஸ் 5,090 டாலர்களுக்கு அருகில் குறைந்து காணப்படுகிறது. இந்தியாவிலும் 24 கேரட் தங்கம் 10 கிராம் சுமார் 1,60,271 என்ற நிலைக்கு இறங்கி வந்துள்ளது. ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை ஏறுவதால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கவலை நிலவினாலும், மறுபுறம் அமெரிக்க டாலரின் வலுவான உயர்வால் தங்கம் விலை இந்த சரிவை சந்தித்துள்ளது.
தங்கத்தை எப்போது வாங்கலாம் என்று காத்திருந்த நடுத்தர வர்க்கத்திற்கும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும் இந்த திடீர் சரிவு ஒரு பெரிய சிக்னலாக பார்க்கப்படுகிறது. இது வெறும் ஆரம்பம்தானா அல்லது விலை இன்னும் குறையுமா? இப்போது வாங்குவது புத்திசாலித்தனமா? டாட்டா மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிபுணர்கள் சொல்லும் அந்த தங்கம்-வெள்ளி விகித கணக்கு இதில் எப்படி பொருந்துகிறது? தங்கம் விலை வீழ்ச்சியின் பின்னணியில் இருக்கும் ரகசியங்களையும், உங்கள் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் விரிவாக அலசுவோம்.

வலுவான அமெரிக்க டாலர் மற்றும் பத்திர வருமானம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகள் மத்தியில், தங்கம் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது. இந்த சூழலில் தற்போது முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் தனிநபர் நுகர்வு செலவினங்கள் குறித்த பணவீக்க அறிக்கைகாக காத்துக் கொண்டுள்ளனர். இது குறுகிய காலத்தில் தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம். ஆக சிறு முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
சர்வதேச அரசியல் சூழலில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியில், குறிப்பாக ஈரான் - இஸ்ரேல் இடையிலான பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனிடையே ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி, சர்வதேச எரிபொருள் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியே வைத்திருக்க வேண்டும் என்றும், பாரசீக வளைகுடா நாடுகள் மீது தொடர்ந்து ஈரான் தாக்குதல் நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சர்வதேச பொருளாதாரத்தை இன்னும் இத்தகைய மோசமான நிலைக்கு கொண்டு செல்லுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. இதனிடையே ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டால் எரிபொருட்கள் விலை தாறுமாறாக ஏற்றம் காணலாம். இது பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும். குறிப்பாக இந்தியா போன்ற அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பதம் பார்க்கலாம். இதற்கு டிரம்பும் ஈரானை பயங்கரவாதம் மற்றும் வெறுப்பு நிறைந்த நாடு என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தற்போதைக்கு இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் என தெரியவில்லை எனலாம். ஆக நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலையானது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். ஆக தற்போதைய சரிவு என்பதெல்லாம் தற்காலிகமான ஒன்று தான். நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாங்கி போடலாம்.
நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?
இருப்பினும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டியை அதிகரித்தால், அது தங்கம் வாங்குவதை கட்டுப்படுத்தலாம். ஆக இதையும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனித்து வரவேண்டும். எப்படி இருந்தாலும் போர்ட்ஃபோலியோவில் முழுக்க தங்கத்தை மட்டுமே வாங்காமல், பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
அதோடு தற்போது தங்கம் - வெள்ளி விகிதமும் தங்கத்திற்கு சாதகமாக உள்ளது. அதேசமயம் வெள்ளி விலைக்கு எதிராக உள்ளது. ஆக வெள்ளியில் முதலீடு செய்யும் முன் கவனமாக இருப்பது நல்லது.
சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு (22 கேரட்) 70 ரூபாய் குறைந்து, 14,900 ரூபாயாகவும், சவரனுக்கு 1,19,200 ரூபாயாகவும் காணப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 16,256 ரூபாயாகவும் காணப்படுகிறது. 18 கேரட் தங்கம் விலையானது கிராமுக்கு 12,550 ரூபாயாகவும் காணப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு சற்று குறைந்து 289.90 ரூபாயாகவும் காணப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!



Click it and Unblock the Notifications