மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை இந்த ஆண்டின் தொடக்கம் முதலே ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. பரஸ்பர வரி, வர்த்தக போர் வெடிக்கும் அபாயம், போர் பதற்றம் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டை திரும்ப பெற்று, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். மேலும் உலக நாடுகளின் மைய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்தனர். இது போன்ற காரணங்களால் தங்கத்துக்கான தேவை அதிகரித்து விலை உயர்ந்தது.
இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் வாங்குவது கடினமான ஒன்றாக மாறியது. இந்நிலையில், தங்கம் விலை அண்மையில் சிறிது நிலையாக இருந்தது. சரி இனி தங்கத்தின் விலை இறங்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்த சூழ்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியது. கடந்த வாரம் தங்கத்தின் விலை அதிகரித்தது.

இந்த சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் ஆசிய பகுதியில் போர் பதற்றம் தணிந்தது. இது தவிர அமெரிக்கா-சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விவகாரத்தை தொடர்ந்து, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இரு நாடுகளும் போட்டி போட்டு பரஸ்பரமாக இறக்குமதி வரியை உயர்த்தின. இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில், வரிகள் தொடர்பாக பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இரு நாட்டு அதிகாரிகளும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸில், இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளின் நன்மைக்காக சீனாவை அமெரிக்க வர்த்தகத்துக்கு திறப்பது மிகப்பெரிய முன்னேற்றம் என்று பதிவு செய்து இருந்தார். இந்நிலையில்,இன்று அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 90 நாட்களுக்கு 30 சதவீதமாக குறைக்க சீனாவும் முடிவு செய்தது. இதுதவிர அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தது இது போன்ற காரணங்களால் இன்று தங்கத்தின் விலை குறைந்தது.
அதிரடியாக நடந்த சம்பவம்.. 1 மணி நேரம் வர்த்தகத்தை நிறுத்திய கராச்சி பங்குச் சந்தை
எம்சிஎக்ஸில் ஜூன் மாத தங்க ஃபியூச்சர் கான்ராக்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.4,186 அல்லது 4.3 சதவீதம் குறைந்து ரூ.92,543ஆக சரிந்தது. போர் பதற்றம், வர்த்தக போர் அபாயம் குறைந்து வருவதால் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யோகி அரசு கொடுத்த பெரிய ஒப்பந்தம்.. அதானி பவருக்கு அடித்த ஜாக்பாட்.. கிடுகிடுவென உயர்ந்த பங்கு விலை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications