3-வது நாளாக சூப்பர் சரிவில் தங்கம் விலை! Gold Price எதிர்காலத்தில் என்ன ஆகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதன் பொருளாதாரம் பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்தத் தொடங்கியதில் இருந்தே, இந்த மஞ்சள் உலோகத்தின் மதிப்பு மட்டும் பெரிதாக சரியவில்லை. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் தங்கம் விலை பெரிய சரிவைக் காணவில்லை.

"எங்கள் திருமணத்தின் போது பவுன் விலையே 500 - 1,000 ரூபாய்க்கு விற்றது. அப்போதே எப்படியாவது ஒரு 50 பவுன் தங்கத்தை வாங்கிப் போட்டு இருந்தால், இன்று நல்ல லாபம் பார்த்து இருக்கலாம்" என நம் பெறோர்கள் அல்லது உறவினர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருப்போம்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு,

மேக்ரோ பொருளாதார காரணிகள்,

உலக பொருளாதாரத்தின் வலிமை,

சர்வதேச தங்கம் விலை,

 

உலக பங்குச் சந்தைகளின் செயல்பாடுகள்... என பல காரணங்கள், தங்கத்தின் விலை மாற்றத்துக்கு காரணமாக இருக்கின்றன.

எதை எல்லாம் பார்க்கப் போகிறோம்

எதை எல்லாம் பார்க்கப் போகிறோம்

சரி இன்றைய ஆபரணத் தங்கம் விலை மற்றும் நேற்றைய சர்வதேச தங்கம் விலை & எம் சி எக்ஸ் தங்கம், வெள்ளி விலை நிலவரங்களை விரிவாகப் பார்ப்போம். அதோடு எதிர்காலத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பதையும் பார்ப்போம். முதலில் இன்றைய ஆபரணத் தங்கம் விலையில் இருந்து தொடங்குவோம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 24 கேரட்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 24 கேரட்

தமிழகத்தின் தலைநகராகவும், பல தரப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுக்கும் தாய் நகரமாகவும் இருக்கும் சென்னை மாநகரத்தில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 18 ஆகஸ்ட் 2020 அன்று 56,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இதன் விலை சரிந்து இன்று 55,060 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை, கடந்த 3 நாட்களில் 1,300 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

22 கேரட் ஆபரணத் தங்கம் விலை
 

22 கேரட் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில், 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, 18 ஆகஸ்ட் 2020 அன்று 51,670 ரூபாய்க்கு விற்றார்கள். இன்று 50,480 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். ஆக 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 3 நாட்களில் 1,190 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. அடுத்து இந்தியாவின் எம் சி எக்ஸ் தங்கத்தைப் பார்ப்போம்.

தங்கம் விலை MCX

தங்கம் விலை MCX

அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்று (21 ஆகஸ்ட் 2020) 52,001 ரூபாய்க்கு நிறைவடைந்து இருக்கிறது. 18 ஆகஸ்ட் 2020 அன்று, அதிகபட்சமாக 53,999 ரூபாய் வரைத் தொட்டு வர்த்தகமான இந்த தங்க காண்டிராக்ட், கடந்த 3 நாட்களில், தன் உச்ச விலையில் இருந்து 1,998 ரூபாய் சரிந்து இருக்கிறது.

MCX வெள்ளி-க்கும் அடி தான்

MCX வெள்ளி-க்கும் அடி தான்

தங்கத்தின் தம்பி போலவே இருக்கும் வெள்ளி, கடந்த 18 ஆகஸ்ட் 2020-ல் அதிகபட்சமாக 71,350 ரூபாயைத் தொட்டு வர்த்தகமான, செப்டம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி விலை, நேற்று (21 ஆகஸ்ட் 2020) 66,954 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கடந்த 3 நாட்களில், வெள்ளி விலை தன் உச்ச விலையில் இருந்து 4,396 ரூபாய் சரிந்து இருக்கிறது.

இண்டர்நேஷனல் தங்கம் விலை

இண்டர்நேஷனல் தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, கடந்த 18 ஆகஸ்ட் 2020 அன்று 2,002 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அடுத்த நாளே (19 ஆகஸ்ட்) 1,928 டாலர் வரை சரிந்தது. ஆனால் 20 ஆகஸ்ட் அன்று 1,947 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று (21 ஆகஸ்ட் 2020) 1,940 டாலரைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆனால் நேற்றைய வர்த்தக நேரத்தில் குறைந்தபட்சமாக 1,911 டாலர் வரைத் தொட்டு வர்த்தகமானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எகிறிய டாலர் & அமெரிக்க வியாபாரம்

எகிறிய டாலர் & அமெரிக்க வியாபாரம்

கடந்த சில நாட்களாக ஏன் தங்கம் விலை இப்படி சரிகிறது..? அமெரிக்க டாலர் கரன்ஸியின் மதிப்பு, ஓரளவுக்கு அதிகரித்து இருக்கிறதாம். அதோடு அமெரிக்க பொருளாதாரத்தில், வியாபார நடவடிக்கைகளும் மெல்ல பழைய நிலைக்கு வரத் தொடங்கி இருக்கின்றனவாம். இது சர்வதேச அளவில் தங்கம் விலை ஏற்றத்துக்கு தடை போடும் முக்கிய காரணமாக இருந்து இருக்கிறது.

டாப் கியரில் பங்குச் சந்தைகள்

டாப் கியரில் பங்குச் சந்தைகள்

அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை & எஸ் & பி 500, நேற்று (21 ஆகஸ்ட் 2020) தன் புதிய வாழ்நாள் உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன. அமெரிக்காவில் வீடுகள் விற்பனையும் ஓரளவுக்கு நடந்து இருக்கிறதாம். இதனால் டாலர் மெல்ல வலுவடைந்து தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸுக்கு மருந்து

கொரோனா வைரஸுக்கு மருந்து

பல நாட்டுப் பங்குச் சந்தைகளும், கொரோனா வைரஸ் பிரச்சனையால், பலமாக விலை இறக்கம் கண்டன. அந்த வீழ்ச்சியில் இருந்து, இப்போது பங்குச் சந்தைகள், கணிசமாக மீண்டு வந்து இருக்கின்றன. அதோடு கொரோனாவுக்கு மாற்று மருந்து விரைவில் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையும் பொது வெளியில் அதிகரித்து வருகிறது. எனவே தங்கத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் எல்லாம், நிறைய பிராபிட் புக்கிங் செய்து வெளியேறி இருக்கலாம். இதுவும் தங்கம் விலை வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

வாய்ப்பு கிடைக்கும் போது வாங்குங்கள்

வாய்ப்பு கிடைக்கும் போது வாங்குங்கள்

தங்கம், இப்போதும் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வாரத்தில் எம் சி எக்ஸ் தங்கம் விலை கன்சாலிடேட் ஆகி இருக்கிறது. தங்கத்தின் அடிப்படைகள் பெரிதாக மாறவில்லை. எனவே நீண்ட காலத்துக்கு தங்கம் விலை 50,000 ரூபாய் பக்கம் வரும் போது முதலீடு செய்யச் சொல்கிறார் எம்கே குளோபல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ரிசர்ச் பிரிவின் தலைவர் ராகுல் குப்தா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is falling down consecutively for three days

The Chennai gold price, International gold price and the MCX gold price has been falling consecutively.
Story first published: Saturday, August 22, 2020, 15:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X