இந்திய மக்களின் மொத்த கவனமும் தற்போது தங்கம் மீது தான், ஏற்கனவே தங்கம் வாங்கியவர்கள் தங்கம் விலை மீண்டும் பழைய நிலைக்கு வருமா என்றும், புதிதாக தங்கம் வாங்க திட்டமிடுவோர் தங்கம் இன்னும் விலை குறையுமா என்றும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த வார துவக்கத்தில் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உயரத் துவங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாக இந்த விலை உயர்வு தொடருமா என்பதில் பெரும் கேள்வி எழுந்த நிலையில், இதற்கு பதில் கிடைத்துள்ளது.

தங்கம் விலை இன்று சென்னை ரீடைல் சந்தையில் குறைந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 கிராம் குறைந்து 11,720 ரூபாயாக உள்ளது, இதேபோல் 18 கேரட் தங்கம் விலை 40 ரூபாய் குறைந்து 9590 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 170 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1,70,000 ரூபாயாகவும் உள்ளது.
இதேவேளையில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் 2.39% உயர்ந்து ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை 3,652.11 டாலராக உள்ளது. இதேபோல் காமெக்ஸ் டிசம்பர் 2026-ல் முடியும் பியூச்சர்ஸ் 3.23% உயர்ந்து 3,650 டாலராக உள்ளது. ஸ்பாட் சந்தையில் தங்கம் இந்த வாரத்தில் மட்டும் 3.45% உயர்ந்துள்ளது.
இது கடந்த மூன்று வாரங்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட சரிவுக்கு பின்பு தங்கத்திற்கு கிடைக்கும் முதல் வாராந்திர உயர்வாகும்.
இந்த வாரம் தங்கம் விலை சரிவு பாதையில் இருந்து மீண்டு உயர்வு பாதைக்கு திரும்ப மிக முக்கியமான காரணம் முதலீட்டாளர்களின் மனநிலை தான். அதாவது தங்கம் விலை கடுமையாக சரிந்ததால் முதலீட்டாளர்கள் Buy on Dips கொள்கையின் கீழ் தங்கம் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனாலேயே தங்கத்தின் விலை உயர்வில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது.
இதேவேளையில் இந்தியாவில் திருமண சீசன் என்பதாலும், சீனாவில் நுகர்வு அதிகரிப்பாலும் டிமாணட் அதிகரித்துக் காணப்பட்டது.
ஆனால் தற்போது இருக்கும் சிக்கல் என்னவென்றால் அமெரிக்க டாலர் மதிப்பு 22 மாத உச்சத்திற்கு அருகில் இருப்பது, அமெரிக்க அரசின் 10 ஆண்டு பத்திர முதலீட்டின் மீதான லாபம் உயர துவங்கியுள்ளது, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது ஆகிய 3 பிரச்சனைகள் தங்கம் விலை உயர்வுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
டாலர், பத்திர முதலீடு, பெட் முடிவு ஆகிய 3 நெருக்கடி சூழ்ந்திருக்கும் வேளையில், வட்டி லாபம் தராத சொத்தாக இருக்கும் தங்கம் முதலீட்டாளர்களுக்கு அவசியமில்லா சொத்தாக இருக்க வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது, இதற்கு முக்கிய காரணம் முதலீட்டாளர்கள் தங்களுடைய short பொசிஷன்களை கவர் செய்கிறார்கள் அல்லது லாபத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
எனவே முதலீட்டாளர்கள் இதை தொடர் உயர்வு பாதையாக கருதக்கூடாது என அடாசிட்டி கேப்பிடல் நிறுவனத்தின் சந்தை நிபுணர் ஜெயின் வாவ்டா தெரிவித்துள்ளார்.
இதேபோல் பெட் முடிவு, பத்திர முதலீட்டின் லாபம், டாலரின் பல மாத உயர்வு ஆகிய 3ல் ஏதேனும் மாற்றமோ அல்லது சரிவோ நடந்தால், இல்லையெனில் தங்கம் 3,750-3,800 டாலர் வரை உயர்ந்தால் மீண்டும் விற்பனை அழுத்தம் ஏற்படலாம் எனவும் கணிப்பதாக ஜெயின் வாவ்டா தெரிவித்துள்ளார்.
இதேபோல் 2027 முதல் பாதியில் 5,000 டாலரை எட்டுவது சாத்தியமில்லை என்றும், பெடரல் ரிசர்வ் வட்டி உயர்வை நிறுத்தி, டாலர் பலவீனமடைந்தால் 4,500 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தங்கம் விலை உயர்வது என்பது பெடரல் ரிசர்வின் முடிவில் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications

