அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் டிரம்புக்கு எதிராக அமைந்ததால் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. இன்றும் அதே போல விலை உயருமா என மக்கள் அச்சமடைந்த நிலையில் தங்கம், வெள்ளி விலையில் ஒரு அதிசயம் நடந்ததுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 245 ரூபாய் விலை குறைந்து 13,140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரண தங்கம் 1960 ரூபாய் விலை குறைந்து ஒரு சவரன் 1,05,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் கடந்த வாரம் பெரும் சரிவை சந்தித்து இந்த வாரம் கடுமையான ஏற்றத்தை கண்டது. நவம்பர் மாதம் தொடங்கி இந்த 6 நாட்களில் 4 நாட்கள் தங்கம் விலை உயர்ந்துள்ளது, ஒரு நாள் விலை சரிந்துள்ளது. அப்படி பார்த்தால் நவம்பர் 1 முதல் நேற்று வரை 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 655 ரூபாய் விலை உயர்ந்தது, சவரனுக்கு 5,240 ரூபாய் விலை கூடியது. நல்வாய்ப்பாக இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
நாளை மறுதினம் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. நாளையும் தங்கம் விலை குறைந்தால் தீபாவளிக்கு குறைந்த விலைக்கே தங்கம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். இருந்தாலும் இது உலக சந்தை நிலவரங்களை பொறுத்தே அமையும்.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,335 ரூபாய்க்கும் 10 கிராம் 1,43,350 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,760 ரூபாய்க்கும் ஒரு சவரன் 86,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் தடாலடியாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து 205 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை சரிந்து 2.05 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையை விட கிலோவுக்கு 2.25 லட்சம் ரூபாய் விலை சரிந்து 2 லட்சமாக தான் இருந்தது. ஆனால் அமெரிக்க தேர்தல் முடிவு வெளியானதை அடுத்து வெள்ளி விலை உயர்வு கண்டது, இன்று விலை குறைந்துவிட்டது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,040 டாலர்களாக குறைந்துள்ளது. நேற்று 4100 டாலருக்கு மேல் இருந்து தங்கம் விலை குறைந்துள்ளது.இதனால் தான் தமிழ்நாட்டிலும் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்துள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

