தங்கம் விலையில் தடுமாற்றம்! எதிர்காலத்தில் பவுன் விலை என்ன ஆகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வீட்டில் திருமணமா? அப்படி என்றால் கட்டாயம் தங்கம் வாங்கி இருப்பீர்களே! அப்படி எல்லாம் இல்லிங்க. நான் தங்கத்தை வாங்கவே இல்லை என்று சொல்லும் இந்தியர்கள் மிக மிகக் குறைவு.

 

இப்படி தங்கம், இந்திய திருமணங்களில் முக்கிய பங்காற்றிக் கொண்டு இருக்கிறது. இந்திய குடும்பங்களில் எப்படி தங்கம் முக்கிய இடம் பிடித்து இருக்கிறதோ, அதே போல தங்கம், உலக பொருளாதாரத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் ரிசர்வ் வங்கி தொடங்கி, உலகின் பல நாடுகளின் மத்திய வங்கிகள், தங்கள் பணத்தில் ஒரு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள் என்றால் தங்கத்தின் முக்கியத்துவம் புரியும். சரி Gold Rate நிலவரத்தைப் பார்ப்போம். முதலில் சர்வதேச தங்கம் விலையில் இருந்து தொடங்குவோம்.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

இது தான் தங்கம் விலை ஏற்றத்துக்கும், இறக்கத்துக்கும் அச்சாணியாக இருக்கிறது. சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, கடந்த ஒரு வார காலத்தில் 1,770 - 1,780 டாலருக்குள்ளேயே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று அதிகபட்சமாக 1,775 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஏன் இப்படி சர்வதேச தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது?

டாலரால் அதிகரிக்கும் தங்கம் விலை

டாலரால் அதிகரிக்கும் தங்கம் விலை

பொதுவாக அமெரிக்க டாலரில் தான் சர்வதேச தங்கம் விலையை நிர்ணயிப்பார்கள். டாலர் பலவீனமாக இருப்பதும், தங்கத்தின் விலை அதிகரிக்க ஒரு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது. அது போக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து 74.5 ரூபாய்க்கு மேலே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

டாலர் Vs ரூபாய்
 

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது. 2018 கால கட்டங்களில் கூட 65 ரூபாய் வரை வலுபெற்ற இந்திய ரூபாய் மதிப்பு தற்போது மீண்டும் 74 ரூபாய் என்கிற உச்சாணிக் கொம்பில் வலுவிழந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. "அமெரிக்க டாலரால் விலை உயரும் தங்கம்..! எப்படி..?" என்கிற தலைப்பில் டாலர் எப்படி, இந்தியாவில் தங்கம் விலையை பாதிக்கிறது என விளக்கி இருக்கிறோம். அதுவும் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி

வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி

தங்கம் தான் பாதுகாப்பு என இன்னமும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் குவிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சர்வதேச அரசியல் பிரச்சனைகள், பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, நிதி ஸ்திரத்தன்மை இல்லாமை.. போன்ற பிரச்சனைகளால் மேலும் தங்கம் விலை ஏற்றம் காணவே வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

தங்கம் எவ்வளவு டாலர் வரை தொடும்

தங்கம் எவ்வளவு டாலர் வரை தொடும்

தங்கம் முதலில் 1,800 டாலரில் ஒரு சின்ன தடுமாற்றம் ஏற்படலாம். அந்த 1,800 டாலரைக் கடந்துவிட்டால் அதன் பின் 1,880 டாலரில் கொஞ்சம் தடுமாறலாம். அதையும் தாண்டிவிட்டால், தங்கம் 2,000 டாலரைத் தொடும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் கூட அடுத்த 12 மாதங்களில் தங்கம் விலை 2,000 டாலரைத் தொடலாம் எனக் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சரி எம் சி எக்ஸில் என்ன நிலவரம்?

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான, 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட்டின் விலை 47,950 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு 48,982 ரூபாயைத் தொட்டு வர்த்தகமான தங்கம், தற்போது கொஞ்சம் சரிந்து இருப்பது ஆறுதலான விஷயம் தான்.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை

தமிழகத்தின் தலை நகரமான சென்னையில், 24 கேரட்10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை பெரிய மாற்றம் இல்லாமல் 50,850 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 46,240 ரூபாய்கு விற்பனை செய்து இருக்கிறார்கள்.

விலை தடுமாறக் காரணம்

விலை தடுமாறக் காரணம்

இதுவரை தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், தங்கம் நல்ல விலை ஏற்றம் கண்டு இருப்பதால், தங்கள் முதலீடுகளை விற்று லாபத்தை பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே தங்கம் விலை ஒரு சின்ன தேக்கத்தைக் கண்டு இருக்கிறது. ஆனால் மேலே சொல்லி இருப்பது போல, தற்போது தங்கத்தைத் தவிர வேறு வழி இல்லை என்பதால், மீண்டும் தங்கத்தில் முதலீடுகள் குவியும், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price struggle to go up due to profit booking

Gold price is struggling to go up due to investors and traders are booking profit. But in future, the gold price may go up to 2,000 dollar.
Story first published: Monday, July 6, 2020, 12:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X