முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் 31, 2024 ம் ஆண்டுடன் முடிந்த நிதியாண்டிற்கு டிவிடெண்டாக ஒரு பங்கிற்கு ரூ.10 வழங்குவதாகத் திங்கள் கிழமை அறிவித்துள்ளது. டிவிடெண்ட் எந்த தேதியிலிருந்து வழங்கப்படும் என்பது குறித்த தகவலை நிறுவனம் பின்னர் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் ஏற்கனவே 9 ரூபாய் ஈவுத்தொகை வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் ரூ.10 அறிவிக்கப்பட்டு முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியுள்ளார் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மார்ச் காலாண்டில் லாபத்தில் ஓரளவு சரிவு இருந்தாலும், டிவிடெண்ட் தொகையை அதிகரித்து வழங்குவது நிறுவனத்தின் நிதி நிலை வலுவாக இருப்பதையே காட்டுகிறது.

இந்த டிவிடெண்ட் வழங்குவது, நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குதாரர்களின் அடுத்த கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. டிவிடெண்ட் அறிவிப்பு மகிழ்ச்சியான செய்தி என்றாலும், நிறுவனத்தின் லாபத்தில் 2% சரிவு ஏற்பட்டுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒருங்கிணைந்த லாபம் 2% குறைந்து ரூ.19,299 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் லாபம் குறைந்திருந்தாலும், வருவாய் 11% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2.16 லட்சம் கோடியாக இருந்த செயல்பாட்டு வருவாய், இந்த ஆண்டு 11% அதிகரித்து ரூ.2.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
EBITDA அளவு 14% அதிகரித்து ரூ.47,150 கோடியாக உயர்ந்துள்ளது, லாப விகிதமும் 0.5 சதவிகிதம் அதிகரித்து 17.8% ஆக உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்: மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் ஒருங்கிணைந்த லாபமாக ரூ.2,698 கோடியைப் பெற்றுள்ளதாகத் திங்கள் கிழமை வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ.61,559 கோடியாக இருந்த ஆப்ரேட்டிங் வருவாய், மார்ச் 2024 காலாண்டில் 9.8% அதிகரித்து ரூ.67,610 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே மார்ச் காலாண்டில் ரூ.2,415 கோடியாக இருந்த லாபத்துடன் ஒப்பிடும்போது 11.7% உயர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க விதமாக, நிறுவனத்தின் வருடாந்திர லாபம் முதன் முதலாக ரூ.10,000 கோடி என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது சாதனைப் படைத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ: ஆகாஷ் அம்பானி தலைமையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் லாபம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகத் திங்கள் கிழமை காலாண்டு முடிவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் ஜியோவின் லாப அளவுகள் 13% அதிகரித்து ரூ.5,337 கோடியாக உள்ளது. இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.25,959 கோடியாக உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications