Gold:தங்கம் விலையானது கடந்த வார இறுதியில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. எனினும் 1900 டாலர்களை உடைக்காமல் கீழாகவே காணப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை எட்டி வந்த நிலையில், இது மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆன ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 1900 உடைக்காமல் மேலேயே வர்த்தகமாகி வந்த நிலையில், இது தற்போது 1900 டாலர்களுக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது.
பாதுகாப்பு புகலிடம்?
தொடர்ந்து தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது வலுவாக காணப்படும் நிலையில், அது தங்கம் விலையிலும் எதிரொலித்துள்ளது. கூடாக அமெரிக்காவின் பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளது. இதன் காரணமாகவே தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் காணாமல் தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.
தங்கம் தேவை
தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது நடப்பு ஆண்டில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். எப்படியிருப்பினும் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 2% மேலாக சரிவடைந்த நிலையில், இது இன்னும் குறையுமா? வாங்கி வைக்கலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் டாலர் மதிப்பு, பத்திர சந்தை காரணமாக தங்கம் விலையானது சற்றே குறைய காரணமாக அமையலாம். மொத்தத்தில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களின் கவனம்
அமெரிக்க மத்திய வங்கியின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், அமெரிக்கா சீனா பிரச்சனை, அமெரிக்காவின் வேலை சந்தை என்பவற்றை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஆக இது வரவிருக்கும் நாட்களில் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 7.05 டாலர்கள் அதிகரித்து, 1886.60 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலை அவுன்ஸூக்கு, சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.52% அதிகரித்து, 22.358 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 151 ரூபாய் அதிகரித்து, 57,106 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 182 ரூபாய் அதிகரித்து, 67,581 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 5373 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 42,984 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 5862 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து, 58,620 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு விலை மாற்றம் செய்யப்படாமல், 74 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 74,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

கச்சா எண்ணெய் சரிவு: இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு! டிரம்ப், ஈரான் மோதல் என்ன ஆனது?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications