தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம், இன்று விலை குறைந்துள்ளது. உலக சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு முக்கிய காரணம். முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 295 ரூபாய் குறைந்து 11,420 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 2,360 ரூபாய் விலை சரிந்து 91,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த திங்கள் ,செவ்வாய் என தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாயும், சவரனுக்கு 2000 ரூபாயும் விலை உயர்ந்தது. ஆனால் ஒரே நாளில் 295 ரூபாய் விலை சரிந்துவிட்டது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 12,458 ரூபாய்க்கும் 10 கிராம் 1,24,580 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 9,345 ரூபாய்க்கும் ஒரு சவரன் 74,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 165 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 10000 ரூபாய் விலை சரிந்து 1.65 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து கிராமுக்கு 260 ரூபாயும் கிலோவுக்கு 2.60 லட்சம் ரூபாயும் விலை குறைந்துள்ளது.
அமெரிக்க பணவீக்க தரவுகள் இன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது. இதில் பணவீக்கம் உயர்ந்துள்ளதா அல்லது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறதா என்பதை பொறுத்து தான் அடுத்த வாரம் நடக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகித முடிவுகள் எடுக்கப்படும். எனவே பணவீக்கம் உயர்ந்து தான் இருக்கும் என்கிற கணிப்பிலும் மத்திய வங்கி மீண்டும் வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பிலும் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று வருகின்றனர். இதனாலேயே தங்கம் விலை இன்று சரிந்துள்ளது.
தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,548 டாலர்களாக இருக்கிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 40 டாலர்களாக விலை சரிந்துவிட்டது. இனிவரும் நாட்களில் தங்கம் விலை ஏறுமா அல்லது சரியுமா என்பதற்கான சிக்னல் இன்று மாலை வெளியாகும் அமெரிக்க பணவீக்க தரவுகள் மூலம் தெரிய வந்துவிடும். எனவே இன்றும் நாளையும் தங்கம், வெள்ளி முதலீட்டாளர்களுக்கு முக்கிய நாளாக அமைந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

