தடாலடி சரிவில் தங்கம்! Gold விலை சரிவுக்கு இத்தனை காரணங்களா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

2020-ம் ஆண்டை மட்டும் இப்போது கணக்கிட்டு பார்ப்போமே! சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 01 ஜனவரி 2020 அன்று 40,750 ரூபாயாக இருந்தது. 19 ஆகஸ்ட் 2020 அன்று 56,240 ரூபாய்க்கு அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தை விற்று இருக்கிறார்கள். ஆக இந்த எட்டு மாத காலத்துக்குள், ஆபரணத் தங்கம் சுமாராக 38 % விலை அதிகரித்து இருக்கிறது.

எல்லா வகையான தங்கத்துக்கும் அடிப்படையாக இருக்கும் சர்வதேச தங்கம் விலை, கடந்த 19 மார்ச் 2020 அன்று 1,471 டாலருக்கு நிறைவடைந்தது. அதன் பின் அதிகபட்சமாக 2,075 டாலர் வரைத் தொட்டு வர்த்தகமானது. ஆக 41 % விலை ஏற்றம். சரி இன்றைய தங்க விலை விவரங்கள் என்ன?

ஒரு அவுன்ஸுக்கு சர்வதேச தங்கம் விலை
 

ஒரு அவுன்ஸுக்கு சர்வதேச தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, சர்வதேச அளவில் இன்று 1,950 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைக்கு 1,986 டாலருக்கு நிறைவடைந்ததை விட இன்று விலை சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 11 ஆகஸ்ட் 2020 அன்று தங்கம் நிறைவடைந்த 1,911 டாலரில் இருந்து 39 டாலர் விலை அதிகமாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை இறங்கு முகமாக இருக்கிறது என்றால், இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் சந்தையிலும் அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை இறக்கம் கண்டு இருக்கிறது. நேற்று 52,622 ரூபாய்க்கு நிறைவடைந்த எம் சி எக்ஸ் தங்கம் இன்று 52,225 ரூபாய் வரை சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சரிவில் எம் சி எக்ஸ் வெள்ளி விலை

சரிவில் எம் சி எக்ஸ் வெள்ளி விலை

அதே எம் சி எக்ஸ் சந்தையில், செப்டம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்று 67,963 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 67,244 ரூபாய் வரை சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. வெள்ளிக்கும் நேரம் சரி இல்லை போலிருக்கிறதே.

ஆபரணத் தங்கம் - சென்னை விலை
 

ஆபரணத் தங்கம் - சென்னை விலை

சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 56,240 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்து இருக்கிறார்கள். (12 ஆகஸ்ட் 2020 அன்று 54,680-க்கு விற்றார்கள்). அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 51,560 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். (12 ஆகஸ்ட் 2020 அன்று 50,130-க்கு விற்றார்கள்). இந்த விலை சரிவுக்கு காரணங்கள் என்ன?

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்

தங்கத்தில் பணத்தை முதலீடு செய்பவர்கள் மற்றும் வர்த்தகம் செய்பவர்கள் அதிகம் எதிர்பார்த்த, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்ட மினிட்ஸ் (Meeting Minutes) வெளியாகி இருக்கிறது. அதில் வரும் செப்டம்பர் மாத கூட்டத்தில், வட்டி விகிதங்கள் குறித்து மாறுபட்ட முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தங்கத்தின் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறது.

வலுவடைந்த டாலர்

வலுவடைந்த டாலர்

அதே போல, அமெரிக்க டாலரும் கொஞ்சம் பலமடைந்து இருப்பதால், மற்ற நாட்டு கரன்ஸி வைத்திருப்பவர்களுக்கு, தங்கத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. இது, தங்கத்தின் விலை ஏற விடாமல் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு முக்கிய காரணாக பார்க்கப்படுகிறது. இன்று டாலர் இண்டெக்ஸ் 0.2 % ஏற்றம் கண்டு இருக்கிறது.

வருமானம் உயர்வு

வருமானம் உயர்வு

அமெரிக்க ஃபெடரல் வங்கி வெளியிட்டு இருக்கும் கூட்ட மினிட்ஸில், அரசின் கடன் பத்திரங்களின் வருமானத்தைக் குறித்து கொஞ்சம் சாதகமாகப் பேசி இருக்கிறது. இது அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வருவது மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதாக இருக்கிறது. டிரஷரி பில்களின் வருமானம் அதிகரித்தால் தானாக, தங்கம் விலை குறையத் தானே செய்யும். அது தான் நடந்து கொண்டு இருக்கிறது.

முதலீட்டாளர்கள் நம்பிக்கையின்மை

முதலீட்டாளர்கள் நம்பிக்கையின்மை

எதிர்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகுமோ என்கிற அச்சத்தில், முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் தங்கத்தில் முதலீடு செய்யாமல் தயங்குகிறார்கள். இதை தங்க இ டி எஃப் ஃபண்டுகளில் பார்க்க முடிகிறதாம். ஆக தங்கத்துக்கான டிமாண்ட் குறைந்து இருக்கிறது. எனவே தங்கம் விலை தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

அடுத்து என்ன

அடுத்து என்ன

சரி இப்போதைக்கு தங்கம் விலை குறைவது இருக்கட்டும், எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? ஜிம் ராஜர்ஸ், எதிர்காலத்தில் தங்கம் விலை அதிகரிக்க, நிறைய வாய்ப்பு இருப்பதாக கணித்து இருக்கிறார். அவர் கணிப்பை உறுதிப்படுத்தும் விதத்தில், உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான, கோல்ட்மேன் சாக்ஸ் கூட, அடுத்த 12 மாதங்களில் தங்கம் விலை 2,300 டாலரைத் தொடலாம் என, சமீபத்தில் கணித்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is falling down continuously due to US fed Investor fear about gold future

Gold price has been falling down continuously from its recent high, due to US fed Investor fear about gold future.
Story first published: Thursday, August 20, 2020, 10:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X