தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த நான்கு நாட்களாக, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பட்ஜெட் வர்த்தக நாள் உட்பட கடுமையான சரிவை சந்தித்துள்ளன. இந்த 4 நாள் சரிவில் தங்கம் விலை 30000 ரூபாயும், வெள்ளி விலை 1.75 லட்சம் ரூபாயும் குறைந்து முதலீட்டாளர்களை பயமுறுத்தியுள்ளது.
இப்படியிருக்கும் வேளையில் புதிய திருப்பம் சந்தையில் உருவாகியுள்ளது. இதை கவனிக்காமல் கையில் இருக்கும் தங்கத்தையும், வெள்ளியை விற்பனை செய்தால் பெரிய இழப்பை சந்திக்க கூடும். உஷாரா இருந்து விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க பாஸ்..

MCX சந்தையில் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.1,80,048 என்ற உச்சத்தில் இருந்து ரூ.34,000 குறைந்து தற்போது ரூ.1,46,000 அருகே வர்த்தகமாகி வருகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.4,20,048 என்ற உச்சத்தில் இருந்து ரூ.1.75 லட்சம் குறைந்து ரூ.2,45,000 அருகே ஊசலாடுகிறது.
இந்த சரிவு கடந்த வாரம் வியாழக்கிழமை உச்சத்தை தொட்ட பிறகு தொடங்கியது. சந்தை ஆய்வாளர்கள் இன்றைய வர்த்தகத்தை "டெட்-கேட் பவுன்ஸ்" (dead-cat-bounce) என்று அழைக்கின்றனர். அப்படியானால் முதலீட்டு சந்தையில் Dead Cat Bounce என்பது ஒரு பங்கு அல்லது ஒரு சொத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடையும் போது, இடையில் ஏற்படும் ஒரு தற்காலிகமான விலை உயர்வைக் குறிக்கிறது.
இப்படி கூறும் அளவுக்கு முதலீட்டு சந்தையில் இன்று என்ன நடந்தது என்பது தான் முக்கியமான கேள்வி.
தொடர்ந்து சரியும் போக்கையே கொண்டு இருந்த தங்கம் - வெள்ளி, இன்றைய வர்த்தகத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில் ஏப்ரல் மாதத்தின் தங்கம் ஃபியூச்சர்ஸ் விலை ரூ.1,37,065 என்ற குறைவான அளவை பதிவு செய்தது. ஆனால் மதியம் 3:15 மணியளவில் தொடர்ந்து அதிகரித்த முதலீடுகள் மூலம் தற்போது ரூ.1,47,500 அருகே உயர்ந்தது. இது தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள மீட்சி பயணத்தின் துவக்கமாக பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் 1 டிராய் அவுன்ஸ் தங்கம் விலை விலை 4402.38 டாலர் வரையில் சரிந்து 4885.08 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது 4757 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
இதேபோல் வெள்ளி ஸ்பாட் விலையும் ஒரு அவுன்ஸ் 71.40 டாலர் வரையில் குறைந்து 87.95 டாலர் வரையிலும் உயர்ந்துள்ளது. தற்போது தொடர்ந்து 84 டாலர் அளவில் வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் பதிவான அதே Dead Cat Bounce நிலை சர்வதேச ஸ்பாட் சந்தையிலும் உருவாகியிருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கம் - வெள்ளி முதலீடுகளை விற்காமல் காத்திருந்தால் லாபம் கிடைக்கும். மேலும் இந்த சரிவு நிலை மேம்பட 100-க்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதேபோல் இதன் விலை உயர்வதற்கு முக்கியமான காரணம் சந்தையில் உருவாக வேண்டும். இதற்கு டிரம்ப் தான் மனசு வைக்க வேண்டும் என கிண்டலடித்து வருகின்றனர்.
இதேபோல் சர்வதேச சந்தையில் COMEX தங்கம் 4450 டாலருக்கு கீழும், வெள்ளி விலை 70 டாலருக்கு கீழும் முடிவடையும் வரை "விலை குறையும் போது வாங்கும்" (buy-on-dips) உத்தியை தொடரலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் தொடர் சரிவில் இருக்கும் தங்கம் வெள்ளி விலையில் ஏற்பட்டு உள்ள சிறிய மீட்சி மகிழ்ச்சியான விஷயம் தான், ஆனால் இந்த திடீர் உயர்வு, மொத்த சரிவையும் மீட்டு அதன் உச்ச நிலைக்கு கொண்டு செல்லாது என நிபுணர்கள் முதலீட்டாளர்களை எச்சரிக்கின்றனர்.
இனி வரும் நாட்களில் தங்கம் - வெள்ளியின் ஆதரவு நிலைகளுக்கும் உச்சத்துக்கும் இடையே இடைவெளி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கணித்துள்ளனர்.
எனவே முதலீட்டாளர்கள் தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் தங்கம் - வெள்ளியில் எவ்விதமான புதிய பொசிஷனையும் எடுக்க வேண்டாம் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். இதேபோல் தற்போது பொசிஷன் வைத்திருப்பவர்கள் லாபம் அல்லது நஷ்டத்தை பதிவு செய்து வெளியேறுவது நல்லது. சரியான என்டரி கிடைக்கும் போது முதலீடு செய்ய நுழையலாம்.
இதில் இருந்து சாமானிய மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், தங்கம், வெள்ளி விலை குறையும் போது பயப்படாமல் நீண்ட கால அடிப்படையில் சிறிது சிறிதாக வாங்கலாம். குறுகிய கால முதலீட்டுக்கு தற்போதைய சந்தை சூழ்நிலை ஏதுவாக இல்லை.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications