Gold: தங்கம் விலையானது கடந்த அமர்வில் சரிவினைக் கண்டிருந்த நிலையில், மீண்டும் இன்று உச்சத்தினை எட்ட ஆரம்பித்துள்ளது. இது வட்டி விகித உயர்வு என்பது விரைவில் முடிவுக்கு வரலாமோ என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது.
இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு 59,000 ரூபாய் என்ற லெவலை எட்டியுள்ளது. இதே வெள்ளி விலையும் 7 வார உச்சத்தினை எட்டியுள்ளது.
இன்று காலை தொடக்கத்திலேயே கேப் அப் ஆகி தொடங்கியுள்ள நிலையில், 10 கிராமுக்கு உச்சமாக 59,283 ரூபாயினை எட்டியது. இதே சர்வதேச ஸ்பாட் சந்தையில் 1976 டாலர் என்ற லெவலிலும் காணப்படுகின்றது.
தங்கம் விலை இன்று எவ்வளவு சரிந்திருக்கு தெரியுமா.. இனியும் குறையுமா.. இது வாங்க சரியான நேரமா?\
டாலரின் மதிப்பு
வெள்ளியின் உச்ச விலையும் இன்று இன்ட்ராடேவில் 69,800 ரூபாயாகவும் தொட்டுள்ளது. இது 7 வார உச்சமாகும். இதே சர்வதேச சந்தையில் 0.25 சதவீதம் குறைந்து அவுன்ஸூக்கு 22.9 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
நிபுணர்கள் தொடர்ந்து இன்றும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம். இது அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் தொடர்ந்து உச்சம் எட்டி வருகின்றது. இது டாலரின் மதிப்பானது வட்டி அதிகரிப்பு என்பது பெரியளவில் இருக்கலாம் என்ற நிலையில் 7 வார குறைந்தபட்ச மதிப்பினை எட்டியுள்ளது.
பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவு
டாலரின் மதிப்பானது 102 என்ற லெவலையும் இழந்துள்ளது. இது கிட்டத்தட்ட 100 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு மீடியம் டெர்ம் மற்றும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம்.பெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை பெரியளவில் அதிகரிக்கலாம். இது தொடர் கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய வங்கியோ இனி அப்படி இருக்க வாய்ப்பில்லை என சிக்னல் கொடுத்திருப்பது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
முக்கிய லெவல்
தங்கத்தின் உடனடி சப்போர்ட் லெவல் என்பது உடனடியாக 1950 டாலர்களை நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், இதனை உடைத்தால் 1920 டாலர்களை எட்டலாம் என கணித்துள்ளனர். இதே மேலே ஏற்றம் கண்டால் 1980 டாலர்களை எட்டலாம் என்றும், இதனை உடைத்தால் 2010 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியும் இருக்கலாம்
அடுத்த சில மாதங்களில் அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கை என்பது தொடரலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக மெதுவாக தங்கம் விலையானது 1850 - 1875 டாலர்களையும் எட்டலாம் என கணித்துள்ளனர். பணவீக்கம் என்பது மத்திய வங்கியின் முக்கிய கவலையாக இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.54% அதிகரித்து, 1979.85 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலை அவுன்ஸூக்கு 1.53% அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 1.53% அதிகரித்து, 23.135 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கேப் அப் ஆகி மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் மற்றும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக, 10 கிராமுக்கு, 479 ரூபாய் அதிகரித்து, 59,248 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கேப் அப் ஆகி மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 591 ரூபாய் அதிகரித்து, 69,900 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. இதுவும் மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து, 5540 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, 44,320 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 76 ரூபாய் அதிகரித்து, 6043 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 608 ரூபாய் அதிகரித்து, 60,430 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று பலத்த ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1.40 ரூபாய் அதிகரித்து, 75.40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1400 ரூபாய் அதிகரித்து, 75,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications