செம சரிவைக் கண்ட தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு குறஞ்சிருக்கு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம். இன்று வாரன் பஃபெட் தொடங்கி உள்ளூரில் நேற்று டிமேட் கணக்கு தொடங்கிய வர்த்தகர்கள் வரை பலரையும் ஈர்த்து இருக்கும் முதலீட்டு உலோகம்.

வாரன் பஃபெட்டின் கம்பெனி தங்கம் சார்ந்த முதலீடுகளைச் செய்து இருக்கிறார்கள். அப்படி என்றால் தங்கம் சார்ந்த வியாபாரத்தை, வாரன் பஃபெட் நம்புகிறார் என்று தானே பொருள்? அதை இந்த கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

அதோடு தங்கம் விலை எல்லாம் சந்தைகளிலும் சரிந்ததையும், மீண்டு வருவதையும், அதற்கான காரணங்களையும், எதிர்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகும் என்பதையும் விரிவாகப் பார்க்கப் போகிறோம். முதலில் வாரன் பஃபெட்டின் தங்கம் சார் முதலீட்டில் இருந்து தொடங்குவோம்.

வங்கிப் பங்குகள் விற்பனை
 

வங்கிப் பங்குகள் விற்பனை

வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire Hathaway) கம்பெனி, தான் வைத்திருக்கும் 62 % ஜே பி மார்கன் சேஸ் பங்குகள், 26 % வெல்ஸ் ஃபார்கோ (Wells Fargo) பங்குகளை விற்று இருக்கிறது. அதோடு பி என் சி ஃபைனான்ஷியல் சர்வீசஸ், எம் & டி பேங்க் கார்ப், பேங்க் ஆஃப் நியூ யார்க் மெலன் கார்ப், மாஸ்டர் கார்ட், விசா போன்ற கம்பெனிகளிலும் கம்பெனி வைத்திருக்கும் பங்குகளில் ஒரு கணிசமான அளவை குறைத்து இருக்கிறதாம்.

எதை வாங்கி இருக்கிறார்கள்

எதை வாங்கி இருக்கிறார்கள்

இப்படி வங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த பங்குகளை விற்ற நேரத்தில், ஒரு புதிய பங்கை வாங்கி இருக்கிறது பெர்க்‌ஷேர் ஹதவே. அந்த பங்கின் பெயர் Barrick Gold Corp. இது ஒரு தங்க சுரங்க கம்பெனி. பல ஆண்டுகளாக அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகமாகி வருகிறது.

மதிப்பீடு

மதிப்பீடு

தற்போது Barrick Gold Corp-ன் மதிப்பு 605 மில்லியன் டாலராக இருக்கிறதாம். ஆனால் வாரன் பஃபெட்டின் கம்பெனி, இந்த தங்க சுரங்க கம்பெனியின் மதிப்பீடு இன்னும் நன்றாக அதிகரிக்கும். இப்போதைக்கு இந்த கம்பெனியின் மதிப்பீடு குறைவாகவே இருக்கிறது என்கிறார்களாம் பெர்க்‌ஷேர் தரப்பினர்கள்.

ஒரு விஷயத்தில் தெளிவு
 

ஒரு விஷயத்தில் தெளிவு

வாரன் பஃபெட் கடந்த பல தசாப்தங்களாக, பங்குச் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார். பங்குச் சந்தைகளில் பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டவர், கடந்து வந்தவர். அவரே தங்கம் சார்ந்த கம்பெனியில் முதலீடு செய்து இருப்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம் தான். அவர் எப்போதுமே தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவித்ததில்லை.

பயத்தின் வெளிப்பாடு

பயத்தின் வெளிப்பாடு

பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்வது, பயத்தில் எடுக்கும் முடிவு (Act of Fear) என்கிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் வலைதள செய்திகள். ஆக வாரன் பஃபெட்டே உஷாராக தங்கத்தில் முதலீடு செய்கிறார் என்றால், நாமும் கொஞ்சம் உஷாராகிக் கொள்வது நல்லது. சரி தங்கம் வெள்ளி விலை நிலவரத்துக்கு வருவோம்.

சென்னையில் தங்கம் விலை 24 கேரட்

சென்னையில் தங்கம் விலை 24 கேரட்

நம் சிங்காரச் சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 55,760 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். 07 ஆகஸ்ட் 2020 அன்று இதன் விலை 59,130 ரூபாய் என்கிற வரலாற்று உச்சத்தில் இருந்தது. ஆக உச்ச விலையில் இருந்து 12 ஆகஸ்ட் 2020 அன்று 54,680 ரூபாய் வரை சரிந்து, மீண்டும் நேற்று 55,760-க்கு வந்திருக்கிறது 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை.

24 கேரட் பவுன் விலை

24 கேரட் பவுன் விலை

ஒரு பவுன் (8 கிராம்) 24 கேரட் தங்கத்தின் விலை, கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று, 47,304 ரூபாயாக இருந்தது. குறைந்தபட்சமாக 12 ஆகஸ்ட் 2020 அன்று 43,744 ரூபாய் வரை சரிந்தது. மீண்டும் கொஞ்சம் உயர்ந்து நேற்று 44,608 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. தங்கம் வாங்க ஏங்கிக் கொண்டிந்தவர்களுக்கு கிடைத்த சூப்பர் விலை சரிவு இது. பவுனுக்கு 3,560 ரூபாய் விலை சரிந்தது.

22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை

22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை

மெரினா கடற்கரை கொண்ட சென்னை மாநகரத்தில், 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, 51,110 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். கடந்த 07 ஆகஸ்ட் அன்று 54,200 ரூபாய் என்கிற இமாலய உச்சத்தில் இருந்தது. இந்த விலை உச்சத்தில் இருந்து திடீரென 12 ஆகஸ்ட் அன்று 50,130 ரூபாய்க்கு சரிந்தது 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை. மீண்டும் நேற்று 51,110 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது.

22 கேரட் பவுன் விலை

22 கேரட் பவுன் விலை

ஒரு பவுன் (22 கேரட்) தங்கத்தின் விலை கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று 43,360 ரூபாயாக இருந்தது. குறைந்தபட்சமாக 12 ஆகஸ்ட் 2020 அன்று 40,104 ரூபாய் வரை சரிந்தது. மீண்டும் கொஞ்சம் விலை உயர்ந்து நேற்று 40,888 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. சமீபத்தில் தங்கம் விலை கண்ட, பெரிய விலை சரிவுகளில் ஒன்று இது. ஒரு பவுனுக்கு 3,256 ரூபாய் வரை விலை சரிந்தது.

சர்வதேச தங்கம் விலை - ஒரு அவுன்ஸ்

சர்வதேச தங்கம் விலை - ஒரு அவுன்ஸ்

கடந்த 06 ஆகஸ்ட் 2020 அன்று 2,075 டாலர் வரைத் தொட்ட ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, 11 ஆகஸ்ட் 2020 அன்று 1,911 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. மீண்டும் 13 ஆகஸ்ட் அன்று 1,953 டாலருக்கு ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று 14 ஆகஸ்ட் அன்று 1,945 டாலருக்கு சர்வதேச தங்கம் விலை நிறைவடைந்து இருக்கிறது.

எம் சி எக்ஸ் தங்கத்திலும்

எம் சி எக்ஸ் தங்கத்திலும்

சர்வதேச தங்கத்தைப் போல, இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸிலும் தங்கத்தின் விலை இப்படித் தான் இறக்கம் கண்டு இருக்கின்றன. 10 கிராம் தங்கத்துக்கான அக்டோபர் மாத ஃப்யூச்சர் காண்டிராக்ட், 07 ஆகஸ்ட் அன்று அதிகபட்சமாக 56,191 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது.

எம் சி எக்ஸில் தடாலடி சரிவு

எம் சி எக்ஸில் தடாலடி சரிவு

அதன் பின், 12 ஆகஸ்ட் 2020 அன்று, அதே அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை 49,955 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. நேற்று 14 ஆகஸ்ட் 2020, இந்த தங்க காண்டிராக்டின் விலை 52,227 ரூபாய்க்கு நிறைவு அடைந்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் மருந்து

கொரோனா வைரஸ் மருந்து

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு, ரஷ்யா மருந்து கண்டு பிடித்து இருப்பதாக வந்த செய்திகள், ஒரு பாசிட்டிவான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலை இறக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் ரஷ்யாவின் மருந்து முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்துகிறதா என்பதை எல்லாம் இனி தான் நாம் பார்க்க முடியும்.

லாபத்தை வெளியே எடுத்தல்

லாபத்தை வெளியே எடுத்தல்

அதே போல, இத்தனை நாளாக போட்டி போட்டு தங்கத்தை வாங்கிக் கொண்டு இருந்த, தங்க முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், தற்போது முதலீடுகளை விற்று, வந்த லாபத்தை வெளியில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த Profit Booking நடவடிக்கைகளாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து இறக்கம் காண்கிறது எனலாம்.

எதிர்காலத்தில் எப்படி

எதிர்காலத்தில் எப்படி

தங்கத்தின் விலை அடுத்த சில வருடங்களில் ஏறுமா என்று கேட்டால் நிச்சயம் ஏறும். அது எந்த வேகத்தில் ஏறும் என்பது, அமெரிக்க அதிபர் தேர்தல், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வருவது போன்றவைகளை வைத்துத் தான் சொல்ல முடியும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். அடுத்த 12 மாதங்களில் தங்கம் விலை 2,300 டாலரைத் தொடலாம் என கோல்ட்மேன் சாக்ஸ் கணித்து இருந்ததை ஒரு முறை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price seen a big fall now recovering from its fall

The international gold price has seen a big fall from $2,075 to $1,911. Now it is recovering from its steep fall. All other gold like mcx gold and physical gold price is also recovering from its fall.
Story first published: Saturday, August 15, 2020, 14:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X