கொரோனா காலகட்டத்திலும் லாபம் கொடுத்துக் கொண்டுள்ள ஒரே முதலீடு தங்கம் தான். இப்படி ஒரு முதலீடு இனி வரும் காலட்டங்களிலும் அதிக லாபம் கொடுக்கும் என்றால் அது நல்ல விஷயம் தானே.
ஆனால் இது பிசிகல் தங்கத்திலும் எதிரொலிக்கலாம் என்பதும் மறுக்கமுடியா உண்மை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது, தங்கம் விலையானது அவ்வப்போது சரிந்தாலும், ஒட்டுமொத்த அதிகரித்தே காணப்பட்டது.
சரிவில் தங்கம் விலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்பட்டது. இது தொடர்ந்து அதிகரித்து வந்த அமெரிக்காவின் பத்திர சந்தையின் எதிரொலியாக, டாலரின் மதிப்பானது அதிகரித்து காணப்பட்டது. இதனால் தங்கம் விலையானது சரிவினைக் நோக்கி சென்றது.
கொரோனா பாதிப்பு
இன்று உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் பிசிகல் தங்கத்தின் தேவையானது குறையத் தொடங்கியிருந்தாலும், முதலீட்டு தங்கத்தின் தேவையானது அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக இனி வரும் காலத்தில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
தங்கம் விலையானது ஏற்றம் காணும்பட்சத்தில் இன்னும் 12 மாதங்களில் 56,500 ரூபாய் வரையில் ஏற்றம் காணலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். எம்சிஎக்ஸ் தங்கம் தற்போது 10 கிராமுக்கு 47,500 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது. இது அதிகரித்து வரும் கொரோனா தாக்கமானது, நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். இதனால் இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய காரணிகள்
பணவீக்கம் பற்றிய எதிர்பார்ப்பு, பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகள், அதிகரித்து வரும் கடன், அரசியல் பதற்றங்கள், அமெரிக்க சீன பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ளன. இதனால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தில் அடுத்த இலக்குகள்
ஃபண்ட் மேனேஜர்ஸ் தங்களது போர்ட்போலியோவில், தங்கத்தின் இருப்பினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி வருகின்றது. இது 2050 - 2200 டாலர்கள் வரையில் செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய சந்தையில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் 50,000 ரூபாயினையும், அடுத்த 12 - 15 மாதங்களில் 56,500 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க பத்திரமாகவும் வாங்கலாம்
இதே மற்றொரு நிபுணர் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் 51,700 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்துள்ளார். ஆக தங்கத்தினை வாங்க இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. எம்சிஎக்ஸ் சந்தையில் விருப்பமில்லாதவர்கள் நாளை ரிசர்வ் வங்கியில் தங்க பத்திரம் வெளியாகவுள்ளது,
இது குறித்து https://tamil.goodreturns.in/personal-finance/gold-bond-to-open-for-subscription-on-coming-may-17-2021-check-here-full-details-023590.html என்ற கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம். இதனை வாங்கி வைத்தும் லாபம் பெறலாம்.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை என்ன? அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க முடியுமா?

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்!! அட்சய திருதியை-க்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் விலை சரிவு!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!



Click it and Unblock the Notifications