திடீர் இறக்கத்தில் தங்கம் விலை? இப்ப தங்கம் வாங்கலாமா? தங்கம் விலை நிலவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நல்ல முதலீடு எப்போதும் ஒரு பிரமாதமான வருமானத்தைக் கொடுக்கும். அப்படி, கடந்த 2019-ல் தங்கத்தை வாங்கி, சமீபத்தைய உச்சத்தில் விற்றவர்களுக்கு, தங்கம் ஒரு சூப்பர் லாபத்தை கொடுத்து இருக்கும்.

2019-ம் ஆண்டில் இருந்து நிலவி வரும் உலக பொருளாதார மந்த நிலை காரணமாக, தங்கம் விலை மெல்ல ஏற்றம் காணத் தொடங்கியது. 2020-ம் ஆண்டு, கொரோனா வைரஸ் வேறு சேர்ந்து கொண்டதால் டாப் கியரில் தங்கம் விலை அதிகரித்தது.

விளைவு: 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் 31,650 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருந்த ஆபரணத் தங்கம், இன்று 53,450 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. சுமாராக 68 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. சரி இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

வந்தாரை வாழ வைக்கும் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 53,450 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல, 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,980 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்தது. ஆனால் இன்று திடீரென ஒரு இறக்கம் கண்டு இருக்கிறது. இந்த திடீர் விலை இறக்கத்தை, எம் சி எக்ஸ் & சர்வதேச தங்க விலையிலும் காண முடிகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை போல, இந்திய மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வர்த்தகமாகும், அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலையும் கடந்த 07 செப்டம்பர் 2020 முதல் விலை அதிகரித்து வந்தது. ஆனால் இன்று, நேற்றைய குளோசிங் விலையான 51,774 ரூபாயில் இருந்து 399 ரூபாய் விலை சரிந்து (0.77 %) 51,375 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

வெள்ளி விலை நிலவரம்
 

வெள்ளி விலை நிலவரம்

எம் சி எக்ஸில் டிசம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் விலை 68,093 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் விலையாக 68,991 ரூபாயில் இருந்து 898 ரூபாய் (1.3 %) வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது.
சென்னையில் 10 கிராம் வெள்ளி விலை 680 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.

XAU USD இண்டர்நேஷனல் தங்கம் விலை

XAU USD இண்டர்நேஷனல் தங்கம் விலை

உலகில் வர்த்தகமாகும் அனைத்து தங்கத்துக்கும் அடிப்படையாக இருக்கும், சர்வதேச தங்கம் விலை, ஒரு அவுன்ஸுக்கு, இன்று 1,942 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்று 1,946 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆக எங்கு பார்த்தாலும், இது நாள் வரை விலை ஏற்றம் கண்டு வந்த தங்கம், இன்று விலை இறக்கம் கண்டு இருக்கிறது

தங்கம் விலை இறக்கத்துக்கு காரணம் என்ன

தங்கம் விலை இறக்கத்துக்கு காரணம் என்ன

யூரோ கரன்சிக்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்து இருக்கிறது. ஐரோப்பிய மத்திய வங்கி தன் வட்டி விகிதங்களைக் குறைக்கவில்லை. வட்டி விகிதம் குறைத்து இருந்தால், தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்பலாம் என முன்பே சொல்லி இருந்தோம். இந்த காரணங்களால், தங்கம் விலை சின்ன சரிவைக் காணத் தொடங்கி இருக்கிறது என மிண்ட் பத்திரிகை சொல்கிறது.

தங்கம் விலையை தாங்கிப் பிடிக்கும் காரணிகள்

தங்கம் விலையை தாங்கிப் பிடிக்கும் காரணிகள்

உலகின் மிகப் பெரிய தங்க டிரஸ்டான SPDR அமைப்பின் தங்க இ டி எஃப்-ல், ஆகஸ்ட் 26-க்குப் பிறகு, தங்க கையிருப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த டிரஸ்டின் தங்க கையிருப்பு 2.92 டன் அதிகரித்து 1,252.96 டன்னாக உயர்ந்து இருக்கிறது. இது போக, உலக பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வருவது, அமெரிக்க சீன பிரச்சனைகள் எல்லாம், தங்கத்தின் விலையை தாங்கிப் பிடிப்பதாகச் சொல்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ்.

இப்போது தங்கம் வாங்கலாமா

இப்போது தங்கம் வாங்கலாமா

உலக அளவில் பங்குச் சந்தைகளும், அமெரிக்க டாலரும் சீராக வர்த்தகமாகவில்லை. எனவே, தங்கம், ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகமாகும். உலக பொருளாதாரம் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டு இருப்பதால், தங்கம் விலை இறக்கம் காணும் போதெல்லாம் வாங்குவது அதிகரிக்கலாம். இது மீண்டும் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடு என்கிற இடத்தை நோக்கித் தள்ளும் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனம்.

அமெரிக்க டாலர் நிலை

அமெரிக்க டாலர் நிலை

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் டோவிஷ் நிலை மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சனை எல்லாமே, அமெரிக்க டாலரின் ஏற்றத்தை தடுக்கும். எனவே தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்கிற இடத்தை நோக்கி மீண்டும் நகரும் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனம். சுருக்கமாக தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்தால் விலை தானாக அதிகரிக்கத் தானே செய்யும். எனவே கோட்டக் சொல்லி இருப்பது போல, தங்கம் விலை இறக்கம் காணும் போது எல்லாம் முதலீடு செய்யலாம்.

ஜிம் ராஜர்ஸ் கணிப்பு

ஜிம் ராஜர்ஸ் கணிப்பு

சமீபத்தில், உலகின் மிகப் பெரிய கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ், எதிர்காலத்தில் தங்கம் விலை நல்ல ஏற்றம் காணும் எனச் சொல்லி இருந்தார். இந்த விலை ஏற்றத்தின் போது 10 - 15 சதவிகித விலை இறக்கத்தை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் எனவும் சொல்லி இருந்தார் என்பது, இங்கு நினைவு கூறத்தக்கது.

2,300 முதல் 3,000 டாலர் தொடலாம்

2,300 முதல் 3,000 டாலர் தொடலாம்

உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மேன் சாக்ஸ், தங்கம் விலை 2,300 டாலரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறார்கள். அதே போல பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America) கடந்த ஏப்ரல் 2020-ல், தங்கம் விலை 3,000 டாலரைத் தொடலாம் எனக் கணித்து இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், உஷாராக, விலை இறங்கும் போது எல்லாம் இன்வெஸ்ட் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price seen a fall today Could we invest in gold now?

Gold price seen a fall today. From Chennai gold price to international gold price all shown a gold price drop. Could we invest in gold now?
Story first published: Friday, September 11, 2020, 13:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X