இந்தியாவில் கடந்த ஒரு வருடமாகக் கொரோனா தொற்று இருக்கும் நிலையில், ரீடைல் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு எப்படியாவது பொருட்களைக் கொண்டு சேர்த்தே ஆக வேண்டும் என்ற இலக்கில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது.
இதனால் நாட்டில் பல ரீடைல் வர்த்தக நிறுவனங்கள் இதுநாள் வரையில் ஆன்லைன் வர்த்தகம், ஹோம் டெலிவரி ஆகியவற்றில் இறங்காமல் இருந்தோர் தற்போது ஹோம் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களைப் பிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது.
பியூச்சர் குரூப்-ன் 2 மணிநேர டெலிவரி
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது வர்த்தகத்தை விற்பனை செய்ய முடிவு செய்த பியூச்சர் குரூப்-ன் பிக் பஜார் தற்போது நாடு முழுவதும் இருக்கும் தனது ரீடைல் விற்பனை கடைகளை வைத்து 2 மணிநேரத்தில் டெலிவரி செய்யும் புதிய சேலை அறிமுகம் செய்துள்ளது.
பிக் பஜார் மாஸ்
இந்த அறிவிப்பால் வர்த்தகத்தை இழந்து தவித்து வந்த பிக் பஜார் தற்போது ஒரு நாளுக்கு 55000 முதல் 60000 ஆர்டர்களை ஆன்லைன் வாயிலாகப் பெறுவதாகவும், அடுத்த சில மாதத்தில் மொத்த வர்த்தகத்தில் 40 சதவீதம் வரையில் ஆன்லைன் ஆர்டர் - ஹோம் டெலிவரி சேவை பிரிவில் பெறும் என நம்புகிறது.
சூப்பர்மார்கெட் நிறுவனங்கள்
இதேபோல் பிற சூப்பர்மார்கெட் நிறுவனங்களான டிமார்ட், மோர் ரீடைல், டாடாவின் ஸ்டார் பஜார் ஆகிய நிறுவனங்களும் ஆன்லைன் வாயிலாக ஆர்டர்களைப் பெற்று ஹோம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது. குறிப்பாகப் பெரு நகரங்களில் மக்கள் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவையைப் பெறுகின்றனர்.
ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
ஆனால் சூப்பர்மார்கெட்-ஏ இல்லாமல் இருக்கும் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் ஹோம் டெலிவரி சேவை பிரிவில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் ஜியோமார்ட் தனது வர்த்தகத்தை மளிகை பொருட்கள், காய்கறிகள், உணவு பொருட்கள் பிரிவில் இருந்து துவங்கி பெரும் வெற்றியை அடைந்துள்ளது.
ஜியோமார்ட்-ன் வெற்றி
பொதுவாக ஆன்லைன் வர்த்தகம் மற்றும் டெலிவரி சேவையில் மளிகை பொருட்கள், காய்கறிகள், உணவு பொருட்கள் தான் மிகவும் கடினமானது. ஆனால் அதில் ஜியோமார்ட் துவக்கத்திலேயே வெற்றி கண்டுள்ள நிலையில் பிற பிரிவுகளில் வேகமாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
பிக் பேஸ்கட் ஆதிக்கம்
இந்நிலையில் ஜியோமார்ட் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான டாடாவின் பிக் பேஸ்கட், பிளிப்கார்ட் சூப்பர்மார்கெட், அமேசான், குரோபர்ஸ் ஆகிய நிறுவனங்களும் பெரிய அளவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இதில் பிக் பேஸ்கட் தினமும் 2.83 லட்சம் ஆர்டர்களைப் பெற்று இப்பிரிவு வர்த்தகத்தில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications