வெச்சி செய்யும் தங்கம் விலை! பவுன் விலை என்ன? இனி சாதாரண மக்கள் வாங்க முடியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில், சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையே 40,750 ரூபாய்க்கு தான் விற்பனை செய்தார்கள்.

ஆனால் தற்போது, அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை சுமாராக 51,180 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.

ஆக இந்த 6 மாத காலத்தில் சுமாராக 25 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது. இப்படி அசுரத் தனமாக விலை அதிகரிக்கும் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன? டீலர்கள் என்ன விலைக்கு தங்கத்தை விற்கிறார்கள் வாருங்கள் பார்ப்போம்.

தங்க டீலர்கள்

தங்க டீலர்கள்

இத்தனை நாட்களாக, குறிப்பாக இந்த 2020-ம் ஆண்டில் தங்கத்தை தள்ளுபடி விலையில் விற்றுக் கொண்டிருந்த தங்க டீலர்கள், தற்போது கூடுதல் விலைக்கு தங்கத்தை விற்கிறார்களாம். தங்க இறக்குமதி குறைந்து இருப்பது, தங்க கடத்தல்கள் கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டு இருப்பது போன்ற காரணங்களால் தங்க டீலர்கள் தற்போது கூடுதல் விலைக்கு விற்பதாகச் சொல்கிறார் ஒரு மொத்த விலை தங்க வியாபாரி ஹர்ஷத் அஜ்மிரா.

முந்தைய தள்ளுபடி VS தற்போதைய விலை

முந்தைய தள்ளுபடி VS தற்போதைய விலை

முன்பு ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு சுமாராக 22 டாலர் வரை தள்ளுபடி விலையில் விற்ற தங்க டீலர்கள், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 3 டாலர் வரை கூடுதலாக வசூலிக்கிறார்களாம். இது போக உள் நாட்டில் 12.5 % இறக்குமதி வரி + 3 சதவிகிதம் விற்பனை வரி வேறு செலுத்த வேண்டி இருக்கிறதாம். இந்தியாவில் மட்டும் இன்றி, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தங்க டீலர்கள் அதிக விலையில் தங்கத்தை விற்கத் தொடங்கி இருக்கிறார்களாம்.

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 டாலரை விடுவதாகத் தெரியவில்லை. கடந்த வாரத்தில் மீண்டும் ஒரு பயங்கர உச்சமாக 1,818 டாலரைத் தொட்டதும் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆக சர்வதேச தங்கம் விலை இப்போதைக்கு இறக்கம் காணப் போவதாகத் தெரியவில்லை. சரி எம் சி எக்ஸ் தங்கத்தின் விலை என்ன?

எம் சி எக்ஸ் தங்கம் விலை

எம் சி எக்ஸ் தங்கம் விலை

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸில் ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை தற்போது 48,950 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரத்தில், இதே ஆகஸ்ட் காண்டிராக்டின் விலை பல நாட்கள் 49,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விலை ஏற்றம் உறுதி

விலை ஏற்றம் உறுதி

ஆக சர்வதேச அளவில் 1,800 டாலர் விலை நிலை பெறுவதும், எம் சி எக்ஸில் 49,000 ரூபாய் கிட்டத்தட்ட நிலை பெறுவதும், தங்கத்தின் விலை மேற்கொண்டு இறங்க வாய்ப்பு இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், சென்னையில் தங்கம் விலை அதிகரிக்க, ரூபாய் மதிப்பு சரிவு ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் மழை காலத்தில் சரியும் நிலத்தைப் போல, தட தடவென சரிந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஒரு டாலருக்கு 75.20 ரூபாய் என்கிற கணக்கில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 74.64 ரூபாய் வரை வலுவடைந்த ரூபாய் மதிப்பு, தற்போது மீண்டும் 75.20 ரூபாய் வரை சரிந்து இருக்கிறது. இது சென்னை தங்கம் விலையிலும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

சென்னையில் தங்கம் விலை 24 கேரட்

சென்னையில் தங்கம் விலை 24 கேரட்

நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருந்த, நம் சென்னை நகரத்தில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 51,180 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆக ஒரு கிராமுக்கு 5,118 ரூபாய் மேனிக்கு பவுனுக்கு 40,944 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.

சென்னையில் தங்கம் விலை 22 கேரட்

சென்னையில் தங்கம் விலை 22 கேரட்

நம் சிங்காரச் சென்னையில், 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,900 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். ஆக 22 கேரட் தங்கத்தை கிராமுக்கு 4,690 ரூபாய் மேனிக்கு 37,520 ரூபாய்க்கு ஒரு பவுன் தங்கத்தை விற்று இருக்கிறார்கள். இப்படியே போனால் கூகுளில் தான் தங்கத்தைப் பார்க்க முடியும். சாமானியர்களுக்கு தற்போது வீடு வாங்குவது எப்படி ஒரு மாபெரும் கனவாகவே இருக்கிறதோ, அதே போல தங்கம் வாங்குவதும் மிகப் பெரிய கனவாகத் தான் இருக்கும்.

ஏன் இந்த கிடு கிடு விலை ஏற்றம்

ஏன் இந்த கிடு கிடு விலை ஏற்றம்

வழக்கம் போல கொரோனா வைரஸ் நோய் தாக்கம் அதிகரிப்பது தங்கம் விலை ஏற்றத்துக்கு பக்க பலமாக இருக்கிறது. அதோடு, அமெரிக்கா சீனா பிரச்சனை, இந்தியா சீனா பிரச்சனை போன்றவைகளும் தங்கம் விலையை கீழே சரிய விடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. போதாக்குறைக்கு இந்திய ரூபாய் மதிப்பு வேறு பலவீனமடைந்து கொண்டே இருக்கிறது. எனவே தங்கம் பெரிய தடை இன்றி அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இனி தங்கம் என்ன ஆகும்

இனி தங்கம் என்ன ஆகும்

பல நாடுகள் கொரோனாவில் இருந்து மீள, அரசாங்கங்கள் ஊக்கத் தொகை மற்றும் உதவித் தொகைகளை அறிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதோடு பல நாட்டு கரன்ஸிகளும் பலவீனமாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம் என்கிறார்கள். எப்படியும் 1,900 டாலர் வரையாவது எளிதாக விலை ஏற்றம் காணும் என்கிறார்கள்.

பொருளாதாரம் தவிப்பு

பொருளாதாரம் தவிப்பு

சர்வதேச பன்னாட்டு நிதியம் 4.9 % வரை உலக பொருளாதாரம் சரியலாம் எனக் கணித்து இருக்கிறது. அதோடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரங்கள் எல்லாம் சரமாரியாக சரியலாம் எனவும் பல செய்திகள் சொல்கின்றன. அதோடு இந்த பொருளாதார அடியில் இருந்து மீள்வதற்கும் கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவும் சொல்லி இருக்கிறார்கள். அதுவரை தங்கம் தட்டித் தூக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முதளீட்டாளர்கள் தங்கத்தில் குவிந்து கொண்டே தான் இருப்பார்கள். விலை அதிகரித்துக் கொண்டே தன இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is continuously rising due to many factors

The gold price is continuously rising due to many factors like coronavirus, Geo political tension, Currency weakness.
Story first published: Monday, July 13, 2020, 11:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X