நவம்பர் மாத தொடக்கம் முதலே சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக உயர்வு கண்டது. இந்நிலையில் இந்த வாரம் தங்கம் விலை என்ன ஆகும்? விலை குறையுமா? உயருமா? என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்று சில்லறை விற்பனையில் 22 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் 11,720 ரூபாய்க்கும், 1 சவரன் 93,760 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் 1 கிராம் 12,786 ரூபாய்க்கும் 10 கிராம் 1,27,860 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் 1 கிராம் 9,590 ரூபாய்க்கும் 10 கிராம் 95,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்க தொடங்கியதால் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை ஏற்றம் கண்டது. எம்சிஎக்ஸ்-இல் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின்போது தங்கம் விலை 10 கிராமுக்கு 1,25,350 என்ற அளவில் வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை 2.37% உயர்ந்து 3,654.12 டாலர்களாக இருந்தது.
இந்நிலையில் இந்த வாரம் அதாவது நவம்பர் 30 - டிசம்பர் 4 வரை, தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும் என சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர். அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் வரும் டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், தங்கம் விலையில் பெரிய அளவிலான ஏற்றத்திற்கு இது ஒரு தடையாக இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஸ்பாட் மற்றும் காமெக்ஸ் தங்கம் 3,630 முதல் 3,660 டாலர் என்பது வலுவான Supportஆக இருக்கும் என்றும் இதற்கு மேல் தங்கம் விலை நிலைபெற்றால், இந்த வாரம் 3,730 -3,760 டாலர்கள் வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.எம்சிஎக்ஸ் சந்தையில் 1,21,000 ரூபாய் என்பது வலுவான Supportஆக இருக்கும் என்றும் மேல்நோக்கி செல்லும்போது 1,26,000 - 1,28,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் சொல்லபப்டுகிறது.
முதலீட்டாளர்கள் தற்போதைக்கு தங்கத்தில் பெரிய முதலீடு செய்யாமல் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்திற்காகவும் அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்காகவும் காத்திருக்கின்றனர். எனவே இந்த வாரம் தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் தான் இருக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

