மூன்றாவது நாளாக தொடர் சரிவில் தங்கம் விலை! இப்ப தங்கம் வாங்கலாமா? எப்போது எவ்வளவு அதிகரிக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்கள் நிலத்தை எப்படி நெடுங்காலமாக, ஒரு உணர்வு மையத்துக்குள் கொண்டு வந்து வைத்திருக்கிறார்களோ, அதே போல தங்கமும், இந்தியர்களின் உணர்வு மையத்தில் இருக்கும் சொத்து.

 

நிலம் எப்படி ஒரு தனி மனிதர் அல்லது ஒரு சமூகத்தின் அதிகார வெளிப்பாடாகவும், அந்தஸ்த்தின் அடையாளமாகவும் இருக்கிறதோ, அதே போல தங்கமும் ஒருவருடைய செல்வாக்கின் பரிமாணமாகத் தான் இருக்கிறது. உதாரணமாக அதிக நகை நட்டுக்களைப் போட்டு திருமணம் செய்து கொடுப்பதைச் சொல்லலாம்.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலை, எல்லா தளங்களிலும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

பார்க்க வருகிறீர்களா?

பார்க்க வருகிறீர்களா?

சென்னை ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? எம் சி எக்ஸ் தங்க காண்டிராக்ட்களின் விலை என்ன? சர்வதேச தங்கம் விலை எப்படி வர்த்தகமாகி வருகிறது? ஏன் தங்கம் விலை சரிந்து கொண்டே வருகிறது? தங்கம் விலை அதிகரிக்குமா? எவ்வளவு அதிகரிக்கும்? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை - சென்னை ஆபரணத் தங்கம்

இன்றைய தங்கம் விலை - சென்னை ஆபரணத் தங்கம்

அழகு சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று 52,360 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. அதே போல 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 48,000 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. செப்டம்பர் 2020 உச்சத்தை இதுவரை கடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3-வது நாளாக சரிவில் MCX Gold price
 

3-வது நாளாக சரிவில் MCX Gold price

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 50,048 ரூபாயில் இருந்து, 88 ரூபாய் விலை இறக்கம் கண்டு, 49,960 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

தொடர் சரிவில் எம் சி எக்ஸ் தங்கம்

தொடர் சரிவில் எம் சி எக்ஸ் தங்கம்

கடந்த 5 அக்டோபர் 2020 அன்று, எம் சி எக்ஸ் தங்கம் விலை 50,626 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. 06 அக்டோபர் 2020 அன்று மெல்லிய இறக்கம் கண்டு 50,526 ரூபாய்க்கும், நேற்று (07 அக்டோபர் 2020) கொஞ்சம் பலத்த இறக்கம் கண்டு 50,048 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 49,960 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

XAU USD CUR தங்கம் விலை

XAU USD CUR தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்றைய குளோசிங் விலையான 1,887 டாலரில் இருந்து ஐந்து டாலர் ஏற்றம் கண்டு 1,892 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 05 அக்டோபர் 2020 அன்று, ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 1,913 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இறக்க டிரெண்டில் சர்வதேச தங்கம்

இறக்க டிரெண்டில் சர்வதேச தங்கம்

கடந்த 01 செப்டம்பர் 2020 அன்று 1,970 டாலரைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. அதன் பின் 16 செப்டம்பர் 2020 அன்று 1,959 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. 25 செப் 2020 அன்று 1,861 டாலர் என மிகப் பெரிய வீழ்ச்சி கண்டது. அதன் பின் மெல்ல ஏற்றம் கண்ட தங்கம் விலை அக்டோபர் 05 அன்று 1,913 டாலரில் நிறைவடைந்தது.

டிரெண்ட் மாறவில்லை போலருக்கே

டிரெண்ட் மாறவில்லை போலருக்கே

மீண்டும் 6 அக்டோபர் 2020 அன்று 1,878 டாலர் வரை சரிந்து, நேற்று (07 அக் 2020) 1,887 டாலரில் நிறைவடைந்தது. இன்று மெல்லிய ஏற்றம் கண்டு, 1,892 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக, சர்வதேச தங்கத்தில் இருக்கும் இறக்க டிரெண்ட் இதுவரை மாறவில்லை போலத் தெரிகிறது.

ஸ்டிமுலஸ் வந்தால் தங்கத்துக்கு கொண்டாட்டம்

ஸ்டிமுலஸ் வந்தால் தங்கத்துக்கு கொண்டாட்டம்

அமெரிக்க அரசு, ஸ்டிமுலஸ் பேக்கேஜ்களை அறிவித்தால், அது தங்கத்தின் விலை அதிகரிக்க உதவியாக இருக்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஸ்டிமுலஸ் பேக்கேஜை அறிவிக்க வேண்டும் என ட்விட்டரில் வலியுறுத்தியது, ஸ்டிமுலஸ் குறித்த நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. எனவே அமெரிக்கா விரைவில் ஸ்டிமுலஸை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இது நாள் வரை ‘ஸ்டிமுலஸ் வரும் ஆனால் வராது' என்று இழுத்தடிக்கப்பட்டதும், தங்கம் விலை தடுமாற்றத்தில் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகச் சொல்லலாம்.

SPDR Gold Trust

SPDR Gold Trust

உலகின் மிகப் பெரிய கோல்ட் ட்ரஸ்டான SPDR Gold Trust-ன் தங்க கை இருப்பு, கடந்த சில நாட்களாக இறக்கம் கண்டு வருகிறது. கடந்த 1 அக்டோபர் 2020 அன்று, இந்த ட்ரஸ்டின் தங்க கையிருப்பு 1,276.19 டன்னாக இருந்தது, நேற்று (07 அக்டோபர் 2020) 1,271.52 டன்னாக குறைந்து இருக்கிறது. ஆக தங்கத்தில் முதலீடு குறைந்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது தங்கம் விலை தடுமாற்றத்துக்கு இன்னொரு முக்கிய காரணமாக இருக்கிறது எனலாம்.

இப்ப தங்கம் வாங்க நல்ல நேரமா

இப்ப தங்கம் வாங்க நல்ல நேரமா

தங்கம் தொடர்ந்து விலை சரிவதும், தடுமாறுவதும் தெளிவாகத் தெரிகிறது. இது தான் குறைந்தபட்ச விலையா? என்று கேட்டால் யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், கோட்டக் செக்யூரிட்டீஸ் சொல்வது போல, தங்கம் விலை கணிசமாக இறங்கும் போது எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை வாங்குவது அல்லது முதலீடு செய்வது நல்லது.

$1,840 சப்போட் - தங்கம் விலை அதிகரிக்குமா?

$1,840 சப்போட் - தங்கம் விலை அதிகரிக்குமா?

சர்வதேச தங்கம் விலை, 1,840 டாலரை சப்போர்ட் எடுத்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சர்வதேச தங்கம் விலை 1,920 டாலரைக் கடந்து வர்த்தகமாக வேண்டும். அப்போது தான் தங்கம் புதிய விலை உச்சங்களைத் தொடும் என்கிறது ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் கம்பெனி.

எப்போது அதிகரிக்கும்

எப்போது அதிகரிக்கும்

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, 1,900 டாலரைக் கடந்து அழுத்தமாக வர்த்தகமாக வேண்டும். அப்போது தான் தங்கத்தில் விலை ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் என பல அன்லிஸ்ட்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே தங்கத்தின் விலை 1,900 டாலரைக் கடக்கும் வரை காத்திருங்கள். ஸ்டிமுலஸ் பேக்கேஜ், உலக பொருளாதார சூழல்களை எல்லாம் பார்க்கும் போது, விரைவில் தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

2,300 - 3,000 டாலர் வரை அதிகரிக்கலாம்

2,300 - 3,000 டாலர் வரை அதிகரிக்கலாம்

உலகின் முன்னணி நிதி நிறுவனங்களான க்ரெடிட் சூசி (Credit Suisse), கோல்ட் மேன் சாக்ஸ் (Goldman Sachs) போன்ற கம்பெனிகள், தங்கத்தின் விலை 2,300 டாலர் வரை அதிகரிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,000 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. எனவே தங்கம் வாங்க விரும்புபவர்கள், நல்ல தருணத்தில் விலை குறையும் போது எல்லாம் வாங்குங்கள். நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price falling for third day consecutively can we buy or invest in gold now

The Gold price is falling for the third day consecutively. Can we buy gold or invest money in gold to earn some decent return.
Story first published: Thursday, October 8, 2020, 14:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X