தங்க நகைக்கடன் வாங்கியவர்களுக்கு புது சிக்கல்..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாகவே தங்கத்தின் விலை கணிசமான சரிவை சந்தித்து வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து 40,000 ரூபாய் வரை சரிந்துள்ளது. தங்கம் விலை குறைவது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அவசர தேவைக்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ள சாமானிய மக்களுக்கு பெரிய சிக்கலை தந்துள்ளது.

பொதுவாக தங்க நகை அடகு வைத்து கடன் வாங்க செல்லும் போதும் கடன்-மதிப்பு விகிதம் (Loan-to-Value Ratio - LTV) அடிப்படையில் தான் வங்கிகள் நமக்கு கடனே வழங்கும். அதாவது நாம் அடகு வைக்கும் தங்கத்தின் சந்தை மதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே வங்கிகள் கடனாக வழங்கும். தங்கம் விலை குறையும்போது, நீங்கள் வங்கியில் அடகு வைத்துள்ள நகையின் சந்தை மதிப்பு (Collateral Value) உடனடியாக குறைகிறது. ஆனால், நீங்கள் வங்கிக்கு திருப்பி செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி தொகையில் எந்த மாற்றமும் இருக்காது.

தங்க நகைக்கடன் வாங்கியவர்களுக்கு புது சிக்கல்..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

உதாரணமாக தங்கம் விலை ஒரு சவரன் 1.25 லட்சம் ரூபாயாக இருக்கும் நீங்கள் வட்டியில் நகை கடன் வாங்கி இருந்தால் ஒரு சவரனுக்கு 90,000 ரூபாய் வரை தான் கடன் கிடைத்திருக்கும். அதாவது தங்கத்தின் விலை சுமார் 65-75% வரை கடன் கிடைக்கும். ஆனால் இன்று ஒரு சவரன் தங்கம் விலையே 92,000 ரூபாயாக குறைந்துவிட்டது. இன்றைய விலைக்கு நீங்கள் ஒரு பவுனை அடகு வைத்தால் 60,000 ரூபாய் தான் கடன் கிடைக்கும். இது 30,000 ரூபாய் வித்தியாசம் தான் பிரச்சினையே.

அதாவது நீங்கள் அடகு வைத்த நகை அதே ஒரு பவுன் தான் ஆனால் அதன் இன்றைய மதிப்பு குறைந்துவிட்டது. ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட LTV வரம்பை தாண்டி கடன் விகிதம் உயர்ந்தால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மார்ஜின் கால் எனப்படும் அறிவிப்பை அனுப்பும். இது அபராதம் அல்ல, வங்கிகள் தங்கள் கடன் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கும் வழக்கமான நடவடிக்கை.

Also Read

எனவே வங்கிகளில் தங்க நகை கடன் வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வாய்ப்புள்ளது. LTV விகிதத்தை மீண்டும் வரம்பிற்குள் கொண்டு வர, கடன் அசலில் ஒரு பகுதியை உடனடியாக கட்ட சொல்வார்கள், இல்லையெனில் குறைந்த மதிப்பை ஈடுகட்ட, கூடுதலாக சிறிது தங்க நகையை அதே கடனுக்காக அடகு வைக்க சொல்வார்கள்.

அதாவது மேலே கூறிய உதாரணத்தில் நீங்கள் வித்தியாச தொகை 30,000 ரூபாயை கட்ட வேண்டி இருக்கும் அல்லது கூடுதல் நகையை அடகு வைக்க வேண்டி இருக்கும். இல்லை எனில் நகை ஏலம் விடுவதற்கான வாய்ப்பு உண்டாகும். தங்கம் விலை குறைந்த மறுநாளே வங்கிகள் நகையை ஏலம் விடாது, முதலில் நோட்டீஸ் அனுப்பும்.

Recommended For You

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வாடிக்கையாளர் பதிலளிக்காமலோ, கூடுதல் தொகை அல்லது நகை அடகு வைக்காமலோ இருந்தால் நாளிதழ்களில் பொது அறிவிப்பு வெளியிட்டு நகையை ஏலம் விடும் உரிமை வங்கிக்கு உண்டு. ஏலத்தில் கடன் மற்றும் வட்டி போக மீதமுள்ள உபரி தொகை இருந்தால், அது வாடிக்கையாளரிடம் திருப்பி தரப்படும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+