Gold Price: யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை! புதிய உச்சம் தொடுமென ஆரூடம் கூறும் முதலீட்டு ஆசான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்குப் போய்விட்டது. இனி தங்கம் விலை (Gold Price) தானாக கீழே வந்துவிடும் என்று எல்லாம் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

 

ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த, உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ் (Jim Rogers) வேறு மாதிரி சொல்கிறார். இவரை கமாடிட்டி உலகின் பிதாமகன் என்று கூட செல்லமாக அழைக்கிறார்கள் இவரது முதலீட்டு மந்திரங்களை கடைபிடிக்கும் ரசிகர்கள்.

தங்கம் விலை (Gold Price) புதிய உச்சங்களை தொடும். மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர்ந்து முதலீடு செய்வார்கள் என்கிறார்.

முதலீடுகள் குவிப்பு

முதலீடுகள் குவிப்பு

அதோடு ஜிம் ராஜர்ஸ் நிற்கவில்லை. இந்த முதலீட்டு ஆசான், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து, மெல்ல தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கிறாராம். இன்னும் சில காலங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர்ந்து முதலீடு செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார் ஜிம் ராஜர்ஸ். தங்கம் விலை ஏறும் என பயங்கரமாக நம்புகிறாரே..! சரி இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை என்ன?

சென்னையில் தங்கம் விலை (24 & 22 கேரட்)

சென்னையில் தங்கம் விலை (24 & 22 கேரட்)

ஆசியாவின் மிகப் பெரிய சந்தையைக் கொண்ட சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று 53,550 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 49,090 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள்.

ஒரு பவுன் தங்கம் விலை என்ன?
 

ஒரு பவுன் தங்கம் விலை என்ன?

24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை, நேற்று 5,355 ரூபாய் மேனிக்கு, ஒரு பவுன் தங்கம் விலை 42,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் விலை நேற்று 4,909 ரூபாய் என்கிற கணக்கில், ஒரு பவுன் தங்கம் விலை 39,272 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள்.

சொற்ப ஏற்றத்தில் MCX தங்கம்

சொற்ப ஏற்றத்தில் MCX தங்கம்

இந்தியாவின் Multi Commodity Exchange சந்தையில், அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர்ஸின் விலை 51,570 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது நேற்றைய் குளோசிங் விலையான 51,453 ரூபாயை விட 117 ரூபாய் (0.23 %) விலை ஏற்றம்.

MCX தங்கம் விலை ஒப்பீடு விவரம்

MCX தங்கம் விலை ஒப்பீடு விவரம்

கடந்த 01 செப்டம்பர் 2020 அன்று 52,100 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அதன் பின் 50,362 வரை இறக்கம் கண்டு வர்த்தகமானது. மீண்டும் ஏற்றம் கண்டு 52,182 ரூபாய் வரைத் தொட்டது. ஆனால் அதே விலையில் இருந்து ஏற்றம் காண முடியாமல் இன்று 51,570 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது எம் சி எக்ஸ் தங்கம்.

XAU:USD - இண்டர்நேஷனல் தங்கம் விலை

XAU:USD - இண்டர்நேஷனல் தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று 1,944 டாலரில் வர்த்தகம் நிறைவடைந்தது. தற்போது, 1,953 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சர்வதேச தங்கம், இன்று வர்த்தக நேரம் நிறைவடையும் போது, அதன் விலை 1,959 டாலருக்கு மேல் நிறைவடைந்தால், மீண்டும் ஏற்றப் பாதைக்கு வந்ததாகச் சொல்லலாம். காரணம் கடந்த 16 செப் 2020 அன்றைய குளோசிங் விலை 1,959 டாலர்.

XAU:USD செப்டம்பர் விலை ஒப்பீடுகள்

XAU:USD செப்டம்பர் விலை ஒப்பீடுகள்

இந்தியாவின் எம் சி எக்ஸ் தங்கத்தைப் போலவே, 01 செப்டம்பர் 2020 அன்று 1,970 டாலரைத் தொட்டு வர்த்தகமான சர்வதேச தங்கம், அதன் பின் 1,930 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. மீண்டும் ஏற்றப் பாதைக்கு வந்து 16 செப் 2020 அன்று 1,959 டாலரில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று (17 செப் 2020) மீண்டும் சரிந்து 1,944 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து. இன்று 1,953 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

வேலை இழப்பு - கூடுதல் ஸ்டிமுலஸ்

வேலை இழப்பு - கூடுதல் ஸ்டிமுலஸ்

அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, 30 மில்லியன் பேர் (3 கோடி) வேலை இல்லாமல், unemployment benefits சலுகையைப் பெற்று வருகிறார்களாம். இதனால், அமெரிக்க அரசு அறிவிக்க இருக்கும் ஸ்டிமுலஸ் தொகை அதிகரிக்கலாம் என லைவ் மிண்ட் சொல்கிறது. ஸ்டிமுலஸ் தொகை அதிகரித்தால் தங்கம் விலை அதிகரிக்க உதவும்.

வட்டி விகிதத்தால் அடி வாங்கும் பாண்டுகள்

வட்டி விகிதத்தால் அடி வாங்கும் பாண்டுகள்

அமெரிக்கா, தன் வட்டி விகிதத்தை இப்போதைக்கு அதிகரிக்காது என ஃபெடரல் ரிசர்வே சொல்லி இருக்கிறது. எனவே குறைவான வட்டி விகிதம், பாண்டுகளின் வருமானத்தைக் குறைக்கும். இது தங்கத்தை நோக்கி முதலீட்டாளர்களைத் தள்ளும். முதலீட்டாளர்கள், பணவீக்கத்தையும், கரன்சி மதிப்பு குறைவையும் சமாளிக்க தங்கத்தில் முதலீடு செய்வார்கள். மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தடுமாறும் அமெரிக்க & ஐரோப்பிய சந்தைகள்

தடுமாறும் அமெரிக்க & ஐரோப்பிய சந்தைகள்

நேற்று (17 செப்டம்பர் 2020, வியாழக்கிழமை) அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 0.47 % இறக்கம் கண்டு இருக்கிறது. எஸ் & பி 500 சந்தை 0.84 % சரிந்து இருக்கிறது. நாஸ்டாக் சந்தை 1.27 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
லண்டனின் எஃப் டி எஸ் இ 0.47 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.69 % சரிவைக் கண்டது. ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.36 % இறக்கம் கண்டு இருக்கிறது. இது தங்கத்துக்கு வழு சேர்க்கும் காரணியாக இருப்பதாகச் சொல்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ்.

விலை இறங்கும் போது வாங்குங்க

விலை இறங்கும் போது வாங்குங்க

உலகின் மிகப் பெரிய தங்க இ டி எஃப் திட்டமான SPDR ETF-ன் தங்க ஹோல்டிங்ஸ் 1,247.56 டன்னாகவே இருக்கிறது. மாற்றம் இல்லை. ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித பேச்சுக்கள், தங்கத்தின் விலையை அதிகரிக்க ஊக்குவிக்கும் விதமாகத் தான் இருக்கிறது. எனவே, தங்கத்தின் விலை குறையும் போது எல்லாம், தங்கத்தை வாங்கலாம் எனச் சொல்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ் கம்பெனி. இதைத் தான் ஜிம் ராஜர்ஸும் சொல்லி இருக்கிறார். தங்கத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price will go up Jim rogers is extremely bullish on gold

Gold price will go up in the upcoming days. The commodity investor Jim rogers is extremely bullish on gold and silver.
Story first published: Friday, September 18, 2020, 12:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X