வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை! அசரடிக்கும் வெள்ளி விலை! நாம எல்லாம் தங்கத்த வாங்குனா மாதிரி தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் மனிதனின் அதிகமான அன்புக்கும், பாசத்துக்கும் உரித்தான உலோகம். தங்கம் வாங்க வசதி இல்லாதவர்களின் ஏழைப் பங்காளன் என்றால் அது வெள்ளி.

ஆனால் இப்போது தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைப் பார்த்தால், இனி இவைகளை எல்லாம் அருங்காட்சியகத்தில் தான் பார்க்க வேண்டி இருக்கும் போல் இருக்கிறது.

அந்த அளவுக்கு விலை உச்சத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. வாருங்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைப் பார்ப்போம்.

முதல் முறை

முதல் முறை

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸில் 10 கிராம் தங்கத்துக்கான ஆகஸ்ட் 2020 காண்டிராக்வின் விலை 50,085 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இந்தியாவின் ஃப்யூச்சர் சந்தையில் தங்கம் 50,000 ரூபாயைக் கடப்பது இதுவே முதல் முறை. ஆக இந்தியாவின் தங்கம் விலை ஏற்றத்தை எம் சி எக்ஸ் தங்கம் விலை உறுதி செய்கிறது.

எம் சி எக்ஸ் வெள்ளி விலை

எம் சி எக்ஸ் வெள்ளி விலை

அதே போல எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமகும், ஒரு கிலோ வெள்ளிக்கான செப்டம்பர் மாத காண்டிராக்டின் விலை இன்று காலையில் அதிகபட்சமாக 61,255 ரூபாய் வரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. வெள்ளிக்கே இந்த மவுசு என்றால் தங்கம் விலை தாறு மாறாக ஏறத் தானே செய்யும்.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சத்தம் காட்டாமல் 1,800 டாலர் வரைத் தொட்ட தங்கம் விலை, இன்று 1,865 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத உச்ச விலை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பல காரணங்கள்

பல காரணங்கள்

டாலர் பலவீனமாக இருப்பது, கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, நிறைய நிதி உதவிகளை பல நாட்டு அரசாங்கங்கள் அறிவிப்பது போன்றவைகளால் தங்கம் விலை ஏறிக் கொண்டே போகிறது. ஆக கோல்ட் மேன் சாக்ஸ் சொன்னது போல தங்கம் விலை அசால்டாக 2,000 டாலரை தொட்டு விடும் போலிருக்கிறதே.

சென்னையில் தங்கம் விலை 24 கேரட்

சென்னையில் தங்கம் விலை 24 கேரட்

தன்னை நம்பி வருபவர்களை, வாழ வைக்கும் சென்னை மாநகரத்தில், இன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 52,200 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது. ஆக கிராமுக்கு 5,220 ரூபாய் மேனிக்கு ஒரு பவுன் 24 கேரட் தங்கம் விலை 41,760 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இது வரலாறு காணாத உச்ச விலை.

22 கேரட் சென்னையில் தங்கம் விலை

22 கேரட் சென்னையில் தங்கம் விலை

அதே சென்னை மாநகரத்தில் 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 47,850 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். கிராமுக்கு 4,785 ரூபாய் மேனிக்கு, 22 கேரட் ஒரு பவுன் தங்கம் விலை 38,280 ரூபாய்க்கு விற்கிறார்கள். 22 கேரட் தங்கத்துக்கு இது வரலாறு காணா உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியே விலை அதிகரித்தால், நாம் எல்லாம் வீட்டுக் கடன் வாங்கித் தான் தங்கத்தை வாங்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is in historical high silver price also surged

The Chennai gold price is in its new historical high and the silver price also surging up.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X