தங்கம் வாங்குபவர்களுக்கு இது செம சான்ஸ் போலருக்கே! பவுன் விலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வந்தாரை வாழ வைக்கும் சென்னையில், கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கப்பட்டது 24 கேரட் 10 கிராம் தங்கம். பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 ரூபாய்க்கு விற்க்கப்பட்டது.

 

செப்டம்பர் 04, 2019 அன்று இதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 41,070 ரூபாய்க்கு விற்றார்கள். 06 மார்ச் 2020 அன்று 46,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது 24 கேரட் 10 கிராம் தங்கம்.

20 ஜூன் 2020 அன்று, சென்னையில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 50,270 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 29 ஜூலை 2020 அன்று 55,310 ரூபாயில் விற்பனை ஆனது.

உச்ச விலை

உச்ச விலை

இப்படி தொடர்ந்து விலை ஏற்றம் கண்ட தங்கம், கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 54,200 ரூபாய்க்கு விற்றார்கள். இது தான் சென்னையில், ஆபரணத் தங்க விலையின் உச்சம்.

இப்போது நிலை என்ன 24 கேரட் ஆபரணத் தங்கம்

இப்போது நிலை என்ன 24 கேரட் ஆபரணத் தங்கம்

நேற்று (06 செப் 2020), சென்னையில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 53,320 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். உச்ச விலையில் இருந்து கணக்கிட்டால் (59,130 - 53,320) = 5,810 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. ஆக பவுனுக்கு (8 கிராம் தங்கம்) 42,656 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது.

22 கேரட் ஆபரணத் தங்கம் இப்போதைய நிலை என்ன
 

22 கேரட் ஆபரணத் தங்கம் இப்போதைய நிலை என்ன

சென்னையில் நேற்று (06 செப் 2020), 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 48,890 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். உச்ச விலையில் இருந்து கணக்கிட்டால் (54,200 - 48,890) = 5,310 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. ஆக பவுனுக்கு (8 கிராம் தங்கம்) 39,112 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது.

சர்வதேச தங்கம் விலையிலும் சரிவு

சர்வதேச தங்கம் விலையிலும் சரிவு

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, கடந்த 06 ஆகஸ்ட் 2020 அன்று உச்ச விலையாக 2,063 டாலருக்கு நிறைவடைந்தது. கட்ந்த 01 செப்டம்பர் 2020 அன்று, 1,970 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. தற்போது, 1,928 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சர்வதேச தங்கம்.

எம் சி எக்ஸ் தங்கம் விலை

எம் சி எக்ஸ் தங்கம் விலை

இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸில், அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று அதிகபட்சமாக 56,191 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. 01 செப் 2020 அன்று 51,502 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 50,762 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

வெள்ளி விலை - எம் சி எக்ஸ்

வெள்ளி விலை - எம் சி எக்ஸ்

டிசம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் விலை, கடந்த 07 ஆக 2020 அன்று 79,723 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. 01 செப் 2020 அன்று 70,890 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று (07 செப் 2020) 67,836 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

எல்லா தங்கமும் செப்டம்பரில் சரிவு

எல்லா தங்கமும் செப்டம்பரில் சரிவு

இப்படி சென்னை ஆபரணத் தங்கம் விலை தொடங்கி, சர்வதேச தங்கம் விலை, எம் சி எக்ஸ் தங்கம் விலை என எல்லா தங்கத்தின் விலையும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து, செப்டம்பரில் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இது தங்கம் வாங்குபவர்களுக்கு சூப்பர் சான்ஸ் போல தெரிகிறதே!

கோட்டக் செக்யூரிட்டீஸ் கருத்து

கோட்டக் செக்யூரிட்டீஸ் கருத்து

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. அதோடு உலக பொருளாதார வளர்ச்சியிலும், இந்த கொரோனா வைரஸின் தாக்கம் பலமாகவே இருக்கிறது. இவைகள் தான் தங்கத்தின் விலை பெரிய சரிவைக் காணாமல் சப்போர்ட் செய்து கொண்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ்.

தங்கம் விலைக்கு சப்போர்ட்

தங்கம் விலைக்கு சப்போர்ட்

கடந்த வெள்ளிக்கிழமை (04 செப் 2020), அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் (Dow Jones) பங்குச் சந்தை 0.56 % இறக்கம் கண்டு இருக்கிறது. எஸ் & பி 500 (S & P 500) சந்தை 0.81 % சரிந்து இருக்கிறது. நாஸ்டாக் (NASDAQ) 1.27 சதவிகிதம் அடி வாங்கி இருக்கிறது. இப்படி அமெரிக்க சந்தைகள் அடி வாங்குவதும் தக்கம் விலை, பெரிய அளவில் வீழ்ச்சி காணாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் எனலாம்.

தங்கம் விலை வீழ்ச்சி Vs டாலர் இண்டெக்ஸ்

தங்கம் விலை வீழ்ச்சி Vs டாலர் இண்டெக்ஸ்

கடந்த 31 ஆக 2020 அன்று 92.14 புள்ளிகளாக இருந்த டாலர் இண்டெக்ஸ், கடந்த 02 செப் 2020 அன்று 92.84 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. இன்று (07 செப் 2020) 92.94 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. டாலர் இண்டெக்ஸ் அதிகரிக்கிறது என்றால், டாலர் பலமடைகிறது என்று பொருள். பொதுவாக டாலர் பலமடைந்தால், தங்கம் விலை இறக்கம் காணச் செய்யும். எனவே, தங்கம் விலை இறக்கம் காண, டாலர் இண்டெக்ஸை ஒரு காரணமாகச் சொல்லலாம்.

தங்கம் விலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்

தங்கம் விலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்

தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் காணத் தொடங்க வேண்டும் என்றால், ஒரு சரியான ட்ரிக்கர் வேண்டும். அந்த ட்ரிக்கர் வந்துவிட்டால் மீண்டும் தங்கம் விலை ஏற்றம் காணத் தொடங்கிவிடும் எனலாம். அமெரிக்க சீன வர்த்தகப் போர், இந்திய சீன பிரச்சனை, கொரோனா வைரஸ், உலக பொருளாதார மந்த நிலை... போன்றவைகள் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு காரணமாக அமையலாம். எதிர்காலத்தில் தங்கம் விலை அதிகரிக்கும் என ஜிம் ராஜர்ஸ் தொடங்கி கோல்ட்மேன் சாக்ஸ் வரைச் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is struggling to move towards august high

The gold price is struggling to move towards august high price. Chennai gold rate and international gold rate and mcx gold rate all had fell down from its august high.
Story first published: Monday, September 7, 2020, 12:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X