நகை கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!! சவரனுக்கு ரூ.32,000 சரிவுனா சும்மாவா..!!

தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜனவரி மாதம் தங்கம் விலை ஒரு சவரன் 1.34 லட்சத்தை தொட்டது. அதுவே குறைந்து தற்போது 1.02 லட்சத்தில் வந்து நிற்கிறது.

தீபாவளி பண்டிகை மற்றும் திருமண சீசன் நெருங்கும் நிலையில் தங்கம் விலை சரிவு மக்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மீண்டும் விலை ஏறுவதற்குள் தங்கத்தை வாங்கிடலாம் என மக்கள் தங்க நகை கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் நகை விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 10% முதல் 12% வரை உயரும் என நகை வியாபாரிகள் உறுதியாக நம்புகின்றனர்.

நகை கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!! சவரனுக்கு ரூ.32,000 சரிவுனா சும்மாவா..!!

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை 7 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. இந்த விலை சரிவு வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளதுடன், நகைக்கடைகளை நோக்கி மீண்டும் மக்களை ஈர்த்துள்ளது என நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக கடந்த வார இறுதியில் இருந்து மக்கள் நகைகடைகளுக்கு வருகை தருவதும் நகை வாங்குவதும் அதிகரித்துள்ளதாம். குறிப்பாக வரவிருக்கும் திருமண காலத்தேவைக்காக மக்கள் முன்கூட்டியே ஆர்டர்கள கொடுத்து நகைகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர் என கூறுகின்றனர் நகை கடை உரிமையாளர்கள்.

Also Read

கடந்த ஆண்டு தீபாவளியின் போது தங்கம் விலை ஏற்றத்தில் இருந்தது, ஆனால் இந்த ஆண்டு இறங்குமுகமாக இருப்பதால் பண்டிகை கால விற்பனையானது கடந்த ஆண்டினை காட்டிலும் 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என உறுதியாக தெரிவிக்கின்றனர்.

தங்க விலை குறையட்டும் என காத்திருந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் கடைகளுக்கு வர தொடங்கியுள்ளனர் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பண்டிகை மற்றும் திருமண சீசன் ஒரே நேரத்தில் வருவதால், ஒட்டுமொத்த சில்லறை நகை வியாபார துறைக்கும் இந்த விலை குறைவு மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது என்கின்றனர்.

Recommended For You

தங்கம் விலை குறைந்திருந்தாலும் மக்கள் மத்தியில் லைட் வெயிட் நகைகள், 18 கேரட் நகைகள் , அன்றாடம் பயன்படுத்தும் நகைகள், தங்க நாணயங்கள் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறுகின்றனர். தங்கம் விலை தனது வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து சவரனுக்கு 30,000 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது. அதுவும் பண்டிகை சீசனில் இந்த விலை சரிவு வாய்ப்பு என்பது அரிதானது என்பதால் இந்த தீபாவளியில் விற்பனை களைகட்டும் என நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+