தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு போலருக்கே! ஏன்? ஒரு பவுன் தங்கம் விலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில், ஒவ்வொரு மாதமும் சிறுக சிறுக பணத்தைச் சேமித்து, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை தங்கம் வாங்கிக் கொண்டு இருந்தோம்.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் செலவழிப்பது அதிகரித்து இருக்கிறது. சேமிப்பது சிரமமாகி இருக்கிறது. இப்போது ஒரு நடுத்தர குடும்பம், தங்கத்தை வாங்க வேண்டும் என்றால், ஒரு சில மாத சம்பளத்தை முழுமையாக கொடுத்தால் தான் ஒரு பவுன் தங்கத்தையே வாங்க முடியும் என்கிற அளவுக்கு விலை விண்ணைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது.

கடந்த 2019 முதல் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த செப்டம்பர் 2020-ல் தங்கம் விலை, தன் உச்ச விலையில் இருந்து, ஒரு நல்ல வீழ்ச்சி கண்டு இருக்கிறது. எனவே இப்போது தங்கத்தை வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு போலத் தெரிகிறது.

தங்கம் விலை உச்சத்தில் இருந்து வீழ்ச்சி
 

தங்கம் விலை உச்சத்தில் இருந்து வீழ்ச்சி

சென்னையில் கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 54,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த 03 செப்டம்பர் 2020 அன்று அதே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 53,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 48,770 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இது இரண்டுமே 07 ஆகஸ்ட் 2020-க்குப் பிறகான மிகக் குறைந்த விலை.

ரேஞ்சுக்குள்ளேயே வலம் வரும் தங்கம் விலை

ரேஞ்சுக்குள்ளேயே வலம் வரும் தங்கம் விலை

கடந்த 01 செப்டம்பர் 2020 முதல் 18 செப்டம்பர் 2020 வரையான காலத்தில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 53,200 - 54,200 ரூபாய்க்குள்ளேயே விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,770 - 49,720 ரூபாய்க்குள்ளேயே விற்பனை ஆனது.

எவ்வளவு விலை வீழ்ச்சி

எவ்வளவு விலை வீழ்ச்சி

24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலையை, 07 ஆகஸ்ட் 2020 உடன், 18 செப்டம்பர் 2020 விலையை ஒப்பிட்டால் (59,130 - 53,850) = 5,280 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையை 07 ஆகஸ்ட் 2020 உடன், 18 செப்டம்பர் 2020 விலையை ஒப்பிட்டால் (54,200 - 49,370) = 4,830 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

கமாடிட்டி உலகின் பிதாமகன் ஜிம் ராஜர்ஸ் கணிப்பு
 

கமாடிட்டி உலகின் பிதாமகன் ஜிம் ராஜர்ஸ் கணிப்பு

உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ், அடுத்து வரும் கால கட்டங்களில், தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொடலாம் என அடித்துச் சொல்கிறார். வெறுமனே வாயால் சொல்லிக் கொண்டு இருக்காமல், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து, இவர் தன் பணத்தை, தங்கத்தில் தொடர்ந்து முதலீடுச் செய்து வருவதாகவும், அவரே சொல்லி இருக்கிறார்.

வட்டி விகிதத்தால் தங்கம் விலை அதிகரிக்கும் சூழல்

வட்டி விகிதத்தால் தங்கம் விலை அதிகரிக்கும் சூழல்

அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், தன் வட்டி விகிதங்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு குறைவாகவே வைத்திருக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறது. இந்த செய்தி, வட்டி போன்ற நிலையான வருமானங்களைக் கொடுக்கும் முதலீடுகளில் இருந்து, மக்களை தங்கத்தின் பக்கம் திசை திருப்பும். எனவே தங்கத்தின் விலை அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.

உலக பொருளாதார சூழல்

உலக பொருளாதார சூழல்

Organisation for Economic Co-operation and Development என்கிற அமைப்பு, உலக பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வர பல ஆண்டுகள் தேவைப்படும் எனச் சொல்லி இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை, நிதி நெருக்கடி பிரச்சனையை விட, ஏற்கனவே பெரிதாக இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் OECD அமைப்பின் பொது செயலாளர் ஏஞ்சல் குரியா (Angel Gurría).

Geo-Political பிரச்சனைகள்

Geo-Political பிரச்சனைகள்

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான புகைச்சல் அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில் கூட, உய்கர் இஸ்லாமியர்கள் பிரச்சனை தொடர்பாக, சின் ஜியாங் பகுதியில் இருந்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு, அமெரிக்காவில் நுழையத் தடை விதித்து இருக்கிறது ட்ரம்ப் அரசு. பிரெக்ஸிட் பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சீனா பிரச்சனைக்கு இன்னும் ஒரு நல்ல தீர்வு காணப்படவில்லை.

சர்வதேச (XAU USD) தங்கம் விலை ஏற்றம்

சர்வதேச (XAU USD) தங்கம் விலை ஏற்றம்

சர்வதேச தங்கம் விலை கடந்த 01 செப் 2020 அன்று 1,970 டாலருக்கு வர்த்தகமானது.

03 செப் 2020 1,930 டாலருக்கும்,

09 செப் 2020 1,946 டாலருக்கும்,

14 செப் 2020 1,956 டாலருக்கும்,

16 செப் 2020 1,959 டாலருக்கும்,

17 செப் 2020 1,944 டாலருக்கும்,

18 செப் 2020 1,950 டாலருக்கும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக தங்கம் விலை சீராக ஏற்றம் கண்டு வருகிறது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் விலை என்ன

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் விலை என்ன

01 செப்டம்பர் 2020 அன்று 51,502 ரூபாய்க்கு நிறைவடைந்தது அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் விலை.

10 செப்டம்பர் 2020 அன்று 51,774 ரூபாய்க்கு நிறைவடைந்தது.

அதன் பின் 51,319 ரூபாய் வரை விலை சரிந்தது. இந்த இறக்கங்களுக்குப் பின், 16 செப் 2020 அன்று 51,824 ரூபாய்க்கு நிறைவடைந்தது. மீண்டும் 17 செப் 2020 அன்று 51,453 ரூபாய்க்கு நிறைவடைந்து, நேற்று (18 செப் 2020) 51,715 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக இதிலும் சீரான ஏற்றத்தைக் காண முடிகிறது.

2019 சாட்சி - தங்கம் விலை அதிகரிக்கலாம்

2019 சாட்சி - தங்கம் விலை அதிகரிக்கலாம்

பொதுவாக பொருளாதாரம் மோசமடைகிறது என்றால், தங்கம் விலை டாப் கியரில் தட்டித் தூக்கும். இதற்கு கடந்த 2019-ம் ஆண்டே சாட்சி. 2019-ம் ஆண்டில், உலக நாடுகள் பெரிய அளவில் பொருளாதார சரிவில் இல்லை. மந்த நிலையில் தான் இருந்தன. மந்த நிலைக்கே தங்கம் விலை சரமாரியாக ஏற்றம் கண்டது என்றால், தற்போது இருக்கும் சூழலில் தங்கம் விலை ஏற்றம் காணாதா என்ன? அதோடு மேலே சொன்ன வட்டி விகித பிரச்சனைகள் & ஜியோ பொலிடிக்கல் பிரச்சனைகள் எல்லாம் தங்கம் விலை ஏற்றத்தை ஊக்குவிப்பதாகவே இருக்கின்றன.

ஏன் நல்ல வாய்ப்பு

ஏன் நல்ல வாய்ப்பு

இத்தனை காரணங்கள் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்கின்றன. கடந்த 03 செப்டம்பர் 2020 முதல் 08 செப்டம்பர் 2020 வரையான நாட்களில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 53,200 - 53,320 ரூபாய்க்குள் விற்பனை ஆனது. ஆனால் கடந்த 10 செப் 2020 அன்று 53,720 ரூபாய்க்கும், 15 செப் 2020 அன்று 54,020 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஆக தங்கம் விலை மெல்ல யூடேர்ன் போட்டு அதிகரிக்கத் தொடங்கிறது. எனவே தங்கம் வாங்க விரும்புபவர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு போலத் தான் தெரிகிறது.

கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்

கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்

இத்தனை அலப்பறைகளுக்கு மத்தியிலும், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள், கிட்டத்தட்ட தன் பழைய நிலையை எட்டிப் பிடித்து இருக்கின்றன. இது தங்கத்தைன் விலை ஏற்றத்தை தடுக்கும் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். அதே போல, ஸ்டிமுலஸ் பேக்கேஜ் போன்றவைகளால், டாலர் இண்டெக்ஸ் பலவீனமடைந்து தங்கம் விலை இறக்கம் காண வாய்ப்பு இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price start to go up it may be a good chance to buy gold now why

Gold price start to go up in the last few days. This may be a good chance to buy gold in the current price. From Jim rogers to global factors are showing green signal for gold price.
Story first published: Saturday, September 19, 2020, 13:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X