தங்கம் விலை ஏறத் தொடங்கிருச்சே! இதுவரை கொடுத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டீர்களா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் சாதாரண ஏழைக் குடும்பங்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை, எல்லோருமே தங்கத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

 

ஏழை மற்றும் நடுத்தர மக்கள், தங்கத்தை, நகை நட்டுக்களாக வாங்கிக் கொள்கிறார்கள் என்றால், பணக்காரர்கள், தங்கத்தை ஒரு நல்ல முதலீடாகப் பார்க்கிறார்கள். பொருளாதார நெருக்கடி காலத்தில், தங்கம் தங்களின் பண மதிப்பை பாதுகாக்கும் காவலனாகப் பார்க்கிறார்கள்.

எப்படியோ, எல்லா தரப்பு மக்களும் தங்கத்தை வாங்குகிறார்கள். அப்படிப்பட்ட தங்கத்தின் விலை, கடந்த இரண்டு வருட காலமாக பயங்கர ஏற்றம் கண்டு இருக்கிறது. இதை கொஞ்சம் தரவுகளோடு பார்த்துவிடுவோம்.

60,000 ரூபாயைத் தொட முயன்ற சென்னைத் தங்கம் விலை

60,000 ரூபாயைத் தொட முயன்ற சென்னைத் தங்கம் விலை

கோடம்பாக்கம் கொண்ட சிங்காரச் சென்னையில், கடந்த 07.08.2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, இதுவரை வரலாறு காணாத அளவுக்கு 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த விலையை ஜனவரி 2016 விலையான 28,149 ரூபாய் உடன் ஒப்பிட்டால் 110 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

2017 - 2019 வரையான விலை ஏற்றம்

2017 - 2019 வரையான விலை ஏற்றம்

1. 2017 முதல் 18 வரையான ஒரு ஆண்டு காலத்தில் ஆபரணத் தங்கம் விலை சுமாராக 2.17 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

2. 2018 முதல் 2019 வரையான ஒரு ஆண்டு காலத்தில் ஆபரணத் தங்கம் விலை 2.4 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

3. ஜனவரி 2016-ல் 28,149 ரூபாய்க்கு விற்பனை ஆன ஆபரணத் தங்கம் விலை, ஜனவரி 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக இந்த 3 வருட காலத்தில் ஆபரணத் தங்கம் விலை ஒட்டு மொத்தமாகவே 12.44 % தான் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

2019-ல் 28.47% விலை ஏற்றம்
 

2019-ல் 28.47% விலை ஏற்றம்

ஆனால் 2019-ம் ஆண்டு அப்படி இல்லை. 1 ஜனவரி 2019 அன்று சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 31,650 ரூபாய்க்கு விற்பனை ஆகத் தொடங்கியது. 31 டிசம்பர் 2019 அன்று 40,660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக 2019-ம் ஆண்டில் மட்டும் 28.47 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

8 மாதத்தில் 45% விலை ஏற்றம்

8 மாதத்தில் 45% விலை ஏற்றம்

சென்னையில், 1 ஜனவரி 2020 அன்று, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 40,750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 07 ஆகஸ்ட் 2020 அன்று வரலாற்று உச்சமாக 59,130 ரூபாய்க்கு விற்பனையானது. ஆக இந்த 8 மாத காலத்தில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை 45.10 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. சரி தற்போதைய தங்கம் விலை நிலவரத்துக்கு வருவோம்.

ஆபரணத் தங்கம் விலை (24கே 10கி & 22 கே 10கி)

ஆபரணத் தங்கம் விலை (24கே 10கி & 22 கே 10கி)

வாழ்கை தேடி வரும் வாலிபர்களுக்கு வாழ வழி கொடுக்கும் நம் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, நேற்று 52,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 48,250 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

குறைந்தபட்ச விலை

குறைந்தபட்ச விலை

ஆகஸ்ட் 2020-ல், சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபணத் தங்கம் 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த செப்டம்பர் 24 அன்று 51,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இது தான் ஆகஸ்ட் உச்சத்துக்குப் பிறகு சென்னை தங்கம் விலை கண்ட மிகப் பெரிய வீழ்ச்சி. ஆனால் நேற்று 52,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. 51,870 ரூபாய்க்கு விற்பனை ஆன போதே, ஆபரணத் தங்கத்தை வாங்க விரும்பியவர்கள் வாங்கி இருக்கலாம். இப்ப வருத்தப்பட்டு என்ன புண்ணியம்?

எம் சி எக்ஸ் தங்கம் விலை

எம் சி எக்ஸ் தங்கம் விலை

இன்று மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள். எனவே இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் இந்திய கமாடிட்டி சந்தைகளுக்கு இன்று விடுமுறை. நேற்று இரவு, அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, 536 ரூபாய் விலை (1.06 %) ஏற்றம் கண்டு 50,940 ரூபாய்க்கு நிறைவடைந்து இருக்கிறது.

மிஸ் பண்ணிட்டோமே

மிஸ் பண்ணிட்டோமே

இந்தியாவின் எம் சி எக்ஸ் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ் கிடைத்தது. கடந்த ஆகஸ்ட் 2020-ல், எம் சி எக்ஸ் அக்டோபர் மாத தங்க காண்டிராக்ட் 56,191 ரூபாய் வரைத் தொட்டு வர்த்தகமானது. கடந்த 24 செப் 2020 அன்று 49,248 ரூபாய் வரை விலை இறக்கம் கண்டது. நேற்று 50,940 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. 49,248 ரூபாயிலேயே முதலீடு செய்ய விரும்பியவர்கள் செய்து இருக்கலாம். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நிதானமாக ஏற்றம் காணும் சர்வதேச தங்கம்

நிதானமாக ஏற்றம் காணும் சர்வதேச தங்கம்

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை (XAU USD CUR) தற்போது 1,892 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்று எதிர்பார்த்தது போலவே, சர்வதேச தங்கம் விலை 1,900 டாலருக்கு மேல் (1,906 டாலருக்கு) வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. தங்கம் 1,900 டாலரைக் கடந்தால் மீண்டும் நல்ல விலை ஏற்றம் காணலாம் என பல அனலிஸ்ட்கள் சொல்லி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1,861 டாலர்

1,861 டாலர்

கடந்த ஆகஸ்ட் 2020-ல் 2,063 டாலர் வரைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்த சர்வதேச தங்கம் விலை, சமீபத்தில் 1,861 டாலர் வரை வீழ்ச்சி கண்டது. சர்வதேச தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பியவர்கள், அப்போதே முதலீடு செய்து இருக்கலாம். இப்போது 1,900 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அடுத்தடுத்த எல்லா தங்கம் விலையும் பாதிக்கபப்டும்

அடுத்தடுத்த எல்லா தங்கம் விலையும் பாதிக்கபப்டும்

சர்வதேச தங்கம் விலை அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தன்னிச்சையாக, எம் சி எக்ஸ் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டுகள் விலை தொடங்கி, சென்னை ஆபரணத் தங்கம் விலை வரை மாற்றத்துக்கு உட்படும் என நேற்றே "சர சர ஏற்றத்தில் தங்கம் விலை! ஜிம் ராஜர்ஸ் சொன்னது போலவே நடக்குதே! மிஸ் பண்ணிட்டோமே!" என்கிற கட்டுரையில் சொல்லி இருந்தோம். அதே போல அடுத்தடுத்து எல்லா விதமான தங்கத்தின் விலையும் மாறும்.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

93.91 புள்ளிகளில் தடுமாறிக் கொண்டு இருக்கும் அமெரிக்க டாலர், அமெரிக்காவின் ஸ்டிமுலஸ் பேக்கேஜ், பிரெக்ஸிட், அமெரிக்காவில் இன்னும் தொடரும் வேலை இழப்புகள், உலக பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை, அமெரிக்க சீன பஞ்சாயத்துக்கள், இந்தியா சீனா பிரச்சனைகள்... போன்ற பல காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

பேங்க் ஆஃப் அமெரிக்கா

பேங்க் ஆஃப் அமெரிக்கா

பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3,000 டாலர் வரைத் தொடலாம் எனச் சொல்லி இருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது. அதோடு க்ரெடிட் சூசி என்கிற கம்பெனி, தங்கம் விலை 2,300 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. சர்வதேச தங்கம் விலை, 1,900 டாலரைக் கடந்து வர்த்தகமானதால், இந்த கணிப்புகள் எல்லாம் நிறைவேற வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இதுவரை தங்கம் கொடுத்த நல்ல வாய்ப்புகளை தவறவிட்டவர்கள் வருந்த வேண்டாம். இப்போது கூட உங்கள் நிதி ஆலோசகருடன் பேசி, தங்கத்தில் முதலீடு செய்யலாம். நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price closed at $1906 yesterday it seems like the uptrend in gold is on

The international gold price had closed at $1906 yesterday. It seem like the uptrend in gold is on now.
Story first published: Friday, October 2, 2020, 11:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X