சூப்பர்! சரிவில் தங்கம் விலை! தள்ளுபடியில் விற்கும் டீலர்கள்! எதிர்காலத்தில் என்ன ஆகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தை நம்மைப் போன்ற சாதாரண மக்கள், வாங்கி நகை நட்டுக்களாக போட்டுக் கொள்வோம்.

ஆனால் பல நாட்டின் மத்திய வங்கிகள், தங்கத்தை ஒரு முதலீடாகப் பார்க்கிறார்கள். பொருளாதாரம் மந்தமாகும் போது, தங்கம் பக்க பலமாக வந்து நிற்கும். அதற்கு உதாரணம் சமீபத்தைய விலை ஏற்றம்.

சரி, சமீபத்தைய தங்கம் விலை ஏற்றம் பற்றிப் பார்ப்பதற்கு முன், முதலில் gold டிமாண்டில் இருந்து தொடங்குவோம்.

டிமாண்ட் சரிவு

டிமாண்ட் சரிவு

உலகிலேயே, தங்கத்தை அதிகம் வாங்கும் நாடுகள் என்றால் அது சீனாவும் இந்தியாவும் தான். இந்த இரண்டு நாடுகளுமே, கொரோனா வைரஸ் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது. எனவே இந்த இரண்டு நாடுகளிலும் தங்கத்துக்கான டிமாண்ட் படு பாதாளத்தில் இருக்கிறது. இருப்பினும் தங்கம் விலை சிறப்பாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே எப்படி? என்கிறீர்களா.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு

பொருளாதாரங்களும், பங்குச் சந்தைகளும் படு பாதாளத்தில் இருக்கும் போது, இயற்கையாகவே தங்கம் ஒரு பாதுகாப்பு பெட்டகம் போலச் செயல்படும். முதலீட்டாளர்கள் தங்கத்தை போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள். தங்கத்தின் விலை சரமாரியாக அதிகரிக்கும். இந்தியா சீனாவில் ஆபரணத் தங்கத்தின் டிமாண்ட் சரிந்து இருக்கும் அதே நேரத்தில், சிங்கப்பூர் & ஜப்பான் போன்ற நாடுகளில் தங்கத்தின் மீது முதலீடு செய்வது கணிசமாக அதிகரித்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

டீலர்கள் தள்ளுபடி

டீலர்கள் தள்ளுபடி

ஆபரணத் தங்கத்தை வாங்கவே ஆள் இல்லை என்கிற போது, டீலர்கள் அதிக விலை வைத்து விற்க முடியுமா என்ன? ஆக டீலர்கள் தங்கத்தை தள்ளுபடி விலையில் தான் விற்கிறார்கள். ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சுமாராக 22 டாலர் வரை தள்ளுபடி விலையில் விற்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது போக 12.5 % இறக்குமதி வரி + 3 % விற்பனை வரி வேறு வசூலிப்பார்கள்.

1,789 டாலர் தொட்ட சர்வதேச தங்கம் விலை

1,789 டாலர் தொட்ட சர்வதேச தங்கம் விலை

சர்வதேச அளவில், ஸ்பாட் தங்கம் விலை, கடந்த மாதத்தில் 1,789 டாலரைத் தொட்டு வர்த்தகமானது நினைவில் இருக்கலாம். இப்போது வரை சர்வதேச தங்கம் விலை 1,772 டாலருக்குக் கீழே வரவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். ஆக தங்கம் விலையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் வெகு சில காரணிகளில் சர்வதேச தங்கம் விலையும் ஒன்று.

கமாடிட்டி சந்தையில் தங்கம்

கமாடிட்டி சந்தையில் தங்கம்

இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸில், ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை 48,982 ரூபாயில் இருந்து சரிந்து 48,046 ரூபாய்க்கு வந்து இருக்கிறது. ஆக உள்ளூரில் தங்கம் விலை ஏற்றம் தடைபட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

டாலர் சரிவு

டாலர் சரிவு

அதே போல, இந்தியாவுக்கு இன்னொரு நல்ல விஷயமும் நடந்து இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த சில வாரங்களில், 76.2 ரூபாயில் இருந்து 74.6 ரூபாய்க்கு வந்திருக்கிறது. ஆகையால் நம் ஊரில் தங்கம் விலை டாலரால் அதிகரிப்பதும் கணிசமாக குறைந்து இருக்கிறது. இருப்பினும் சென்னையில் தங்கம் விலை இன்னும் பெரிய வீழ்ச்சி கண்டதாகத் தெரியவில்லை.

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 50,950 ரூபாயில் இருந்து மிகக் கொஞ்சமாக இறங்கி 50,880 ரூபாய்க்கு நேற்று விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 46,740 ரூபாயில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் இறங்கி 46,270 ரூபாய்க்கு நேற்று விற்பனை ஆனது. எதிர்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகும்.

அடுத்து தங்கம் விலை என்ன ஆகும்

அடுத்து தங்கம் விலை என்ன ஆகும்

தற்போதைக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து இருப்பது, இந்தியாவிலேயே எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் விலை சரிந்து இருப்பது எல்லாம் ஓரளவுக்கு தங்கம் விலை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தவே உதவும். மற்ற பல காரணங்களால், தங்கத்தின் விலை பயங்கரமாக அதிகரிக்கும். அந்த காரணங்களைப் பார்ப்போம்.

இந்த காரணங்களால் தங்கம் விலை அதிகரிக்கும்

இந்த காரணங்களால் தங்கம் விலை அதிகரிக்கும்

சர்வதேச அளவில் தங்கம் விலை இன்னும் 1,770 டாலருக்குக் கீழ் வராமல் விலை அதிகரித்துக் கொண்டே போவது, தங்கத்தில் குவியும் முதலீடுகள், சர்வதேச அரசியல் பிரச்சனைகள் (அமெரிக்கா - சீனா, இந்தியா - சீனா), கொரோனா வைரஸுக்கு இதுவரை ஒரு மாற்று மருந்து கண்டு பிடிக்காமல் இருப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டே இருப்பது போன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price fall continuously dealers selling gold in discount

Gold price is falling from its historical high. At the same time the physical gold demand is too low. so gold selling dealers are selling gold in discount.
Story first published: Saturday, July 4, 2020, 11:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X