உச்சத்திலிருந்து ₹5,580 சரிவில் தங்கம் விலை! எட்டிப் பார்க்கும் விலை ஏற்றம்! அடுத்து என்ன ஆகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓயாது ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, செப்டம்பர் 2020-ல் ஓய்வு எடுக்கத் தொடங்கி இருக்கிறது.

 

சென்னையில் தங்கம் விலை, கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று 59,130 ரூபாய்க்கு விற்பனையான 24 கேரட் 10 கிராம் தங்கம், நேற்று 53,550 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, நேற்று வரை, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 54,200 ரூபாய்க்குள்ளேயே விற்பனை ஆகி வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எதை எல்லாம் பார்க்கப் போகிறோம்

எதை எல்லாம் பார்க்கப் போகிறோம்

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை என்ன? 07 ஆகஸ்ட் 2020 சென்னை ஆபரணத் தங்கம் விலை உடன், நேற்றைய விலை ஒப்பீடு, சர்வதேச தங்கம் விலை, எம் சி எக்ஸ் தங்கம் விலை போன்றவைகளைப் பார்ப்போம். அதோடு, தற்போது தங்கம் விலை ஒரு மெல்லிய ஏற்றம் கானண்பதற்கான காரணம் என்ன? தங்கம் விலை பற்றி தரகு நிறுவனங்கள் சொல்வதென்ன? என்பதையும் பார்த்துவிடுவோம்.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை

நேற்று, சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 53,550 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக பவுன் (8 கிராம் தங்கம்) விலை 42,840 ரூபாய். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,090 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக பவுன் (8 கிராம் தங்கம்) விலை 39,272 ரூபாய்.

5,580 ரூபாய் விலை சரிவு
 

5,580 ரூபாய் விலை சரிவு

கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 59,130 ரூபாயாக இருந்தது. இதை நேற்றைய (09 செப்டம்பர் 2020) 53,550 ரூபாயுடன் ஒப்பிட்டால் 5,580 ரூபாய் விலை சரிவில் இருப்பது தெரிகிறது. 2020-ம் ஆண்டில் தங்கம் விலை, தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்ததால், திருமணம் போன்ற நல்ல காரியங்களுக்கு நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு, இந்த விலை இறக்கம் ஒரு நிம்மதியைக் கொடுக்கும் எனலாம்.

22 கேரட் விலை சரிவு

22 கேரட் விலை சரிவு

அதே போல, சென்னையில், 07 ஆகஸ்ட் 2020 அன்று 54,200 ரூபாய்க்கு விற்பனை ஆன, 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை, நேற்று (09 செப்டம்பர் 2020) அன்று 49,090 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆக உச்ச விலையில் இருந்து 5,110 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

எம் சி எக்ஸ் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட் விலை

எம் சி எக்ஸ் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட் விலை

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை 51,450 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று அதிகபட்சமாக 56,191 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக இப்போது 4,741 ரூபாய் விலை குறைவாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது எம் சி எக்ஸ் தங்கம்.

இண்டர்நேஷனல் தங்கம் விலை (XAUUSD:CUR)

இண்டர்நேஷனல் தங்கம் விலை (XAUUSD:CUR)

உலகில் விற்பனை ஆகும் ஆபரணத் தங்கம் தொடங்கி, பல நாட்டு சந்தைகளில் வர்த்தகமாகும் தங்க காண்டிராக்டுகள் வரை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் சர்வதேச தங்கம் விலை, இன்று 1,944 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதை 06 ஆக 2020 உச்ச விலையான 2,063 டாலருடன் ஒப்பிட்டால் 119 டாலர் விலை சரிந்து இருக்கிறது.

மெல்லிய விலை ஏற்றம்

மெல்லிய விலை ஏற்றம்

தங்கம் விலை, முன்பைப் போல சீராக விலை ஏற்றம் காணவில்லை. சொல்லப் போனால், இதுவரை செப்டம்பரில் விலை ஏற்றமே இல்லை. கடந்த சில நாட்களாகத் தான் ஓரளவுக்கு சர்வதேச தங்கம் விலை மெல்ல அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. 01 செப் 2020 அன்று 1,970 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
03 செப் 2020 1,930 டாலர்
08 செப் 2020 1,932 டாலர்
10 செப் 2020 1,944 டாலர் என மெல்ல விலை ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது.

விலை ஏற்றக் காரணங்கள் என்ன

விலை ஏற்றக் காரணங்கள் என்ன

இந்த விலை ஏற்றத்துக்கு, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் எண்ணிக்கை ஒரு மிக முக்கிய காரணமாகச் சொல்லலாம். அதோடு AstraZeneca & Oxford பல்கலைக்கழகம் இணைந்து நடத்திக் கொண்டு இருந்த கொரோனா மருந்து சோதனைகள் தடைபட்டு இருப்பதும், தங்கம் விலை ஏற்றத்துக்கு பெரிய முட்டுக்கட்டையாக நிற்பதாகச் சொல்கிறது லைவ் மிண்ட் பத்திரிகை.

டாலர் இண்டெக்ஸ் (DXY:CUR)

டாலர் இண்டெக்ஸ் (DXY:CUR)

அமெரிக்க டாலர் இண்டெக்ஸ், கீழ்காணும் 6 கரன்சிகளுக்கான வெயிடேஜ் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
Euro (EUR), 57.6% வெயிடேஜ்
Japanese yen (JPY) 13.6% வெயிடேஜ்
Pound sterling (GBP), 11.9% வெயிடேஜ்
Canadian dollar (CAD), 9.1% வெயிடேஜ்
Swedish krona (SEK), 4.2% வெயிடேஜ்
Swiss franc (CHF) 3.6% வெயிடேஜ். டாலர் இண்டெக்ஸ் பலமடைகிறது என்றால், இந்த 6 கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலர் பலமடைகிறது என்று பொருள்.

அமெரிக்க டாலர் பலவீனம்

அமெரிக்க டாலர் பலவீனம்

ஒருவேளை டாலர் இண்டெக்ஸ் பலவீனமடைகிறது என்றால், மேலே சொன்ன 6 கரன்சிகள் பலமடைகிறது என்று பொருள். கடந்த 09 செப்டம்பர் 2020 அன்று 93.44 புள்ளிகளாக இருந்த டாலர் இண்டெக்ஸ், நேற்று 93.23 ஆகவும், இன்று 93.08 ஆகவும் பலவீனமடைந்து கொண்டே வருகிறது. இது 6 கரன்சிகள் வலுவடைவதைக் காட்டுகிறது. எனவே தங்கம் விலையும் மெல்ல ஏற்றம் காணத் தொடங்குகிறது.

ஐரோப்பிய மத்திய வங்கி

ஐரோப்பிய மத்திய வங்கி

இந்தியாவுக்கு எப்படி ஆர்பிஐ தலைமை வங்கியாக இருக்கிறதோ, அதே போல ஐரோப்பிய ஒன்றியத்துக்கு European Central Bank (ECB). இந்த ECB இன்று வட்டி விகிதங்கள் தொடர்பான பணக் கொள்கைக் கூட்டத்தை நடத்த இருக்கிறது. இதில், ஐரோப்பிய பொருளாதாரத்தை மேம்படுத்த, வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அப்படி வட்டி விகிதங்கள் குறைந்தால், அது தங்கத்தின் விலை ஏற்றத்தை ஊக்குவிக்கும்.

பாதுகாப்புக்காக தங்கத்தில் முதலீடு

பாதுகாப்புக்காக தங்கத்தில் முதலீடு

உலக பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வராமல் இருப்பது, உலகம் முழுக்க அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை, அமெரிக்க சீன பஞ்சாயத்துக்கள், பிரெக்ஸிட்டில் ஒரு நிலை இல்லாதன்மை... போன்ற பல காரணங்களால், முதலீட்டாளர்கள், தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதி, பணத்தை இன்வெஸ்ட் செய்து வருகிறார்கள். எனவே தங்கம் விலை மெல்ல அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

1900 - 2000 டாலர்

1900 - 2000 டாலர்

தங்கத்தின் விலை, இறக்கம் கண்டாலும், தங்க இ டி எஃப்-களை வாங்குவது குறைந்து இருக்கிறது. எனவே தங்கத்தின் விலை பெரிய ஏற்றம் காண முடியாமல் இருக்கிறது. தங்கம் விலை 1,900 - 2,000 டாலருக்குள் சிக்கி இருக்கிறது. இந்த இரண்டில் ஒரு விலை உடைபட்டால் தான், தங்கம் விலை ஏற்றம் காணுமா அல்லது விலை இறக்கம் காணுமா என்பதைச் சொல்ல முடியும் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ். 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price fall Rs 5580 from its august high what about in future

The Chennai gold price has fallen Rs 5,580 from its august 2020 high price. What may happen to gold price in future?
Story first published: Thursday, September 10, 2020, 13:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X