இன்றைய புவிசார் அரசியல் பதற்றத்தின் மத்தியில் ஒரு நாட்டின் உண்மையான வலிமை அதன் ராணுவ பலத்தில் மட்டுமல்ல, அதன் எனர்ஜி கையிருப்பிலும் அடங்கியுள்ளது. போர் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலி பாதிப்புகள் ஏற்படும் போது, கச்சா எண்ணெய் சேமிப்பு என்பது வெறும் இருப்பு அல்ல. அது நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் ஒரு முக்கிய கேடயம்.
அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற வல்லரசுகள் தங்களின் மூலோபாய எண்ணெய் கையிருப்புகளை (SPR) பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு இந்த எரிசக்தி பாதுகாப்பு எவ்வளவு முக்கியம்? சர்வதேச போட்டியில் இந்தியா தனது கச்சா எண்ணெய் கையிருப்புகளை எவ்வாறு கையாண்டு வருகிறது? வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா தற்போது எந்த இடத்தில் நிற்கிறது. வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

உலகப் பொருளாதாரத்தின் உயிர் நாடியாக திகழும் கச்சா எண்ணெய், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதட்டங்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற மிக முக்கியமான கடல் வழி பாதைகளில் ஏற்பட்டுள்ள முடக்கம், உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இத்தகைய நெருக்கடி காலங்களில், தடையின்றி எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய நாடுகளின் எண்ணெய் கையிருப்புகள் கைகொடுக்கின்றன.
சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) விதிகளின்படி, எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு தேவையான கையிருப்பை வைத்திருக்க வேண்டும். தரவுகளின் படி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா, சுமார் 415.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை சொந்தமாக வைத்துள்ளது. இது தவிர தனியார் நிறுவனங்களிடம் 439.3 மில்லியன் பேரல்கள் வணிக ரீதியான கையிருப்பு உள்ளது. ஆக மொத்தத்தில் சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் கையிருப்பு வைத்திருக்கும் முதல் நாடாக உள்ளது.
உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?
உலகின் மிகப்பெரிய நுகர்வோர்களில் ஒன்றான சீனா, சுமார் 1.2 பில்லியன் பேரல் கச்சா எண்ணெயை சேமித்து வைத்துள்ளது. இது அவர்களின் 3 முதல் 4 மாத தேவைக்கு ஈடு கொடுக்கும் என கூறப்படுகிறது.
ஜப்பானை எடுத்துக் கொண்டால், அரசாங்க மற்றும் தனியார் சேமிப்பு என மொத்தம் 470 மில்லியன் பேரல் கையிருப்பை வைத்துள்ளது. இது சுமார் 146 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜப்பானும் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி சுமார் 177 மில்லியன் பேரல் கையிருப்புடன் எந்நேரமும் சந்தையில் விநியோகிக்க தயாராக உள்ளது. பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும் தங்கள் சட்ட விதிகளின்படி, முறையே 120 மில்லியன் பேரல்கள் மற்றும் 76 மில்லியன் பேரல்கள் என குறிப்பிட்ட காலத்திற்கு தேவையான கையிருப்பை தொடர்ந்து பராமரித்து வருகின்றன.
இங்கிலாந்தை பொறுத்த வரையில் 38 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் 30 மில்லியன் பேரல் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் பொருட்களையும் கொண்டுள்ளது. கனடாவை பொறுத்த வரையில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக இருப்பதால், பெரிய அளவிலான கையிருப்பை பராமரிக்கவில்லை.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் தற்போதைய பதற்றத்தால் தினசரி சுமார் 15 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் 4.5 மில்லியன் பேரல் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில நாடுகள் தங்கள் உற்பத்தி திறனை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இக்கட்டான சூழலை சமாளிக்க, சர்வதேச எரிசக்தி முகமை, ஜி7 நாடுகள் உட்பட அனைத்து நாடுகளையும் கையிருப்பில் உள்ள எண்ணெயை சந்தையில் விடுவிக்க வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் நிலையை பார்க்கும் போது சமீபத்திய அரசாங்க அறிக்கையின் படி, இந்தியாவிடம் தற்போது 250 மில்லியன் பேரலுக்கும் அதிகமான (சுமார் 4,000 கோடி லிட்டர்) கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கையிருப்பில் உள்ளன. இது இந்தியாவின் 7 முதல் 8 வாரங்களுக்கான எரிசக்தி தேவையை நிறைவு செய்யும். இந்த இருப்புகளானது மங்களூரு, படூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள நிலத்தடி குகைகள் மற்றும் மேல்நிலை தொட்டிகள் மூலம் இந்த எண்ணெய் சேமிக்கப்பட்டு, நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு 27 நாடுகளிடம் மட்டுமே எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியா, இன்று சுமார் 40 நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது. மேலும் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் வெறும் 40% மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. மீதமுள்ள 60% ரஷ்யா, மேற்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து வருவதால், வளைகுடா நாடுகளின் விநியோக சங்கிலி பாதிப்பு இந்தியாவுக்கு ஓரளவிற்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!



Click it and Unblock the Notifications